மெய்ப்பொருள் காண்ப தறிவு
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்
அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
திருக்குறள் பதிவு இல்லீங்க,,,,
எனக்கு வாட்ஸ்அப்பில் வந்த தகவல்,, தகவல்
நல்லா இருக்கே என்று சரிபார்க்காமல் நான் சிலருக்கு அனுப்பிவிட்டேன். அதில் நம்
வலைப்பூ பதிவர் சகோதரர் திரு கரந்தை ஜெய்குமார் அவர்களுக்கும் தான். அவர்கள் தவறான
தகவல் சகோதிரியாரே என்று சொன்னதும்,, ஆஹா இப்படி பன்னிட்டோமே என்று மனம்
வருந்தியது. உடனே ஆம் சகோ நான் இப்போ தான் சரிபார்த்தேன். தங்கள் தகவலுக்கு நன்றி
என்று பதில் அனுப்பினேன். பிறகு தான் இந்த பதிவு,,,
எழுத நினைத்தேன்.
நோட்டா ஓட்டு 35% க்கும் மேல் பதிவாகி இருந்தால் போதுங்க நீங்க நினைக்கிறது நடக்குங்க, அதாங்க
அரசியல் சுத்தமாகும்னு சொல்றேன். எப்படி எனில் நோட்டா ஓட்டு 35% க்கும் மேல் பதிவாகி இருந்தால் இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி
பெற்றிருந்தாலும் அது செல்லாது,,
மேலும் தற்போது தேர்தலில்
போட்டியிட்ட எந்த அரசியல் கட்சியும் மீண்டும் அரசியலில் ஈடுபட முடியாது,,,,,,,அதுமட்டும் இன்றி அவர்களின் வாரிசுகளும் அரசியலில் ஈடுபட முடியாது,,,,,,,,,,
அதன்பின்னர் ஆறு மாதக்காலம்
குடியரசு தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்படும்,,,,,,,,,
பிறகு தேர்தல் வரும்
அதில் புதிய நல்லவர்கள் வருவார்கள்,, பின் நல்லாட்சி நடைப்பெறும் என்று,,,
இதுதாங்க செய்தி,, இந்த செய்தி எனக்கு பிடித்திருந்ததால் உடனே பலருக்கும் அனுப்பிட்டேன்.
நோட்டா என்றால் என்ன? என்று கூட யோசிக்காமல்,,,
அப்புறம் என்னங்க செய்தி நல்லா
இருக்கா இல்லையா???
சரி விசயத்திற்கு வருவோம். நோட்டா என்பது 100% வாக்கு பதிவாகனும் என்பதற்கு மட்டுமே,,
எனக்கு
யாரையும் பிடிக்கல ஓட்டுப்போட மாட்டேன். அன்று ஒரு நாள் விடுமுறையயை நல்லா
கழிப்பேன் என்று வீட்டுக்குள்ளே இருக்காமல்,, வாக்குசாவடிக்கு வந்து
வாக்களிக்கனும் என்பதற்கு தான்,,, இந்த நோட்டா.
எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு