Sunday 31 May 2015

தமிழ் நாடகம் வளர்ந்த கதை ii

தமிழ் நாடகம் வளர்ந்த கதை

இதன் வேர்ச்சொல் வேறு, அது எது?
அதற்குமுன் நீங்கள் வேறு ஒன்றினைத் தெரிந்துக்கொள்ளுதல் அவசியமாகப்பட்டது எனக்கு,
அது என் எழுத்துக்கு வலுசேர்ப்பதும் கூட,
டார்வின் கோட்பாடு,
என்ன நாடகம் வளர்ந்த கதைச் சொல்லச்சொன்னால் இவுங்க தியரி எல்லாம் போறாங்க என்று முனுமுனுப்பது கேட்கிறது.
பயப்பட வேண்டாம் ரொம்ப அறுக்கமாட்டேன்.
சரி,
இன்று மேன்மை மிகுந்த அறிவு படைத்த மனிதனின் வேராக, பிள்ளையார் சுழியாக இருந்த ஆதி உயிரினம் எது தெரியுமா?
பிள்ளையாரின் வாகனமான,
என்ன?
வேண்டாம் வேண்டாம்,,,,,
முஞ்சுறுதான்,,,,,,,,,
அல்லது வௌவ்வால்
இது ஓர் ஊகமான கருத்தாக எழுந்தது,

   மனிதனின் முன்னோடி உயிரினங்களைப் பிரிமேட்ஸ் (Primates) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
 primates க்கான பட முடிவு

இதன் வழிவந்த இனங்களில் ஷ்ரு (Shrew) என்ற அணில் போன்ற உயிரினத்தை மனித இனத்தின் ஆரம்ப முன்னோடியாக கருதினர். முக்கும் முழியுமாக இருக்கும் தேவாங்கு இனத்தின் முன்னோடி அதுவே என்றும் ஷ்ருவைக் கூறுவார்கள்.
shrew க்கான பட முடிவு (Shrew)
    ஷ்ரு (Shrew) என்ற உயிரினம் துறுதுறுவென்று பார்க்கும் இயல்பு கொண்டது,நிலத்திலும் மரத்திலும் தன் இனத்தோடு கூட்டமாகக் கூடியும் வாழும் குணமுடையது.
 இதன் வழிவந்த உயிரினமாக லெமுர் (Lemur) என்பதைக் கூறுவார்கள். 
lemur க்கான பட முடிவு (Lemur)
லெமுரும் ஷ்ருவைப் போலவே மரத்திலும் நிலத்திலும் வாழக்கூடியது. குரங்குகளைப் போலத் தன் இனத்தோடு கூடி வாழும் குணமுடையது. இதன் வழிவந்த வாரிசாக டார்சிர் (Tarsier) என்ற இனத்தைக் கூறுவார்.
tarsier க்கான பட முடிவு (Tarsier)
டார்சிரின் கண்கள் அகன்று பெரிதாகப் பளிங்கு போல் பளபள என மின்னும். இவையும் தன் முன்னோடிகளைப் போலக் கூடி வாழும் குணத்தைக் கொண்டிருந்தன.இந்த இனத்தின் வழிவந்த இனமே தேவாங்கு (Sloth)என்பர்.
sloth க்கான பட முடிவு (Sloth)
தேவாங்கு மரத்தில் ஏறியும் ஊஞ்சலாடியும் வாழ்வதில் குரங்கை ஒத்து விளங்கும் உயிரினமாகும்.

தேவாங்கில் இருந்து பரிணமித்த விலங்கினமே குரங்குகள்.
monkey க்கான பட முடிவு (Monkey)


குரங்கினத்தில் ஆயிரக் கணக்கான வகைகள் உண்டு என்பர். அதில் வால்குறைந்தும் முற்றிலுமாக மறைந்தும் பரிணமித்த மனிதக் குரங்குகள் தோன்றின. நான்கு கால்களால் நடந்தும் முன்னிரு கால்களைத் தூக்கி மனிதர்களைப் போலவே இரண்டு கால்களால் நடந்த குரங்கினங்கள் தோன்றின.அவற்றை மனிதக் குரங்கு (Ape ) என்று பொதுவாக வகைப்படுத்துவர்.
ape க்கான பட முடிவு (Ape)
மனிதக் குரங்கில் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் சில வகைகள் உண்டு. பபூன்(Baboon) என்ற மனிதக் குரங்கு வகை மிகப் பெரிய உருவம் உடையது.
baboon க்கான பட முடிவு
                                                                                              (Baboon)
இன்று மனிதர்களுக்கு இருப்பதைப் போன்றே, சிங்கப் பற்கள் நான்கு அதற்கு உண்டு. நான் சொல்லப்பா,,,,,,,,,,
gibbon க்கான பட முடிவு (Gibbon)
மனிதக் குரங்கினத்தில் கிப்பன் (Gibbon) என்ற வகை மெலிந்த உடலும் உடம்பெல்லாம் உரோமங்கள் நிறைந்தும் காணப்படும்.
orangutan க்கான பட முடிவு  (Orangutan)
உராங்குட்டான் (Orangutan) என்ற மனிதக் குரங்கு உடம்பெல்லாம் சடைமுடிகள் நிறைந்த தோற்றம் கொண்டது.
gorilla க்கான பட முடிவு (Gorilla)
கொரில்லா (Gorilla) என்ற வகை மனிதக் குரங்கு கால்களும் கைகளும் பருத்துத் தொந்தியும் தொப்பையுமாகத் தோன்றும்.
chimpanzee க்கான பட முடிவு (Chimpanzee)
         சிம்பன்சி (Chimpanzee) என்ற மனிதக் குரங்கு மனிதனைப் போலவே அச்சு அசலாக இருக்கும். மனித இனம் சிம்பன்சி வகையிலிருந்தே பரிணமத்தது என்று கருதுகிறார்கள்.
சிம்பன்சி மனிதர்களைப் போன்றே சிரிக்கும், நையாண்டி செய்யும், கோபப்படும், தன் குட்டிக்கு ஒன்று என்றால் தலையில் கைவைத்து அழும், மனிதரால் காட்ட முடிகிற அத்துனை பாவங்களையும் அது காட்டும். இன்றைய நாடகத்தில் ஒரு கைதேர்ந்த கலைஞன் நடிப்பதைப் போலவே பலவகையான முகபாவனைகளை அதனால் காட்ட முடியும். மனித இனத்தின் நாடக நடிப்புக் கலை சிம்பன்சி குரங்கு இனத்தின் காலத்திலேயே உருவாகிவிட்டது, என்றே இதனைப் பின்வரும் சிம்பன்சி உருவப் படங்கள் காட்டும்.
    
chimpanzee க்கான பட முடிவு     chimpanzee க்கான பட முடிவு



chimpanzee க்கான பட முடிவு    chimpanzee க்கான பட முடிவு


chimpanzee க்கான பட முடிவு     chimpanzee க்கான பட முடிவு


chimpanzee க்கான பட முடிவு 
படங்கள் நன்றி கூகுல்    chimpanzee க்கான பட முடிவு
   
ஹப்பா இப்பவே கண்ணக்கட்டுதே,,,,,,,,,,,,,,
என்னங்க? எப்படி?  சரி சரி முறைக்காதீர்கள்,
என்னால் முடியலப்பா,கொஞ்சம் இருங்க இதோ வருகிறேன்.
நீங்க எங்க போறீங்க? இது எப்படி என்று சொல்லிட்டு போங்க,,,,,,,
கோட்பாடு வந்து சொல்கிறேன்.



Tuesday 26 May 2015

புணர்தல் எனும் இயற்கை ii




              இயற்கை செயற்கையானது


             இயல்புப் புணர்ச்சி என்றால், இரு சொற்களும் எந்தவிதத்திலும் மாறாது. காந்தத்தை அருகருகே வைத்தால் பச்சக் என்று ஒட்டிக்கொள்வதுபோல் ஒட்டிக்கொண்டு, அதேபோல் நிற்கும் என்று சென்ற பதிவில் பார்த்தோம்.

நிலைமொழி வருமொழியுடன் புணரும்பொழுது, அவ்விரு சொற்களில் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ ஏதேனும் எழுத்து மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும். விகாரப் புணர்ச்சியை நன்னூலார் தோன்றல் விகாரம், திரிதல் விகாரம், கெடுதல் விகாரம் என மூன்று வகைப்படுத்திக் காட்டுகிறார். இம்மூவகை விகாரங்களும் நிலைமொழியாகவும், வருமொழியாகவும் வரும் சொற்களின் முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் நிகழும் என்று அவர் கூறுகிறார்.

தோன்றல்,திரிதல்,கெடுதல்,விகாரம்
மூன்றும் மொழிமூ இடத்தும் இயலும்
                        என்பது நன்னூல் நூற்பா (154)
 மொழி = சொல்
மூ இடத்தும் = சொல்லின் முதல், இடை, கடை
ஆகிய மூன்று இடங்களிலும்.
அதாவது,
         பூ + மாலை = பூமாலை. இந்தப் புதிய சொல்லில் பூவும் உள்ளது, ‘மாலையும் உள்ளது, இரண்டும் இயல்பாகச் சேர்ந்துள்ளன. ஆகவே, அது இயல்பு புணர்ச்சி.
     இப்போது, ‘பூவை அப்படியே வைத்துக்கொள்வோம், ‘மாலைக்குப் பதில், அதே பொருள் தரும் இன்னொரு சொல்லாகிய சரம்என்பதைப் பயன்படுத்துவோம். பூ + சரம் என்பது எப்படிப் புணரும்?
         பூசரம்என்று புணர்ந்தால் அது இயல்பு புணர்ச்சி. ஆனால் அவை பூச்சரம்என்றுதான் புணரும்!
       இங்கே நடுவில் ஓர் ச்ஏன் வந்தது, எப்படி வந்தது என்றெல்லாம் பின்னர் விரிவாகப் படிக்கலாம், இப்போதைக்கு, ‘பூமாலைஎன்பதும் பூச்சரம்என்பதும் ஒரேமாதிரி புணர்ச்சி அல்ல என்பதைமட்டும் கவனித்தால் போதும்.
       பூமாலைஎன்ற சொல்லில், ‘பூ’, ‘மாலைஆகிய சொற்கள் இயல்பாக அமைந்திருப்பதுபோல, ‘பூச்சரம்என்ற சொல்லில் பூ’, ‘சரம்ஆகியவை அமையவில்லை. ஏதோ விகாரம் நடந்திருக்கிறது.
             இதைதான் நாம் மேலேப் பார்த்த நூற்பா விளக்குகிறது. அதான் விகாரப் புணர்ச்சிஎன்கிறோம். அதில் மொத்தம் மூன்று வகைகள் உண்டு:
தோன்றல் -           ஒரு புதிய எழுத்து தோன்றுதல்
 திரிதல்       -           ஓர் எழுத்து இன்னோர் எழுத்தாக மாறுதல்
கெடுதல்    -           ஏற்கெனவே உள்ள ஓர் எழுத்து நீங்குதல்
உதாரணங்களுடன் பார்ப்போம்,
முதலில் தோன்றல் பார்ப்போம்,
    பூ + சரம் = பூச்சரம்
       இங்கே பூ’, ‘சரம்ஆகியவற்றுடன், ‘ச்என்ற புதிய எழுத்து தோன்றியிருக்கிறது. அதுதான் தோன்றல் விகாரம்’.
இன்னும் சில உதாரணங்கள்
பூ+கொடி = பூங்கொடி
ங் என்ற எழுத்து தோன்றியது
யானை+கொம்பு = யானைக்கொம்பு
க் என்ற எழுத்து தோன்றியது
அன்பு+தொல்லை= அன்புத்தொல்லை
த் என்ற எழுத்து தோன்றியது

 அடுத்து திரிதல் விகாரம்
இரு சொற்களில், ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து இன்னோர் எழுத்தாகத் திரிதல் (மாறுதல்) திரிதல் விகாரம் எனப்படும்.
பொன்+குடம்=பொற்குடம்
          நிலைமொழி இறுதி ன் என்பது ற் எனத் திரிந்துள்ளது
சில நேரங்களில் நிலைமொழியின் இறுதி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் வேறு எழுத்தாகத் திரிதல் உண்டு.
பொன்+தாமரை=பொற்றாமரை
        நிலைமொழி இறுதி ன் என்பதும், வருமொழி முதல் த் என்பதும் ற் எனத் திரிந்துள்ளன.

அடுத்த விகாரம்  கெடுதல்
இரு சொற்களில் ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து மறைந்து போதல் கெடுதல் விகாரம் எனப்படும்.
கெடுதல்-மறைதல்
மரம்+நிழல்=மரநிழல்
                நிலை மொழி இறுதி ம் என்பது கெட்டது.
மரம்+வேர்=மரவேர்
                நிலை மொழி இறுதி ம் என்பது கெட்டது.
வந்தது, கெட்டது,போனது எல்லாம் சரி, ஆனா ஏன் எப்படி?
அதானே,
வரேன், காரணம் சொல்ல,
இதைப் பற்றிய தங்கள்,,,,,,,,,,,,,,,,,,,,,

Friday 22 May 2015

பயப்புள்ள ஒரு SMS கூட அனுப்புல

காதல் தோல்வி க்கான பட முடிவு
படம் நன்றி கூகுள்

பயப்புள்ள ஒரு SMS கூட அனுப்புல

             ஒரு செய்தி கூட இல்லை.வருகிறேன் என்றாய், கடவுள் மேல் சத்தியம் என்றாய், என் வாக்கு பொய்யில்லை என்றாய் இன்னும் காணவில்லை உன்னை. 

    தேம்பி தேம்பி அழும்,இடிந்து போன என் இதயத்தின் குமுறலை
விவரித்துச்சொல்ல முடியவில்லை,உன்னை மறக்க முடியவில்லை. நான் என்ன செய்ய, கடவுளே,

அய்யோ, சத்தியம் செய்தானே அவனைக் கடவுள் தண்டிக்குமோ, நான் என்ன செய்வேன், அவன் மேல் எந்தத் தவறும் இல்லையே, கடவுளே அவனை எதுவும் செய்து விடாதே,

ஆஹா ஹா ஹா ,,,,,,,,,, நான் ஒன்னும் இப்படியெல்லாம் புலம்பல, சங்கஇலக்கியத்தின் தலைவி,,,,,,,,,,,,,,,,
             காதலன் பிரிந்த துயரத்தால் வாடிப் புலம்பிய பெண்களைதான் இதுவரை நிறையப் பார்த்திருக்கிறோம், அந்தத் துன்பத்துக்கு நடுவிலும், அவன்மீது கொண்ட அக்கறையினால் தெய்வத்திடம் வாதாடும் இந்தக் காதலி, வித்தியாசமானவள்தான்

பார்ப்போம் வாருங்கள், 

மன்ற மராஅத்த பேஎம்முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம்என்ப; யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்
பசைஇப் பசந்தன்று, நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே

எனும் கபிலர் பாடிய குறுந்தொகைப் பாடல்.

   குறிஞ்சித் திணையில் உள்ள  காதலியைப் பிரிந்து சென்றான் அவள் காதலன், அப்போது கடவுள் மேல் ஆணையாக இந்தத் தேதிக்குள் திரும்பி வருவேன்என்று சத்தியம் செய்தான், ஆனால் அந்தத் தேதியில் வரவில்லை, இப்போது, காதலிக்கு இரண்டு பிரச்னைகள், ஒன்று, அவனைப் பிரிந்த துயரம், இன்னொன்று, சத்தியத்தை மீறிய அவனைக் கடவுள் தண்டிக்குமோ என்கிற கவலை. அவனுக்காகக் கடவுளிடம் பேசுகிறாள்

இந்த மன்றத்தின் மரங்களில் குடிகொண்டிருக்கும் முதிர்ந்த தெய்வங்களே, உங்களை வணங்குகிறேன், சொன்ன சொல் தவறுகிற கொடியவர்களை நீங்கள் தண்டித்துவிடுவீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபற்றி உங்களிடம் பேச வந்தேன்.

என் காதலன் கொடியவன் அல்லன். என்னிடம் அவன் திரும்பி வருவதாகச் சத்தியம் செய்தது உண்மைதான். உரிய காலத்தில் திரும்பாததும் உண்மைதான்.

       அவனால் என்னுடைய நெற்றியில் பசலை படர்ந்தது, தோளெல்லாம் நெகிழ்ந்துவிட்டது என்று ஊர் பேசுகிறது. இது உண்மை அல்ல, பொய்.

        என்னுடைய மனத்தில் அவன்மீது காதல் தோன்றியது. அது பெருகிய வேகத்தால்தான் என் நெற்றிமீது பசலை படர்ந்தது, தோள்கள் நெகிழ்ந்தன, இதற்கும் அவனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, எனக்காகக் கோபப்பட்டு அவனைத் தண்டித்துவிடாதீர்கள்.
என்று தன் காதலனுக்காகக் கரைகிறாள்.

எத்தகைய அன்பு பாருங்கள்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள். உங்கள் கருத்துக்கள் வேண்டி,


Tuesday 19 May 2015

புணர்தல் எனும் இயற்கை

புணர்தல் எனும் இயற்கை

         கண்ணகி என்றால் கடுகிப் போ
         மாதவி என்றால் மடிமேல் வா

        என்று கோவலன் மாதவியைத் தேடிச்சென்றான்.
ஆனால்,,,,,,,,,, ஆஹா, நான் என்ன நடத்த வந்து என்ன நடத்துகிறேன். என்ன பாடம் ஆரம்பிக்கலாம் தானே, நான் சொல்ல வந்த பாடம் இதுவல்ல, பொதுவாக இந்தச் சொல்லை நாம் பாலியல் சார்ந்த அர்த்த்திலேயே பயன்படுத்தியதால் புணர்ச்சி என்றால் அப்படியே பார்க்கிறோம். அப்படியும், இரண்டு உயிர்கள் தம்முள் புணர்வது புணர்ச்சி எனப்படும். அதனை எல்லாவற்றிர்க்கும் பயன்படுத்தலாம்.
     இங்கு இலக்கணத்தில் இரண்டு தம்முள் புணரும் போது, அதாவது இரணடு சொற்கள் தம்முள் சேர்தலை இலக்கண ஆசிரியர்கள் புணர்ச்சி என்றனர்.
      இதன் பொருள் சேர்தல்,கூடுதல் என்பது, இரு சொற்கள் ஒன்றோடு ஒன்று சேரும் போது இரண்டு வகையான புணர்ச்சிகள் நடைப்பெறும்.
1.இயல்புப் புணர்ச்சி
2.விகாரப் புணர்ச்சி
இயல்புப் புணர்ச்சி
என்றால் இரு சொற்கள் சேரும் போது எந்த மாற்றமும் நிகழாது. 
இது இயல்புப் புணர்ச்சி.
இரு சொற்கள் என்பது நிலைமொழி வருமொழி
  அப்படின்னா?
   அதான்
பூ+மாலை
இதில் பூ என்பது நிலைமொழி,
மாலை என்பது வருமொழி,
இன்னும் எளிமையா
+ க்கு முன்னால் உள்ளது நிலைமொழி, பின்னால் உள்ளது வருமொழி.
சரியா,
இப்ப இதனையே எடுத்துக்கொள்வோம்.
பூ+மாலை இது இரண்டும் சேர்ந்தால்
பூமாலை
அதானே, இதில் ஒன்னுமே ஆகலை இல்லையா?
அதான் இயல்புப் புணர்ச்சி.
சரிங்க
விகாரப் புணர்ச்சி ஏதாவது வரும்.
அதான்,
சரியா சொன்னீங்க
எப்படி?
இந்த பூ அப்படியே இருக்கட்டும்.
மாலைக்கு பதில் வேறு சொல் எடுத்துக்கொளவோம்.
 சரம்
இது எப்படி புணரும்.
             பூ+சரம் 
இது பூச்சரம் என்றாகும்.
   இல்ல, 
ஏன் ச் வரனும் என்று நமக்கு தோன்றும். அது அப்படித்தான் என்று சொன்னால் என்ன ஆகும். என் மேல் கோபம் கன்னா பின்னா என்று வரும்.
  நான் அப்படி சொல்ல மாட்டேன், அதற்கும் ஒரு விதி இருக்கு. அதைப் பின்னால் சொல்கிறேன். இப்ப பூச்சரம்,
  இங்கு இடையில் ஏதோ நடந்து இருக்கு,
  அது என்ன?
ச் தோன்றி இருக்கில்லையா? இது தான் விகாரப் புணர்ச்சி என்கிறார்கள்.
        இது 3 இடங்களில் வரும்

அதுக்கு முன்னாடி இயல்புப் புணர்ச்சி புரிந்ததா?

அப்படீன்னா இயல்பா புணரும் 10 சொற்கள் எழுதனும்.

    அய்யோ சும்மா சொன்னேன். படித்து கருத்து மட்டும் சொன்னால் அடுத்த விகாரப் புணர்ச்சி வருவேன்.


Saturday 16 May 2015

தமிழ் நாடகம் வளர்ந்த கதை 1

நாடகம் க்கான பட முடிவு

தமிழ் நாடகம் வளர்ந்த கதை

தொன்மைத் தமிழரின் வாழ்க்கையில் நாடகம் எந்தச் சூழலில் எப்படி தோன்றியது என்பதை அறிவதற்குமுன், கூத்து, நாடகம், நாட்டியம் முதலிய சொற்கள் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் பயின்று வந்துள்ள வழக்காறு மற்றும் அவற்றின் பொருள் பற்றிக் காண்பது முக்கியமில்லையா?
     கூத்து என்ற சொல், கலித்தொகை தவிர சங்கஇலக்கியங்களில் இல்லை. கலித்தொகைக்கு முந்திய திருக்குறளில் முதலிலும், கலித்தொகைக்குப் பிறகு சிலப்பதிகாரத்திலும் இடம்பெற்றது.
கூத்துஆட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுஇளிந் தற்று (குறள் 332)

வீழ்க்கைப் பெருங்கருங் கூத்து (கலித் 65)

செருக்குறித் தாரை உவகைக்கூத்து ஆட்டும்(கலித்85)

இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்து (சிலம்பு 3 12 13)

குமரிக் கோலத்து கூத்துள் படுமே (சிலம்பு 12)

கூத்துள் படுவோன் காட்டிய முறைமையின் (சிலம்பு 26)

என்ற அடிகளில் கூத்து என்ற சொல்லாட்சியைப் பார்க்கலாம். இதற்கு முன் இச்சொல் தமிழ்ப் பரப்பில் வேறெங்கும் இல்லை.
      ஆனால் தொல்காப்பியத்திலும் சங்கப்பாடல்களிலும் (கலித்தொகை தவிர) கூத்து என்ற சொல் இல்லாவிட்டாலும் கூத்தர் என்ற சொல் உண்டு. இச்சொல்லும் மிக அரிதாகவே பயின்று வந்துள்ளது.
  குதிப்பது கூத்து என்பர் சிலர். அது தவறு என்கிறார் ஆய்வாளர் வெ.மு.ஷாஐகான் கனி.அதனை ஏற்றுக்கொண்டே என் ஆய்வு தொடர்ந்த்து,
  அதன் ஏற்பு இப்படி தான்
 கூத்து, கூம்பு, கூடு, கூட்டு என்னும் சொற்களுக்கு வேர்ச் சொல் கூ என்பது கூ கூடு கூட்டு கூது என்னும் வடிவம் கன்னட மொழியில் உள்ளது. கூ என்பது ஒன்றுசேர் என்னும் பொருண்மையுடையது. கூத்து என்பது கூடி ஆடும் ஆட்டம் குறிப்பது என்று வீ.ப.கா. சுந்தரம் அவர்கள் தம் கலைக்களஞ்சியம் இரண்டாம் தொகுதியில் குறித்துச் செல்கிறார்.(பக்கம் 198)
கூத்து கூடியாட்டமாயின், வேலன் காந்தள் என்னும் கூடியாட்டம் ஆடிய வெட்சிக் காலத்திலேயே இச்சொல் வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. இதன் வேர்ச்சொல் வேறு. அது எது?




Tuesday 12 May 2015

ஓரெழுத்து சொல்



ஓரெழுத்து சொல்

      ஓரெழுத்துக் கூட ஒரு சொல்லாகப் பொருள் தரும் சூழ்நிலை தமிழில் உண்டு. அதனை அன்றைய மரபுக் கவிதைகளில் காணலாம். தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.
         ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர்.
         உதாரணமாக தை.. இந்த தைஎன்ற எழுத்தானது தமிழ் மாதங்களில் வரும் மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து தைத்தல்” “பொருத்துதல்என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதே ஒரேழுத்து ஒரு மொழியாகும்.
அதனைக் காண்போமே,

- எட்டு சிவன், விஷ்ணு, பிரம்மா 
- பசு,ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்

- கொடு, பறக்கும் பூச்சி
- சிவன்
- தசை, இறைச்சி
- அம்பு
- ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
-வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா - சோலை, காத்தல்
கூ - பூமி, கூவுதல்
கை - கரம், உறுப்பு
கோ - அரசன், தலைவன், இறைவன்
சா -இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ - இகழ்ச்சி, திருமகள்
சே - எருது, அழிஞ்சில் மரம்
சோ - மதில்
தா - கொடு, கேட்பது
தீ - நெருப்பு
து - கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ - வெண்மை, தூய்மை
தே - நாயகன், தெய்வம்
தை - மாதம்
நா - நாக்கு
நீ - நின்னை
நே - அன்பு, நேயம்
நை - வருந்து, நைதல்
நொ - நொண்டி, துன்பம்
நோ - நோவு, வருத்தம்
நௌ - மரக்கலம்
பா - பாட்டு, நிழல், அழகு
பூ - மலர்
பே - மேகம், நுரை, அழகு
பை - பாம்புப் படம், பசுமை, உறை
போ- செல்
மா - மாமரம், பெரிய, விலங்கு
மீ - ஆகாயம், மேலே, உயரம்
மு -மூப்பு
மூ - மூன்று
மே - மேன்மை, மேல்
மை - அஞ்சனம், கண்மை, இருள்
மோ - முகர்தல், மோதல்
யா - அகலம், மரம்
வா - அழைத்தல்
வீ - பறவை, பூ, அழகு
வை - வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ - கௌவுதல், கொள்ளை அடித்தல்

    இன்றைய தொழில்நுட்ப உலகில் அழைப்பேசி, கணனி, இணையம் போன்றவற்றின் வருகை பல ஓரெழுத்து ஒரு சொற்களை இளம் தலைமுறையினரிடம் தோற்றுவித்துள்ளன. அவை இலக்கணம் ஆகா.