Thursday, 5 May 2016

கை நிறைய சம்பளம்

                                                கை நிறைய சம்பளம்

என்ன வேலைன்றத அப்புறம் சொல்கிறேன். முதல்ல சம்பளம் எவ்வளோ தெரியுமா??

கேட்டுக்க,

மாதச்சம்பளம் ரூபாய்  50,000.00

வேலைக்கு வர நாளுக்கு 2,000.00

செக்ரட்டரி வச்சுக்க இதர செலவுக்கு 45,000.00

(நீ யார செகரட்டரியா வைக்கிறன்னு கூட யாருக்கும் சொல்ல வேண்டாம்)

நீ வேலைக்கு போகும் போது ட்ரெய்ன்ல போனா ஃபர்ஸ்ட் க்ளாஸ் ட்ராவல்.
கார்ல போனா கீலோ மீட்டருக்கு 16 ரூபாய்,

சம்சாரத்தையும் கூட்டிக்கிட்டுப் போகலாம்.

உனக்கு ஒரு மொபைல், ஒரு லேன்ட் லைன் போன் ஃப்ரீ, எவ்வளவு வேணும்னாலும் பேசிக்கலாம்.

உனக்கு கார் வாங்க ரொக்கமா 4 லட்சம்,,

அய்யோ அய்யோ திருவிளையாடல் தருமி போல் எனக்கில்லை எனக்கில்லை,,,

அப்புறம் சொல்லு,,

தண்ணி, எலெக்ட்ரிசிட்டி  எல்லாம் ஃப்ரீ,,,

அடேங்கப்பா,,,

அதுக்கும் மேலே உனக்கு வாடகை இல்லா வீடு,,

மெடிக்கல் ஃபெசிலிட்டி,,,

அருமையான மெடிக்கல் இன்சுரன்ஸ் பாலிசி,,

உனக்கு கம்ப்யூட்டர் வாங்க 2 லட்சம்

பேப்பர் ப்ரிண்டருக்கு 50,000

ஐ பேட், WI FI ,இன்டர்நெட் எல்லாத்துக்கும் சேர்த்து மாதம் 5,000.00

வீடு, நீ இருக்கும் ஏரியாவை சரி பன்ன ஒரு 15 கோடி,,,

என்னது கோடியா?????????

ஒரு விசயம், இவ்வளவு தராங்களே வேலை ரொம்ப அதிகமா இருக்குமோன்னு பயந்துடாதே,, நீ வேலைக்கே வரவேணாம். இது எல்லாம் உன்னைத் தேடி வீட்டுக்கே வரும். கை எழுத்துக் கூட போடவேணாம்.

சரி யாராவது நான் வேலைக்கு வரல ன்னு போட்டுக்கொடுத்துட்டா,,

அட நீ வேற, இங்க யாரும் வேலைக்கே போறதுல்ல,,

என்ன தான் சொன்னாலும், இப்ப உடனே நான் வர முடியாதே , நான் வெளிநாட்டில் இல்ல இருக்கேன்,, இங்கேயும் நான் நல்லா தான் இருக்கேன். அதனால,,,,

அட நீ வேற, முட்டாள் தனமாகப் பேசாத. உன்னை யார் இங்க வான்னு சொன்னா,,, நீ அங்கேயே கூட இருக்கலாம்.

சரி வேலை பேரு என்ன?

ராஜ்யசபா MP

இது நான் சொல்லங்க,,

நம் விசு அவர்களின் விசுவாசமின் சகவாசம்  

                                           

நூலில் தான் ,,,
                                                                                                                     தொடரும்,,,


 காலத்திற்கேற்ற  செய்தி இல்ல,,,. படித்துப் பாருங்கள். நூல் முழுக்க நகைச்சுவையுடன் ஏராளமான கருத்துக்கள்,,

நீண்ட நாட்கள் ஆகிவிட்டன இந்நூலினைப் பெற்று படிக்க,, நூல் கொடுத்துதவிய திரு கீதா தில்லைஅகத்தார் அவர்களுக்கு நன்றிகள்

நூல் கிடைக்குமிடம்,
ழகரம் புத்தகச்சோலை
8/36 ஜோதி ராமலிங்கம் தெரு,
மேற்கு மாம்பலம்,
சென்னை-600003.
தில்லைஅகத்தாரிடமும்.

Monday, 2 May 2016

கல்யாண சமையல் சாதம்,,

கல்யாண சமையல் சாதம்,,

முதல் இரு தொடர் பதிவுகளையும் வாசித்தீர்களா?,,,
மனதோடு,,
கவிச்சாரல்,,,
மனம் கவர்ந்த பதிவர்கள் ஏராளம்,, எழுத தொடங்கியதும் யாரைவிடுவது என்று தெரியாமல்,, இன்னும் இருக்கு, காலம் கருதி இந்தபதிவோடு நிறைவுசெய்கிறேன். பிரிதொரு சமயத்தில் எழுதுகிறேன்.

நுங்கு பாயாசம் சுவைக்க இங்கே செல்லுங்கள்,,,
உமையாள் ப்ளாக்,,,

http://umayalgayathri.blogspot.com/

 கத்திரிக்காய் வறுவல் வேனுமா?
சாரதாஸ் ரெசிபி,,

                                                     
http://saratharecipe.blogspot.com/

 ரவா தோசை சுவைக்க
எங்கள் ப்ளாக்,,
http://engalblog.blogspot.com/   


வாழைப்பூ பொரியல் தெரியுமா
ஷமீ்ஸ் கிச்சன்,,
http://shameeskitchen.blogspot.in/கிர்ணி பழ ஜூஸ் (musk melon juice ),

சங்கீதாசெந்தில்,,,

http://snowwhitesona.blogspot.in/

தொடர்பதிவு எழுத  அழைத்த சகோ, ஞா .கலையரசி அவர்களுக்கு மீண்டும் நன்றி கூறி,,,,
தொடர இவர்களை அன்புடன் அழைக்கிறேன்.
1. கோயில்பிள்ளை
2.காவியக்கவி இனியா
3.தஞ்சையம்பதி
                                                            ആമ്പൽ പൂവ് നീല.JPG