Friday, 30 December 2016

எல்லே இளம்கிளியே


                     எல்லே இளம்கிளியே

எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?

சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்

வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்

வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.


   விளக்கம்


 ஏய், இளம் கிளியே, இன்னும் உறங்குகிறாயே, உனக்காக நாங்கள் எல்லாம் 

இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படி எல்லாம் அழைத்தும் இன்னும் 

உறங்குகிறாய். என்று தோழிகள் சற்று கடுமையாகவே அழைத்தனர்.அப்போது 

அவள் ஏன் இப்படி கத்துகிறீர்கள், இதோ வந்துவிட்டேன். என்று அவளும் 

கோபமாக கத்துகிறாள்.


 உடனே தோழிகள், உன் வார்த்தை நன்றாக இருக்கிறதே, இவ்வளவு நேரம் 

நாங்கள் உன்னை எழுப்ப கத்திக்கொண்டு இருக்கிறோம். நீ எங்களை 

கோபிக்கிறாயே என்று சிடுசிடுத்தனர். சரி சரி விடுங்கள் எனக்கு பேச 

தெரியவில்லை, நீங்களே திறமைசாலிகளாக இருங்கள், நான் 

ஏமாற்றுக்காரியாக இருந்துவிட்டுப்போகிறேன். அடியேய் நாங்கள் முன்னமே 

எழுந்து வந்து உன்னை எழுப்ப வேண்டும், அப்படி என்ன நீ பெரிய ஆளா??? 

எங்களிடம் இல்லாத சிறப்பு உன்னிடம் என்ன?? அவளும் விடுவதாக 

இல்லை,, அவளும் வாயாடி போலும்,, ஏய் என்ன என்ன,, என்னவோ நான் 

மட்டும் எழாதது போல் பேசுகிறீர்கள்,எல்லோரும் எழுந்து வந்துவிட்டீர்களா? 

என்கிறாள். உடனே தோழிகள் நீயே வந்து இங்கு இருப்பவர்களை எண்ணிப் 

பார்த்துக்கொள். வலிமை பொருந்திய யானையை அழித்தவனும், 

வேட்டையாடும் திறன் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி 

வாழ்த்தி பாட போகனும் சீக்கிரம் வா,,

(தோழியை எழுப்பும் பாடல் இத்துடன் நிறைவு) 




17 comments:

  1. அழகான பாடல்... ரசித்தேன்...

    ReplyDelete
  2. பாடலையும், கோலத்தையும் ரசித்தோம்.

    ReplyDelete
  3. விளக்கத்துடன் பாடலும் கோலமும் சிறப்பு.

    ReplyDelete
  4. பாமரனும் புரிந்தேன்

    ReplyDelete
  5. இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

    எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
    http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    ReplyDelete