Friday 30 December 2016

எல்லே இளம்கிளியே


                     எல்லே இளம்கிளியே

எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?

சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்

வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்

வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.


   விளக்கம்


 ஏய், இளம் கிளியே, இன்னும் உறங்குகிறாயே, உனக்காக நாங்கள் எல்லாம் 

இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படி எல்லாம் அழைத்தும் இன்னும் 

உறங்குகிறாய். என்று தோழிகள் சற்று கடுமையாகவே அழைத்தனர்.அப்போது 

அவள் ஏன் இப்படி கத்துகிறீர்கள், இதோ வந்துவிட்டேன். என்று அவளும் 

கோபமாக கத்துகிறாள்.


 உடனே தோழிகள், உன் வார்த்தை நன்றாக இருக்கிறதே, இவ்வளவு நேரம் 

நாங்கள் உன்னை எழுப்ப கத்திக்கொண்டு இருக்கிறோம். நீ எங்களை 

கோபிக்கிறாயே என்று சிடுசிடுத்தனர். சரி சரி விடுங்கள் எனக்கு பேச 

தெரியவில்லை, நீங்களே திறமைசாலிகளாக இருங்கள், நான் 

ஏமாற்றுக்காரியாக இருந்துவிட்டுப்போகிறேன். அடியேய் நாங்கள் முன்னமே 

எழுந்து வந்து உன்னை எழுப்ப வேண்டும், அப்படி என்ன நீ பெரிய ஆளா??? 

எங்களிடம் இல்லாத சிறப்பு உன்னிடம் என்ன?? அவளும் விடுவதாக 

இல்லை,, அவளும் வாயாடி போலும்,, ஏய் என்ன என்ன,, என்னவோ நான் 

மட்டும் எழாதது போல் பேசுகிறீர்கள்,எல்லோரும் எழுந்து வந்துவிட்டீர்களா? 

என்கிறாள். உடனே தோழிகள் நீயே வந்து இங்கு இருப்பவர்களை எண்ணிப் 

பார்த்துக்கொள். வலிமை பொருந்திய யானையை அழித்தவனும், 

வேட்டையாடும் திறன் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி 

வாழ்த்தி பாட போகனும் சீக்கிரம் வா,,

(தோழியை எழுப்பும் பாடல் இத்துடன் நிறைவு) 




Thursday 29 December 2016

உங்கள் புழக்கடை

             
                          உங்கள் புழக்கடை

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்


செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்


தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்


எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்


நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!


சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்


பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.






விளக்கம்

   உங்கள் வீட்டின் பின் வாசலிலுள்ள தோட்டத்தின் குளத்தில் செங்கழுநீர் மலர்கள்  மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலைகவிழ்ந்தன.காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஓளிவீச கோயில்களை நோக்கி திரிசங்கு  ஊத சென்றுவிட்டனர். ஆனால் பெண்ணே சங்கும் சக்கரமும் ஏந்திய கரங்களை உடையவனும், அழகிய தாமரை மலர் போன்ற கண்களை உடையவனுமான கண்ணனைப் பாட நீ இன்னும் எழாமல் இருக்கிறாயே, நேற்று நீ என்ன சொன்னாய்,, நாளை நான் முன்பே எழுந்து வந்து உங்கள் எல்லோரையும் எழுப்புவேன் என்று வீரம் பேசினாயே, கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே,, வா,,  எழுந்து வா,,

Tuesday 27 December 2016

கற்றுக் கறவை

                         


                       கற்றுக் கறவை

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே!

புற்றுஅரவு அல்குல் புனமயிலே! போதராய்

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்

முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி! நீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.




விளக்கம்



    கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால்கறப்பவனும், தங்களை

பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனுமான 

கோபாலனை குற்றமற்ற அன்போடு நேசிக்கிறாய், பொற்கொடியே, அழகியே, 

மயில்போன்றவளே, நம் சுற்றுப் புறத்தில் உள்ள தோழியர் அனைவரும் உன் 

வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டனர்.மேகவண்ணனாகிய கண்ணனைப் 

புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கிறார்கள், பொறுப்பானவளே,பெண்மையை 

புனிதமாய் காப்பவளே,, இவையெல்லாவற்றையும் கேட்டும் அசையாமலும் 

பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே, இந்த அர்த்தமற்ற உறக்கம் 

தேவையா? அதனால் என்ன பயன் உனக்கு, எழுந்து வா  பாவையே





                                                                                                                             (இந்த மார்கழி கோலம் அல்ல,,,)



                     கனைத்திளம் கற்றெருமை




கனைத்திளம் கற்றெருமை

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலை வழியே நின்று பால்சோர


நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்


பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்


சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற


மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்


இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!


அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.


  

  விளக்கம்


  பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் 

மடியில் சொறியும் பாலைச் சிந்தியபடியே அங்கும் இங்கும் 

செல்கின்றன.அவை சொறிந்த பால் இல்லத்து வாசலை சேறாக்குகின்றது. 

இந்த அளவுக்கு பால் சொறியும் எருமைகளுக்கு சொந்தகாரனான ஆயனின் 

தங்கையே,கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, எருமைகள் சொறிந்த 

பால் கால் நனைக்க, உன் வீட்டு வாசலில் காத்துகிடக்கின்றோம். சீதையை 

கவர்ந்து சென்ற இராவணனை அழிக்க அவதாரம் எடுத்த கோமானாகிய அந்த 

நாராயணனின் பெருமைகளை நாங்கள் பாடுகிறோம், நீயோ பேசாமல் 

இருக்கிறாய், எல்லா வீடுகளிலும் உள்ள அனைவரும் எழுந்து வந்து விட்டனர்,

உனக்கு ஏன் இத்தனை பேருறக்கம்.


                                                (இந்த மார்கழி கோலம் அல்ல,,,)

            

                     புள்ளின் வாய் கீண்டானைப்


புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்


கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்


பிள்ளைகள் எல்லாரும்  பாவைக் களம்புக்கார்


வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று


புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே


பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்


கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.


விளக்கம்



 பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை ஏகிய இராவணனின் தலையைக் கொய்யவும்

அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே நம் தோழியர் அனைவரும் பாவை நோன்பு இருக்கும் இடத்திற்கு சென்றாகிவிட்டது.

கீழ் வானத்தில் வெள்ளி முளைத்துவிட்டது, வியாழன் மறைந்து விட்டது.பறைவகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற அழகிய

கண்களை உடையவளே, விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும், எழாமல் இருப்பது ஏன்?உடல் நடுங்கும்படி குளீர்ந்த நீரில்

நீச்சல் அடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்த கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே, மார்கழியில் அவனை

நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? உனக்கு ஏன் இந்த திருட்டு தூக்கம், எழுந்து எங்களுடன் வா,,
  

Monday 26 December 2016

நோற்றுச் சுவர்க்கம்

             

                      நோற்றுச் சுவர்க்கம்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?

ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.


       முற்பிறவியில் நாராயணன் நாமம் சொல்லி வாழ்ந்ததால் இந்த பிறவியில்  இப்படி

ஒரு  சொர்க்கம் போன்ற சொகுசான வாழ்க்கை வாழ்கிறாய்,, நீ கதவை திறக்காவிட்டாலும் 

பராவியில்லை,, பேசவும் மாட்டாயோ,, நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்துள்ள 

நாராயணனை நாம் போற்றி  பாடினால் அவன் நம் நோன்பிற்குரிய பலனை 

உடனே தருவான்.   தூக்கத்திற்கு கும்பகர்னனை உதாரணமாக சொல்வார்கள்,, உன் 

தூக்கத்தைப் பார்த்தால் நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் இருக்கிறது.

 சோம்பல் திலகமே, கிடைததற்கரிய அணிகலனே,  எந்த தடுமாற்றமும்  

 இல்லாமல் கதவை திறந்து வா,,


   

                     

Friday 23 December 2016

தூமணி மாடத்து




தூமணி மாடத்து

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்

    தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

      மாமான் மகளே! மணிக் கதவம் தாழ்திறவாய்

   மாமீர்! அவளை எழுப்பீரோ?* உன்மகள்தான்

   ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

    மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

  நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்

விளக்கம்
அதிக பிரகாசமான நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றும்
 சூழ விளக்குகள் ஏற்றபட்டு வெளிச்சம் உமிழ, நறுமணதிரவியம் மனம் வீச ,பஞ்சுமெத்தையில் உறங்கும் என் மாமன் மகளே கதவை திற, வா, என் அன்பு மாமியே அவளை எழுப்பி விடுங்கள், எத்தனை நேரமாக அவளை நாங்கள் அழைக்கிறோம்,, உன் மகள் தான்,, என்ன செவிடா? ஊமையாக மாறிவிட்டாளா?,சோம்பேறி,,, இல்லை, மாய மந்திரத்தில் கட்டுன்டு கிடக்கிறாளா? எழுந்திரு,,,
மாயவன் மாதவன் வைகுந்தன் என அவன் நாமத்தை சொல்
எழு,,



தொடர்புடைய படம்

கீழ்வானம் வெள்ளென்று

                    
                        கீழ்வானம் வெள்ளென்று


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

வான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்

கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய

பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்.



             




Thursday 22 December 2016



                        கீசுகீசு என்று 

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து

வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ?

தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய்.