Saturday 13 February 2016

ஒற்றை ரோஜா

                                            மகிழ்ச்சியான காதல் கவிதைகள் க்கான பட முடிவு

நட்புகள் எல்லோரும்,  இன்று காதலர் தினம்,  பதிவு ஒன்னும் எழுதலையா என்றனர்.

இருக்குற வேலையில் இப்பவெல்லாம் கணிப்பொறி முன் அமர்ந்தாலே ,,,

வேற வேலை இல்லையா என்று சத்தம் வருகிறது,,.

ஆனாலும் அவசர அவசரமாக நாலு வரி எழுதிப்போகிறேன்,,,


அழகிய மாலை நேரம்

அவன் வந்தான்

நேற்று உன்னைப் பார்க்க வந்தேன்

நீ இல்லையே,

ஊருக்குச் சென்றேன்

ம்ம்

என்ன 

அது வந்து,,

இது உனக்காக வாங்கி வந்தேன்

பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்தான்

பாடம் ஆகிப் போன 

ஒற்றை சிவப்பு 

ரோஜா,,

இது என்ன இப்படியிருக்கு

நேற்று வாங்கியது

ஏன் இன்று வாங்கினால் என்னவாம்

இல்லை நேற்று தான் வாங்கனும்

இன்று வாங்கினாலும் சம்மதம் தான்

சம்மதம் ன்னா

ம்ம்,,,

இது எப்புடி,,,,,
                                                      ரோஜா பூ க்கான பட முடிவு
படங்கள் இணையத்தில் இருந்து,,,

Tuesday 9 February 2016

யாந்துஞ் சலமே,,,,,


                          மயிலின் கால்கள் க்கான பட முடிவு
 இலக்கியங்கள் மக்களின் வாழ்வியலோடு இயைந்த ஒன்று, சங்க இலக்கிய குறுந்தொகைப் பாடல் ஒன்று இப்படிச் சொல்கிறது,,

கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே
எம்மி லயல தேழி லும்பர்
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
அணிமிகு மென்கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.
         
                                         குறுந்தொகை
                                         பாடல் எண் 138
                                         கொல்லன் அழிசி
                                         மருதத்திணை


         கொன்னூர் துஞ்சனும் யாந்துஞ் சலமே
         எம் இல் அயலது ஏழில் உம்பர்
         மயிலடி இலைய மா குரல் நொச்சி
         அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
         மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.

 (இப்படியும் பிரித்து பார்க்கலாம் என,,)

  முதல்நாள் உரிய இடத்தே தலைவன் வருவான் என எதிர்பார்த்து அவன் அன்று வரவில்லை. அடுத்த நாள் அவன் வரும்  போது, நேற்று வருவீர் என்று எதிர்பார்த்து தலைவி தூங்கவில்லை என்பதைத் தலைவன் கேட்குமாறு, தலைவி சொல்வதைப்போல் தோழி சொன்னது,,,

    ஊர் முழுக்க தூங்கியது. நான் மட்டும் தூங்கவில்லை. என் வீட்டிற்கு அருகில் உள்ள உயர்ந்த ஏழில் குன்றத்தின் அருகில் உள்ள, மயிலின் கால்களைப் போன்ற இலைகளையுடைய நொச்சி மரத்தின் பெரிய கொத்துக்களாக உள்ள, நீலமணியின் நிறத்தை ஒத்த மலர்கள், மென்மையாகக் கிளைகளில் இருந்து உதிர்வதைக் கேட்டபடியே படுத்திருந்தேன்.
   
சொல் விளக்கம் -

கொன்னூர் - (பரிய ஊர் ) ஊர் முழுக்க

துஞ்சினும் - தூங்கினாலும்

யாந்துஞ்சலமே - நான் தூங்கவில்லை

எம் இல் அயலது - என் வீட்டிற்கு அருகில்

ஏழில் உம்பர் - உயர்ந்த ஏழில் மலையில் மேலுள்ள

( ஏழில் என்பது ஒரு மலை. இது மன்னன் நன்னன் என்பவனுக்குரியது)

மயிலடி இலைய - மயிலின் அடியைப் (கால்களைப்) போன்ற இலைகளை உடைய

மா குரல் - கருமையான அல்லது பெரிய குலைகள்

நொச்சி - நொச்சி

அணிமிகு - மிகவும் அழகான 

மென் கொம்பு - மெல்லிய கிளைகள்

ஊழ்த்த - உதிர்த்த 

மணி மருள் - நீலமணியைப் போன்ற

பூவின் பாடு - பூக்கள் விழுவதைக்

நனி கேட்டே -  மிகக் கேட்டவாறு 


                                                              நொச்சி பூ க்கான பட முடிவு
மயிலின் கால்கள் க்கான பட முடிவு

படங்கள் இணையத்திலிருந்து,,


Friday 5 February 2016

என் இதய சிம்மாசனத்தில்,,,,,



                                                  ஏன் இந்த மாற்றம்
 
என்னவனே
என் இதய சிம்மாசனத்தில்
சுகமாய் வாழ்பவனே
என் சோகத்தைக் கேட்டு
சோகமே அழுகிறதடா,,,
உன் நினைவுகள் தந்த
கற்பனைக் கனவுகளில் திரையிட்டு
காலங்கள் கடத்துகின்றேன்
நம் காதலை வாழ வைக்க,,
நிமிர்ந்து பார்க்க
இருளில் தெரிகிறது உன் உருவம்.
அறை முழுவதும் உன் குரல்கள்
எப்பவும் போல் ஓங்கி ஒலிக்கின்றன.
இமைகள் மூடினால்
இமையோரம் உன் நினைவு பிசுபிசுப்பு
உறங்கிடவும் முடியவில்லை
கனவிலும் உன் நினைவுகள்.
உதறி எழுந்தேன்
கதறி அழ,,
கட்டிலில் ஆழ்ந்து உறங்கும்
உன் சாயலைக் கண்டதும்
கசக்கி எரிந்தேன் கனவையும்
எதிர்பாரா இடைவெளி
உனக்கும் எனக்குமாய்,,,,,,
கரம் பிடித்து வந்தவளின்
காவலனே
உன்னைவிடவும் வேறொருவன்
இவ்வுலகத்தில் எனக்குண்டோ
என்னைப் பற்றி நான் என்ன நினைத்தாலும்
உனக்காக இறங்கிவந்தேன்
உன்னையே பற்றியதால்
காரணங்கள் பல
நீ
கூறியும் கூறாமலும்
என்னை மறுத்துவிட்டு போனாலும்
உந்தன் கபட உணர்வுகளால்
உன்னால் ஒதுக்கப்பட்ட இவள்
காத்திருக்கிறாள்
உன்னை வரவேற்க
இல்லத்திலும்
உள்ளத்திலும்,,,

சரி, பொங்கல் விடுமுறை முடிந்து பதிவு வெளியிட முடியாத படி பல வேலைகள், இப்போ எல்லாம் முடிந்தது, இது உங்களுக்காக பொங்கல் பதிவாக வெளியிட சேகரித்தவை,,,,

                          
             
நான் பணிபுரியும் கல்வி நிறுவனத்தில் பொங்கல் வைத்தபோது,,
                                                                                                                 

மாணவிகள் கை வண்ணக் காவியங்கள்,,


முயற்சித்தேன் டீ வடிகட்டியில் கோலம் போட
                                                                                              நல்லா இருக்கா,,,


உங்களுக்கு தேரிந்தவர் தான் ,,,,,,,
                                                             
                                                               பள்ளியில் பொங்கல் கொண்டாடத் தான் இப்படி



இவங்களும் தான்,,,,






                                                                                                                   
                                               
                                                      ரோஜா க்கான பட முடிவு
                                                               

                                            நன்றி