Wednesday 27 April 2016

கவிச் சாரல், மனதோடு ,,,,,,,,,,,

   மனதோடு ,,,,,,,,,,,

                                     குறிஞ்சி பூ படம் க்கான பட முடிவு

முதல் பதிவு வாசீத்தீர்களா,,,,,,,,,,

 காற்றில் ஆடும் கனவுகள் போல கதைபேசும் நிலவினைப் போல நினைவெனும் ஊஞ்சல் நெஞ்சினில் ஆட நனையாமல் நலியாமல் உறையாமல் உதிர்கிறது உண்மைகளை உரைக்கிறது..... காவியகவி இனியா அவர்களின் கவிதைத் தளம்,,  என்னுள் பல உணர்வுச் சலனத்தை ஏற்படுத்திய பாவரிகள், நேரில் பார்த்தது, பேசியது இல்லை என்றாலும் பலநாட்கள் பழகிய உணர்வு இவரின் எழுத்தால் என்னுள் எழுந்ததை ஏனோ மறைக்கத் தோன்றவில்லை,,, சமீபகாலமாக பதிவுகள் வரவில்லை இவர் தளத்தில். ஏனம்மா?? வேலைமுடித்து கொஞ்சம் கொஞ்சும் கவிகள் தாருங்கள் அம்மா,,   http://kaviyakavi.blogspot.in/
       நிழல்கள் எப்போதும் நிஜத்தைக் காட்டுவதில்லை எனும் வார்த்தை வரிகளை நான் கண்டது இளையநிலா எனும் தளத்தில்,,  வார்த்தைகளைக் கோர்த்து அவைகளுக்கு கவிமூச்சளித்து உயிர்ப்பிக்கிற கவிபிரம்மா இவர். தன் இணையை இழந்ததால் இன்னும் இணையத்திற்கு வரவில்லை,,  வாருங்கள் அம்மா கொஞ்சம் மாற்றுச் சூழலுக்காய் எழுதுங்கள்,,, http://ilayanila16.blogspot.com/

     என்னுயிரே என உருக வைக்கும் வார்த்தைக் கோர்வைகள்,, உயிர் உருக்கும் கவிதைகளைக் கொட்டிவிட்டு,, இதுவரை நான் கவிதையே எழுதியதில்லை என்று கூறும் தன்னடக்கம் மிகுந்தவர்,, இவரின் மற்றொரு தளம் அக்கினிச்சுவடுகள்,, பூக்கள் மீதும் நெருப்பெரியும்,,,, எத்துனை வலிமிகுந்த வரிகள் ,,, ஈழத்து வேதனைப் பகிர்வு,, http://soumiyathesam.blogspot.com/ 

      தென்றல் சசி, தென்றல்  என இரு பக்கங்களுக்குச் சொந்தக்காரர்,,
 "பக்கம் நின்னு பார்ப்பவரே பார்த்து பேசி போனாலென்ன?
காத்தடிக்க உன் மூச்சும் கனலாத்தான் நெருங்குதய்யா"
இவைப்போன்ற ஏராளமான காதல் கவிவரிகள் வழங்கியவர், சிலகாலமாக இவர் தளம் அமைதியாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் தோழி http://veesuthendral.blogspot.in/

 கவிதைப் போட்டிகள் நடத்தியவர். கவிநூல் வெளியிட்டும் கவிதையில் கலக்குபவர், இவரின் 
"சொல்லாமல் வந்த காதலால் 
வாழ்வில் சுகந்தங்கள் வீச"
வாசித்துப்பாருங்கள் ,,,, ரூபனின்  எழுத்துப்படைப்புகள்,,  https://2008rupan.wordpress.com/page/6/ 

     எல்லாம் தெரிந்தவனும் இல்லை, எதுவும் தெரியாதவனும் இல்லை,, எனும் வரிகளுக்கு சொந்தக்காரர் திரு தளீர்சுரேஷ் ,,,  தளீர் ஹைக்கூ கவிதைகள்,, குட்டி குட்டி வரிகள் அத்துனையும் அழகு,, http://thalirssb.blogspot.com/ 

      பார்த்தவற்றைக் கவிதைக்குள் பதுக்கிவைக்கும்  பகல் திருடன்,,,,  சிவக்குமரன்  கவிதைகள்
"நாற்றமெடுத்த சமுதாயத்தில்
நமக்கு பங்கென்ன? - அட
மூக்கைப் பொத்திக்கொண்டு 
நகர்வோம் வேறென்ன?"
இற்றைய நாளோடு பொருந்தும் வரிகள்,, http://sivakumarankavithaikal.blogspot.com/

 யாழ்பாவாணின் எழுத்துக்கள்  யாழ்பாணத்து வலிகள் இவரின் வார்த்தைகளில் உண்டு,, எல்லா துறையும் இவரின் கவியில் துளிர்க்கும் ,,,,
சொல்பவர்கள் எல்லோரும் 
சொல்லலாம் எதையும்,,,,,  எனும் வரிகளை வாசியுங்கள்   http://eluththugal.blogspot.in/ 

     நான் நூலகம் சென்றதில்லை புத்தகங்கள் படித்ததில்லை,, என்று சொல்பவர்,, ஆனால் அழகான காதல் கவிதைகள் தருபவர்,, நான் தொடரும் புது பதிவர், திரு அஜய் சுனில்கர் ஜோசப்  பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்,, http://ajaisunilkarjoseph.blogspot.com/2016/04/blog-post_
                                         குறிஞ்சி பூ படம் க்கான பட முடிவு
                                                                                     தொடரும்,,,,,,,,,,,,,
படங்கள் இணையத்திலிருந்து,,,

28 comments:

  1. இளையநிலா, சிவகுமாரன், தென்றல் சசிகலா, அஜய் ஆகியோர் அறிந்த பதிவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி ஸ்ரீ

      Delete
  2. அருமையான அறிமுகங்கள் சகோ...
    இதில் நான் அறியாத தளங்களை
    அறிமுக படுத்தியிருக்கிறீர்கள்....
    என்னையும் பிறருக்கு அறிமுகம்
    செய்துள்ளீர்கள் சகோ .....
    நன்றி சகோ நன்றி நன்றி....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ,

      Delete
  3. கவிதைகளில் மனம் கொடுப்பவர்நீங்கள் என்பது தெரிகிறது

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ஐயா,, வருகைக்கு நன்றி ஐயா, தொடருங்கள்.

      Delete
  4. ஆஹா அனைவரும் நான் தொடரும் நண்பர்களே... வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  5. மனதோடு கவிச்சாரல்.....அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி வலிப்போக்கரே

      Delete
  6. அருமையான அறிமுகங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  7. அருமையான பதிவர்கள் கவிஞர்கள். அனைவரையும் அறிவோம்..சகோ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  8. தங்கள் தளத்தில்
    என்னையும் அறிமுகம் செய்தைக்கு நன்றிகள்.

    நாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்
    http://www.ypvnpubs.com/2016/04/blog-post_24.html

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  9. தங்களால் அறிமுகம் செய்யப்பட்டவர்கள் -
    அனைவருக்கும் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள்,,,

      Delete
  10. என்னுடைய அறிமுகத்திற்கு நன்றி சகோ! உங்களைப் போன்றவர்கள் அளிக்கும் ஊக்கமே சோதனைகளை கடந்து எழுதத் தூண்டுகின்றது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள் சகோ

      Delete
  11. அறிமுகமாகும் பலர் எனக்குத் தெரிந்தவர்கள். எல்லோருக்கும் என் வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள் சகோ

      Delete
  12. வணக்கம் பேராசிரியரே !

    எவ்வளவோ பதிவர்கள் சிறந்தபதிவுகள் இடுகையில் அவர்களோடு சேர்த்து என்னையும் அறிமுகம் செய்யுமளவுக்கு நான் தகுதியானவனா இருக்கிறேனா ! மிக்க நன்றி தங்கள் அன்பிற்கு
    அறிமுகமான அத்தனை பதிவர்களுக்கும் இனிய வாழ்த்துகள் தொடரட்டும் தங்கள் பணி வாழ்க வளத்துடன் !

    ReplyDelete
    Replies
    1. பாவலரின் பாக்கள் தான் ,,,,

      வருகைக்கு நன்றிகள் பல

      Delete
  13. Replies
    1. வருகைக்கு நன்றிகள் சகோ

      Delete
  14. பேராசிரியரே,

    மற்றவர்களின் திறமையை மதிப்பதற்கும் அறிமுகம் செய்வதற்கும் ஒரு உயர்ந்த மன நிலையும் உன்னத சிந்தையும், பதமான இதயமும் வேண்டும். அது தங்களிடம் வேண்டுமட்டும் வியாபித்திருப்பது தெளிவாகிறது உங்கள் அறிமுகத்தால்.

    வாழ்த்துக்கள்.

    நன்றி.

    கோ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள் அரசே

      Delete