Tuesday, 31 March 2015       மாவீரன் விசுவநாததாஸ்
         இந்தியச் சுதந்திரம் என்பது, பல்லாயிரம் பேர் சிறைப்பட்டும், ரத்தம் சிந்தியும், வாழ்வை இழந்தும், குடும்பங்களைத் தொலைத்தும், உயிரை ஈந்தும் செய்த தியாகங்களின் பயனாயும், பலனாயும் கிடைத்தது என்பதை இளைய தலைமுறைகளுக்கு, முக்கியமாகப் பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் மூத்த தலைமுறைகளுக்கும் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது, வேதனையோடு,,,,,,,,,,,,

         அக்காலங்களில் (1895-1935) மிக முக்கிய நாடகப் பெரும் கலைஞராக விளங்குகிறார் தாஸ். நல்ல கலைஞர்கள், பெரும்பாலும் மக்கள் நலம் சார்ந்த விடுதலை அரசியல் சார்ந்த கலைஞர்களாகவே இருந்திருக்கிறார்கள். 1919-முதல் காந்தியின் பிரவேசத்துக்குப் பிறகு, காங்கிரஸ் விடுதலைப் பேரியக்கம், மக்கள் தழுவிய இயக்கமாக மாறுகிறது. இயல்பாகவே மனிதநேயம் மிக்க தாஸும், சுதந்திர தாகம் கொண்ட கலைஞராக மாற்றம் பெற்றுக் கொண்டிருந்தார். 1925-ம் ஆண்டு தூத்துக்குடிக்கு வருகை தந்த காந்தியாரைச் சந்தித்து அவர் முன் பாடும் வாய்ப்பைப் பெறுகிறார். அன்று நடக்க வேண்டிய நாடகத்தைத் தள்ளி வைத்துவிட்டு, காந்தியார் முன் பாடினார் தாஸ். பக்க வாத்தியக்காரரோடு மேடை ஏறிய தாஸ், தேசியப் பாடல்களைப் பாடினார்.
 
             பின்னர் காந்தியாருக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார். அப்போது காந்தியோ பரம ஏழை, சந்நியாசிஎன்ற பாடலை தாஸ் பாடியதைக் கேட்டு, தன் பெயர் வந்த காரணம் பற்றிப் பக்கத்தில் உள்ள சுத்தானந்த பாரதியிடம் விளக்கம் கேட்கிறார். பாரதி, நீங்கள் ஏழையாம், சந்நியாசியாம் என்று மொழிபெயர்த்துச் சொல்கிறார். மொழி தெரியாவிடினும் இசையால் கவர்ந்திழுக்கப்பட்ட காந்தியார், தாஸை காங்கிரஸ் பேரியக்கத்திற்கு அழைக்கிறார். காங்கிரஸ் ஏழைகளின் இயக்கம். இதில் பணியாற்றுகின்றவர்களும் எளிய தோற்றம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்என்று தன் கோரிக்கையையும் வெளியிடுகிறார். இது தனக்கே விடப்பட்ட அழைப்பு மற்றும் யோசனை என்பதை தாஸ் உணர்கிறார்.

          தன் ஆடம்பர பட்டுடைகள், காதில் கழுத்தில், இடுப்பில் விரல்களில் அணிந்திருந்த தங்க நகைகளை விட்டு வெளியேறுகிறார். முரட்டுக் கதரைத் தன் ஆடையாக ஏற்கிறார். நூறு சதவிகிதம் தன்னை விடுதலை வீரனாக, சுத்த காங்கிரஸ்காரனாக, பின்னர் பதவிக்குப் பறக்காத போராளியாக மாற்றி அமைத்துக் கொள்கிறார். சாகும் வரைக்கும் தேசிய, விடுதலைப் போர்க் குணத்தை இழக்காத மாமனிதராகவே வாழ்கிறார்.

        1937-ம் ஆண்டு ஆர்.வி.ஆலையில் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் மேற்கொள்கிறார்கள். வெள்ளை நிர்வாகம், கருங்காலிகளை வைத்து வேலை நிறுத்தத்தை முறியடிக்க முயன்று கொண்டிருந்தது. தாஸ், மதுரை வைத்தியநாத ஐயர், மட்டப்பாறை வெங்கட்ராமையர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதலான காங்கிரஸ் தலைவர்களுடன் சென்னை வந்து, முதலமைச்சர் ராஜாஜியைச் சந்தித்து, ஆலையைத் திறக்க தடைகோரினார். அவ்வாறே தடைவிதிக்கப்பட்டது. ஆர்.வி.பட்டியில் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதியை செய்து கொடுக்க ஆலை நிர்வாகம் பணிந்து ஒப்புக் கொண்டது.
    பொதுவுடமைக் கட்சியால் நடத்தப்பட்ட பத்திரிகையான ஜனசக்தி’, கடும் பொருளாதாரச் சிக்கலில் இருந்தபோது, திண்டுக்கல்லில் 19.6.1938 அன்று நாடகம் நடத்தி, ‘ஜனசக்திக்கு ரூபாய் நூறை அன்பளிப்புச் செய்தார் விசுவநாததாஸ். அவருடன் இலவசமாக நடித்துக் கொடுத்தவர், பின்னாளில் பொதுவுடமை இயக்கத் தலைவராக மிளிர்ந்த கே.பி.ஜானகி அம்மாள். தலைவர் ஜீவா, ஜனசக்தியில் இதைக் குறிப்பிட்டுத் தாஸைப் பாராட்டி இருக்கிறார். தேச பக்த நடிகர்என்று, தாஸை அழைக்கவும் செய்தார் ஜீவா. தாஸ் அளித்த அன்றைய நூறு ரூபாய், இன்று ஒரு லட்ச ரூபாய்க்குச் சமம்.
        விசுவநாததாஸின் அரசியல் தீவிரம், அவருடைய சொந்த வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. முருகனாக வந்தாலும், அரிச்சந்திரனாக வந்தாலும், தாஸ் சுதந்திரப் போராட்டப் பாடல்களைப் பாடிச் சுதந்திர உணர்ச்சியூட்டுவதை ஒரு கடமையாகவே செய்து கொண்டிருந்தார். வெள்ளை நிர்வாகக் காவல்துறை அவரைக் கைது செய்யக் காத்துக் கொண்டிருக்கும், அவர் மேடைக்கு வந்ததுமே மக்கள், ‘வெள்ளை கொக்கு பாடுங்க என்பார்கள். பாடிய உடனே தான் கைது செய்யப்படுவோம் என்பதை தாஸ் அறிவார் என்றாலும் பாடுவார். உடனே கைது செய்யப்படுவார். இது போன்ற சம்பவங்கள் ஏராளம்,ஏராளம்,,,,,,,,,,

    சிறைக்குப் போவார். ஒரு நாள் நாடகம். ஆறு மாதம் அல்லது ஓராண்டு சிறை. இப்படியாக வாழ்ந்து கொண்டிருந்த தாஸ், தன் குடும்பச் சொத்தும் அழிந்தும், குடும்பம் வறுமைப்பட்டுக் கடன்காரராக தாஸ் மாறிக் கொண்டிருப்பதை அறிந்திருக்கவில்லை என்று சொல்ல முடியாது. என்றாலும், இலட்சியம் தேசத்தையே முன்நிறுத்தியது. அக்காலத்திய தலைவர்கள் மேற்கொண்ட சுதந்திரப் பிரசாரத்துக்குச் சற்றும் குறையாத அளவுக்கு தாஸும், சுதந்திரக் தாகத்தை ஏற்படுத்தியிருக்கிறார் மக்களிடையே,

    இரண்டாம் உலக யுத்தத்தை ஹிட்லர் தொடங்கி வைத்தான். பிரிட்டன் யுத்தத்தில் குதித்தது. பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியர்களை கலந்து கொள்ளாமலேயே இந்தியாவை யுத்தத்தில் ஈடுபடச் செய்த ஜனநாயக மீறல் போக்கை விமர்சித்த காங்கிரஸ் பேரியக்கம், யுத்த நடவடிக்கையில் இந்தியர்களை ஈடுபடுத்தக் கூடாது என்ற முடிவை எடுத்தது. சென்னை ஆளுநர் எர்ஸ்கின், தாஸோடு தொடர்பு கொண்டார். யுத்தத்தை ஆதரித்து மேடையில் பாடினால், தாஸுக்கு ஆயுள் முழுவதும் ஆயிரம் ரூபாய் அரசு தரும் என்று பேரம் பேசினார். இது லட்சியத்துக்கும் மானத்துக்கும் இடப்பட்ட சவால் என்பதை உணர முடியாதவரா தாஸ்? கவர்னர் எர்ஸ்கினின் வேண்டுகோளைப் புறக்கணித்தார்

      அன்றைய மேயர் வாசுதேவ், விசுவநாத தாஸைப் பார்க்க வந்தார். கடன் சுமையால் தாஸின் வீடு ஏலத்துக்கு வர இருந்தது. எல்லாவற்றையும் இழந்த தாஸின் கடைசிச் சொத்து அந்தப் பரம்பரை வீடு ஒன்றுதான். தாஸின் குடும்பம் அங்கேதான் வாழ்ந்தது. இதைத் தெரிந்து கொண்ட மேயர் வாசுதேவ், தாஸைச் சந்தித்தார். பணம் தருவதாகவும், வீட்டையும் மீட்டுத் தருவதாகவும், இழந்த சொத்துக்கள் அனைத்தையும் மீட்டுத் தருவதாகவும், அதற்குரிய பிரதிபலனாக, தாஸ் காங்கிரஸ் பேரியக்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். என்னால் புல்லைத் தின்ன முடியாதுஎன்றார் தாஸ்.

Monday, 30 March 2015

விசுவநாததாஸ் photos க்கான பட முடிவு
மாவீரன் விசுவநாததாஸ்

அவர் தாங்க வீரன் தியாகி விசுவநாத தாஸ்.          1886-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் நாளில் சிவகாசியைச் சேர்ந்த சுப்பிரமணிய பண்டிதருக்கும் ஞானாம்பாள் அம்மைக்கும் மூத்த மகனாகப் பிறந்தார் விசுவநாததாஸ். இவரின் இயற்பெயர் தாசரிதாஸ். சிவகாசியிலும், பாட்டன் ஊரான திருமங்கலத்திலும், திருப்பாவை பஜனை கோஷ்டியில் பாடுவது என்பதாக தாஸின் இசைப்பணி தொடங்கி இருக்கிறது. சட்டென இசையில் நுட்பங்களைப் பிடித்துக்கொண்டு பாடும் ஆற்றல், தாஸுக்கு மிக இயல்பாகக் கைவந்தது.
   எட்டு வயதுக்குள் ஊர்ப் பண்டிகை நிகழ்ச்சிகள், கோயில் நிகழ்ச்சிகள் தாஸ் இல்லாமல் நடவாது என்ற நிலையை உருவாக்கினார் சிறுவன் தாஸ். வெண்கலக் குரலால் ஊரைக் கட்டிப்போட்ட தாஸ், காலில் சதங்கையைக் கட்டிக்கொண்டு சப்ளா கட்டையைத் தட்டிக்கொண்டு தாளம் தவறாது ஆடியதை, சிவகாசியில் தோல் வணிகராக இருந்த தொந்தியப்ப நாடார் பார்த்துக் கொண்டே இருந்தார். நாடார், ஒரு நடிகர். நட்டுவாங்கம் அறிந்த ஒரு கலைஞரும்கூட. அருமையான பாடகர். தாஸுக்குள் ஒரு கலைஞன், பிறை நிலவாக ஒடுங்கிக் கிடப்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது.


    சினிமாவும், தொலைக்காட்சிகளும் வராத அந்தக் காலத்தில் மக்களுக்கு பொழுது போக்குச் சாதனாமாக விளங்கியது நாடகங்கள். இந்த நாடகத்தைக் கொண்டு மக்கள் உள்ளங்களில் சுதந்திரக் கனலை வளர்த்தவர்கள் பலர். அவர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் நாடக நடிகர், தேசபக்தர் எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ். இவருடைய இளமைக் காலத்திலேயே இவருக்கு நாட்டுப் பற்றும் தேசிய உணர்வும் ஏற்பட்டு இந்த நாட்டுக்காக ஏதாவது செய்தாக வேண்டுமென்று உணர்வு ஏற்பட்டது. இவர் விரும்பி ஏற்றுக் கொண்ட தொழில் நாடக நடிப்பு. தனது தொழில் துறையிலேயே மக்களுக்கு எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவு சுதந்திர தாகத்தை உருவாக்க வேண்டுமென்று இவர் முடிவு செய்து கொண்டார். நடிப்பு மட்டுமல்லாமல் இவர் ஓர் நல்ல நாடக ஆசிரியரும்கூட. இவருடைய நாடகங்களில் எல்லாம் தேச உணர்வைத் தூண்டும்படிதான் எழுதுவார்.

    இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு தனது நாடகங்கள் மூலம் தேசிய உணர்வை நாடெங்கும் பறப்பியவர்.
 அவருடைய 'வெள்ளை கொக்கு பறக்குதடி" எனும் அந்த பாடலை அது எந்த நாடகமாக இருந்தாலும் மக்கள் பலமுறை பாடச் சொல்லிக் கேட்பார்கள்.
அந்த முழுப்பாடலும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

கொக்கு பறக்குதடி பாப்பா!
கொக்குப் பறக்குதடி பாப்பா நீயும்
கோபமின்றி கூப்பிடடி பாப்பா (கொக்கு)
கொக்கென்றால் கொக்கு நம்மைக்
கொல்ல வந்த கொக்கு
எக்காளம் போட்டு நாளும் இங்கே
ஏய்த்துப் பிழைக்குதடி பாப்பா (கொக்கு)
வர்த்தகம் செய்ய வந்த கொக்கு நமது
வாழ்வைக் கெடுக்க வந்த கொக்கு
அக்கரைச் சீமை விட்டு வந்து கொள்ளை
அடித்துக் கொழுக்குதடி பாப்பா (கொக்கு)
தேம்ஸ் நதிக்கரையின் கொக்கு அது
தின்ன உணவில்லாத கொக்கு பொல்லா
மாமிச வெறிபிடித்த கொக்கு இங்கே
வந்து பறக்குதடி பாப்பா (கொக்கு)
கொந்தலான மூக்குடைய கொக்கு அது
குளிர்பனி கடல் வாசக் கொக்கு
அந்தோ பழிகாரக் கொக்கு நம்மை
அடக்கி ஆளுதடி பாப்பா (கொக்கு)
மக்களை ஏமாற்ற வந்த கொக்கு அதன்
மமதை அழிய வேண்டும் பாப்பா
வெட்க மானமில்லா அந்தக் கொக்கு இங்கே
மடியப் பறக்குதடி பாப்பா (கொக்கு)
பஞ்சாபில் படுகொலை செய்த கொக்கு அது
பழி பாவம் பார்க்காத கொக்கு
அஞ்சாமல் பாஸ்கரன் தமிழ்பாடி அதை
அடித்து விரட்ட வேண்டும் பாப்பா (கொக்கு)
இந்த பாடல் எழுதியது மதுரை பாஸ்கரதாஸ், ஆனால் நாடகத்தில் இவர் பாடுவது அத்துனை விறுவிறுப்பு,,,,,,,,,,,
இந்த வரிகளை பாருங்கள்,,,,,,,,
தேம்ஸ் நதிக்கரையின் கொக்கு அது
தின்ன உணவில்லாத கொக்கு பொல்லா
மாமிச வெறிபிடித்த கொக்கு இங்கே
வந்து பறக்குதடி பாப்பா (கொக்கு)
எனக்கு மிகவும் வரிகள்,
 இருங்கள் நாளை அவரின் அரசியர் நுழைவுடன் வருகிறேன்.
Friday, 27 March 2015

therukoothu க்கான பட முடிவு
உலக நாடக தினம்
       இன்று உலக நாடக தினம். ஒவ்வொறு ஆண்டும் உலக நாடக தினமாக மார்ச் 27ல் உலக நாடக விற்பன்னர் ஒருவரை நியமித்து  அவரது செய்தியை உலக நாடகவியலாளருக்கு வழங்குதல் மரபு. அதன்படி இந்த ஆண்டு போலந்து நாட்டு நாடக விற்பன்னர் கிறிஸ்டோ வர்லிகோவ்ஸ்கி செய்தி வழங்கியிருக்கிறார். அரங்க மேடையும், நடிகர்களின் நடிப்பும் பத்தாம்பசிலித்தனமாகவே இருப்பதை அனுமதிக்க முடியாது, உலகைப் பார்த்து உள்ளம் கொந்தளிக்காமல் இருக்க முடியவில்லை. கொந்தளிப்பின் வெளிப்பாடுகள் என மேடைகிளில் நகல்களாக மாற்றாமல் படைப்பாக்கங்களாகச் செய்திட வெண்டும். காஃப்கா போன்ற படைப்பாளர்களை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.கிரேக்க கலையான பிராமிதியாஸ் கதையைக் குறிப்பிடும் போது வாழ்க்கை உண்மை என்பது மடிவு. இது விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்பார் காஃப்கா. அதுபோல நாடக அரங்கமும் விளக்க முடியாத உண்மைகளை விளக்க வேண்டும். சமுகம் மேம்பட நாடக அரங்கும் தன் பங்களிப்பை செம்மையாகச் செயற்படத் தவறக் கூடாது. இது அவரின் செய்தியின் தமிழ் சுருக்கம்.

         இந்த சமுகம் மேம்பட செய்தவர்கள் ஏராளம்,,,,,,,,,,,,,,


மாவீரன் விசுவநாததாஸ்


என்ன திரைப்படம் என்று நினைக்கீறீர்களா? அல்லது வேறு ஏதேனும் என்று.................
என்ன செய்வது நம்மில் எத்துனைப் பேருக்கு இந்த பெயர் நினைவில் உள்ளது. சொல்லூங்கள் பார்ப்போம்.
 எனக்கும் தெரியாது. என் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக நான் ஆய்வேடு சமர்பிக்க தலைப்பு தேடிய போது, என் நண்பர் இவர் பெயரில் செய்யுங்கள் தாங்கள் சிறப்பாக கொண்டுவருவீர்கள் என்றார். நான் என்னால் களப்பயணம் போக முடியாது, உதவிக்கு ஆள் இல்லை என்றேன். உடனே அவர் நான் அனைத்தையும் செய்து தருகிறேன் என்றார். மற்ற நண்பர்களும் உதவ தயார் என்றனர். ஆனால் ஏனோ எனக்கு இந்த தலைப்பில் செய்ய மனம் ஈடுபடல,ஆனால் என் நண்பரோ விடாப்பிடியாக இந்த தலைப்பிலே செய்ய முனைந்தார்.(இதில் வேடிக்கை என்வென்றால் என் வழிகாட்டி அந்த தலைப்பில் நான் ஆய்வு மேந்கொள்ள விருப்பம் தெரிவித்தார், அவர் வழிகாட்டி விரும்பல) அவர் அருமையாக செய்தும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றார். என் நண்பருக்கு நன்றி. அன்று அவருடன் நான் இது சம்பந்தமாக சில தகவல்கள் சேகரித்து உதவும் போது தான் என் தவறு புரிந்தது. எத்துனைப் பெரிய மனிதரின் வரலாறு என்னால் வெளிவராமல் போய்விட்டதே என்று, இன்று அதற்கு பரிகாரமாய், அவர் சேகரித்த தகவல்களுடன் நான்,,,,,,,,,,,,,,,,,,,,
என்ன என் வலைவுலக உறவுகளே என் மேல் கர்ணகொடுரமான தாக்குதலுக்கு தயாராகிவிட்டது போல் உள்ளது,,,,,,,,,,,,,,,,,,,,,,,
சரி
யார் அவர்?
சற்று இருங்கள் இதோ வருகிறேன்.
Wednesday, 25 March 2015இலக்கணம் 1

தமிழ் இலக்கண உலகில்

முதல் நூல்
வழி நூல்
சார்பு நூல்

என்ற ஒரு பகுப்பு உண்டு

அதன் படி
அகத்தியம்            -முதல் நூல்

தொல்காப்பியம் -வழி நூல்

நன்னூல் சார்பு  -நூல்


தொல்காப்பியமே நமக்கு முழுமையாக கிடைத்திருக்கும் தமிழ் மொழிக்கு இலக்கண முதல் நூல் ஆகும். இதற்கு முன் இருந்த அகத்தியம் பெயரால் மட்டுமே, நமக்கு கிடைக்கல என்று,

சரி,,,, சரி,,,,,,, நான் இலக்கண வகுப்பு எடுக்க வரல,                     உயர்திணை
             திணை
                     அஃறிணை


இதில்
  உயர்திணைக்குரியோர் யார்?

       அஃறிணைக்குரியோர் யார்?

இதற்கு விளக்கம்

இலக்கண ஆசான் தொல்காப்பியர்

                உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அறிணை எனபனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன் சொல்லே

என்றார்.

இதன் விளக்கம்,
மக்கள்  உயர்திணை
அவர் தவிர , அதாவது மக்கள் தவிர மற்றயவை அஃறிணை.
இது தான் அவர் சொல்லும் விளக்கம்
நம் அனைவருக்கும் புரியும்.
இதில் சங்தேகம் எதுவும் இல்லையே,,,,,,,,,,,,,

சரி இது இப்படியே இருக்கட்டும்.

இப்போ
        இவருக்கு பின்னர் வந்த சுமார் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படும், பவணந்தி என்பார் நன்னூல் என்ற இலக்கண நூல் ஆக்கினார்.13 ஆம் நூற்றாண்டு என்பாரும் உண்டு. இவர் இதே பொருளுக்கு இலக்கணம் சொல்கிறார்.
அதாவது

                        மக்க டேவர் நரக ருயர்திணை
மற்றுயி ருள்ளவு மில்லவு மஃறிணை

என்றார்.
இதன் பொருள்,
 மக்கள் தேவர் நரகர் உயர்திணை,
 மற்ற உயிர் உள்ளவும் அல்லவும் அஃறிணை.

புரிகிறதா?

இங்க தாங்க எனக்கு புரியல?

இந்த மக்கள் சரி

நான் நீங்க எல்லோரும் பார்த்திருக்கிறோம்.

இவர்கள் யாருங்க தேவர், நரகர்.


Tuesday, 24 March 2015

மறக்கமுடியவில்லை

 


இரு உள்ளங்கள் 
தங்கள்
அன்பின்
உரையாடல்
இது,,,,,,,,,,,,
அவள்………………..
 
அவனை,,,,,,,,,,,,,,,,,,,,
RDX பாம்
என்றாள்,

அவன்…………
வெடிக்காமல் இருந்த RDX யை
வெடிக்க வைத்த
பெண் தீவிரவாதி
நீ
என்றான்.

 

Tuesday, 3 March 2015

என் வலைதள ஆசான்.

karanthai jayakumar க்கான பட முடிவு
என் வலைதள ஆசான்.

சிலர் எங்கு சென்றாலும்
சங்தோஷத்தை மட்டுமே
கொண்டு செல்வார்கள்.
அவர்களது பாதையில்
புன்னகையும் பூரிப்பும்
அன்பும் கருணையும்
நிறைந்து இருக்கும்.
                         மனிதாபிமானம் மரத்துப்போய்,
                         மனித உயிர்கள் வெறும்
மலைப்பிஞ்சுகளாக 
கருதப்படும் நிலையில்,
மனம் சோம்பிக் கிடக்கையில்
சோம்பல் நீக்கி 
ஆறுதல் படுத்த மட்டுமே
தெரிந்த அன்பான
ஓர் இதயம்.
இந்த வலைதள பூங்காவில்
என் கால்கள் பதிய
என்னை ஊக்கியவர்.
நான் செயல்படுத்த
முடியவில்லை எனும் போது,
தானே வலைப்பூ
உருவாக்கி பெயரிட்டவர்.
பாலமகி 
பின் உள்ள புத்தகமும்
அவரின் கை வண்ணமே,
பிறரை வாழ்த்துதல் ஒன்றே 
அவரின் தொழில்.
ஒரு கணிதத்துறைக்குள் 
இத்துனை
தமிழ் மறக்காதலா 
என்று 
நான் வியந்ததுண்டு.
ஆம்,
அவரின் படைப்புகள் ஒன்றே
அதற்கு சாட்சி.

      ஒரே நிறுவனம்
ஆயினும்
எங்கோ 
எப்போதோ 
சில உரையாடல்கள்,
பணிக்கான சில தொலைப்பேசி அழைப்புகள்
இவ்வளவே இம் மாமனிதரிடம் எனக்குள்ள தொடர்பு.
எனக்கு அவர் உதவிய 
பல்வேறு தருனங்களில் 
நான் சொன்ன
  
THANK YOU SIR  க்கு 
         
முறுவலோடு சென்றுவிடுவார்.

ஆகையால்,
நீர்
தந்த
என் நம்பிக்கையின்
ஒரு துளி மிச்சத்தை
 தரையில் பதித்து
வளர்ச்சியின் வித்தை
வானத்தில் தேடினேன்
வீழ்ந்த ஒரு துளியை
பொக்கிஷமாய்
வேரில் புதைத்தேன்
நான் விருச்சமாவேன்
எனும்
நம்பிக்கையுடன்
  
karanthai jayakumar க்கான பட முடிவு

 THANKYOU SIR…………………
 

Sunday, 1 March 2015

ஏன்?ஏன்?
  இளஞ்சூரியன் மெல்ல மறைந்து இனிய தென்றல் வீசும் மாலை வேளை, கடல் தன் அலைக்கரங்களை வீசி நடைபயிலும் இடம்.
நானும் என் மன அலைகளில்.

       சற்று தூரத்தில் நான்கு பேர் அமர்ந்து பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது.

ஒட்டு கேட்க அல்ல, தானாக விழுந்த செய்தி,

           நேத்து எம்பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கபோனோம், கவர்மெண்ட் பஸ். பாதியில் நின்னுபோச்சு.

           கவர்மெண்ட் வண்டினா அப்படித்தான்,,,,,,,,,,,,, தனியார் பஸ்சுனா இப்படி ஆகுமா? வண்டி எவ்வளவு அருமையாய் பராமரிப்பான். வண்டிய எடுக்கும் போதே வண்டியோட கண்டிசனச் செக் பண்ணித்தான் எடுப்பான்.
பிரைவேட்ல இருக்கிற ஒழுங்கு, கவர்மெண்ட்ல கண்டிஷன் எங்க இருக்கு? 

          ஆமா, ஆமா, இப்ப கூரியர் சர்வீசையே எடுத்துக்கிடுங்க தபால் எவ்வளவு 
சீக்கிரம் போகுது.   இன்னிக்கு நாலு மணிக்குக் கொடுத்தா நாளக்கிப் பதினோரு மணிக்குள்ள போய்ச் சேந்திருது. அதே நேரத்தில் போஸ்டல் சர்வீசைப் பாருங்கோ ஒரு இடத்திற்கு வறேன்னு லெட்டர் போட்டா நாம போய்ச் சேர்ந்த பிறகு தான் லெட்டர் வந்து சேருது....... 

       இப்போ பொதுவானவைகளை பேசியவர்கள் தங்கள் சொந்த சமாச்சாரங்களுக்கு தாவினார்கள். 

       பொண்ணுக்கு மாப்பிள்ளைப் பார்க்கப் போனீங்களே என்னாச்சு?.
 மாப்பிள்ளை விட்டுகாரங்களுக்குப் பெண்ணைப் பிடிச்சிருச்சு எங்களுக்கும் மாப்பிள்ளையைப் பிடிச்சுப் போச்சு மத்த லௌகிக விஷயங்கள் இனிமேல்தான் பேசி முடிவுக்கு வரணும்.

     மாப்பிளப் பையன் என்ன செய்யிராரு?

   பஞ்சாயித்து யூனியன் ஆபிஸ்ல கிளார்க்கா இருக்காரு. பரவாயில்ல கவர்மெண்ட் ஜாப் கவலைப்படவேண்டாம்.

    ஆமா பியூனோ வாச்சுமேனோ அரசாங்க உத்யோகம்னா அதுக்கு ஒரு மரியாதைதான்.

    ஆமா, தனியாரெல்லாம் நம்ப முடியாது. அவன் வச்சது தான் சட்டம். ஒண்ணும் கேட்க முடியாது. தெரியாமலா சொன்னாங்க கால் காசானாலும் கவர்மெண்ட் காசு என்று.............

இந்த இரு உரையாடல்களுக்கும் பொதுவானவர்கள் அவர்கள்.
 எனக்கு புரியல.

தாங்கள் தான் சொல்ல வேண்டும் ஏன் இந்த முரண்?.