Tuesday 17 February 2015

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.







 

மெல்ல அடி எடுத்து
மலர் மாலை தரை துவள
சுயம்வரத்தில் வலம் வந்தாள்
சுற்றியுள்ளோர் வாய்பிளக்க,
வழிமறைத்த நரைக்கிழவன் தான்டி
வலம் திரும்பி சால்வனவன் இடம் நோக்கி
நடக்கின்றாள்.
போர் என்று குரல் கொடுத்தான் பொல்லாத பீஷ்மன்.
மெல்ல திரும்பிவிட்டு
மேலும் நடக்கின்றாள்.
ஆனால்
கிழவன் அள்ளிச்சென்றான்.
சால்வன் மட்டும்
தொடர்ந்து வந்து போரிட்டு
தோற்றுப்போகின்றான்.
பீஷ்மர் அத்தினாபுரம் போய் சேந்தார்.
                  விசித்திரவீரியனுக்கு 3 பெண்களையும்
             விவாகம் செய்ய ஏற்பாடுகள் செய்தான் 
             நரைக்கிழவன்.
கல்யாணப்பந்தலில் எல்லோரும் கூடியிலுக்கும் சமயத்தில்
அவள்
பீஷ்மரை நோக்கி நகைத்தவளாக
கங்கைப்புத்திரரே
தர்மம் அறிந்தவரே
நான்
சௌபல தேசத்து ராஜாவான சால்வனை
மனதில் புருஷனாக கொண்டுவிட்டேன் என்றாள்.



                         விசித்திரவீரியன் வேண்டாம் என  கூற,
                         காதலனை தேடிப்போ என பீஷ்மன்விட
                         காதலனும் கைவிரிக்க
                         வீரியனும் மறுத்துவிட
பீஷ்மனையே அடிபணிந்து தனையேற்கக் கதறியழ
நரைக்கிழவன் தன் விரதம் பெரிது என்றான்.

                         அத்தினாபுரத்துக்கும் சால்வன்
                         அரண்மனைக்கும் பலமுறை
                         அலைந்ததை
                         ஆறுவருட அழுகையை
                         ஒவ்வெருவரிடமும் தன்
                         கதையைச் சொல்லி
                         உதவி கேட்டதை
எதைச்சொல்வது இங்கே.

இதுதான் தலைவிதி என்று முடங்கிவிடவில்லை.

  ஆறுமுகன் கொடுத்த மாலையுடன் பலரிடம் பீஷ்மரிடம் போர் செய்யச்சொன்னால் எல்லோரும் மறுத்தனர்.

பரசுராமரிடம் சென்றாள்.  பீஷ்மரின் மரணமே நான் விரும்பும் வரம் என்றாள்.  பரசுராமரும் போரிட்டு தோற்றார்.

இதனால்
வேதனையுடன் இமயமலையில் பரமேசுவரனை நோக்கி தவம் இருந்து வரம் பெற்றாள்.

பரமேசுவரன் வரம்படி மறுபிறப்பு அடைந்து
துருபத அரசனுக்கு மகளாய் பிறந்து முருகன் கொடுத்த மாலையை தானே கழுத்தில் அணிந்து தந்தையால் காட்டிற்கு விரட்டப்பட்டாள்.

      அங்கு கடும் தவம் புரிந்து ஆண் தன்மை அடைந்து சிகண்டி என்கிற வீரனாக மாறிவிட்டாள். அருச்சுனன் சிகண்டியைத் தன்னுடைய தேர்பாகனாக கொண்டு பாரத யுத்தத்தில் பீஷ்மரை அம்பால் வீழ்த்தினாள்.

அவள் தான் காசி ராஜனின் மகள் அம்பை.

    சுயம்வரத்தின் ஒழுங்கினை மீறி பெண்ணின் மனநிலையை அறியாமல் அவள் வாழ்வை திசைமாற்றிய பிரமச்சாரி ஏன் சுயம்வரத்திற்கு வரவேண்டும்.அவரின் தடுமாறிய நிலைக்கு அம்பை கொடுத்த தண்டனை இது.

பாரதம் சொல்லியது, நான் ஏற்கிறேன். இதன் அடிப்படையில்

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.



24 comments:

  1. உண்மை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பு வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  2. அருமை...

    சொன்னவிதம் சிறப்பு...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தங்களின் வாழ்துகள் நெறிப்படுத்தலும் தான் என்னை ஊக்கப்படுத்தும். தொடந்து வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் பல

    ReplyDelete
  4. நியாயம் தான்!..

    மகளின் மனோநிலையை அறியாமல் -
    சுயம்வரத்திற்கு நாள் குறித்த காசிராஜன்!..

    சுயம்வரம் என்றதும் தன் மனநிலையைத்
    தந்தையிடம் தெரிவிக்காத அம்பை!..

    பரசுராமன் தோற்றுப் போனாலும் நான் வெல்வேன்!..
    - என்று, என்ன ஒரு மனோதிடம்!..

    பீஷ்மர் - சிகண்டியை எதிர்த்து போர் புரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    வாழ்க பாரதம்!..

    இப்படியெல்லாம் பதிவு செய்து விட்டு -
    சும்மா கிறுக்கியிருக்கின்றேன் என்று சொல்கின்றீர்களே!?..

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் சொல்வது உண்மையே. தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  5. அருமை சகோ நல்ல சொல்லாடல்களில் தங்கள் எழுத்தின் நடையழகு
    Follower – இணைப்பு சேருங்கள்.
    வாழ்த்துகளுடன்.
    கில்லர்ஜி.

    ReplyDelete
  6. தங்களின் அன்பு வருகைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  7. கருத்து மிக அருமை. எனது வலைப்பூவுக்கு வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி. எனது வலைப்பூவின் உறுப்பினராக சேர்ந்து தொடர்ந்து கருத்துக்களை சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள். தங்களுக்கு என் அன்பின் வாழ்த்துகளும், நன்றியும்.

      Delete
  8. கருத்து மிக அருமை. எனது வலைப்பூவுக்கு வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி. எனது வலைப்பூவின் உறுப்பினராக சேர்ந்து தொடர்ந்து கருத்துக்களை சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள். தங்களுக்கு என் அன்பின் வாழ்த்துகளும், நன்றியும்.

      Delete
  9. நயம் படச் சொல்லி இருக்கிறீர்கள் மகேஷ்வரி. சொல்லிச் செல்கிற விதம் கவர்கிறது...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் உமையாள். தங்களுக்கு என் அன்பின் வாழ்த்துகளும், நன்றியும்.

      Delete
  10. பெண்ணின் பெருமை, தோல்வி, வெற்றி, வைராக்கியம் போன்ற அனைத்தையும் பாரத கதைமூலம் சிறப்பாக பதிவு செய்த சகோதரிக்கு வாழ்த்துக்கள். நன்றி.

    sattia vingadassamy

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள். தங்களுக்கு என் அன்பின் வாழ்த்துகளும், நன்றியும்.

      Delete
  11. கவ்விய சூதினை சூளுரைத்தாய்
    கவிதாயினி!
    பா ரதம் பூட்டி
    பாரதம் படித்தாய்
    வடித்தாய் கவிசரம்
    முடிவில்
    வென்றதுவே தர்ம சக்கரம்!
    அருமை!

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  12. தங்கள் கவி வாழ்த்துக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  13. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  14. பாரதத்தின் இந்த கட்சிகளை இதற்க்கு முன் அறிந்திராத எனக்கு உங்களின் படைப்பு அறிமுகபடுத்தியமைக்கு நன்றி.
    மெருகேறிய உங்கள் எழுத்துக்கள் பாராட்டிற்குரியவை.

    கோ

    ReplyDelete
  15. வாருங்கள் கோ, தங்கள் பாராட்டிற்கும் வருகைக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  16. அட அருமை அருமை வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  17. ஆஹா வாங்கம்மா,,,
    என் பழய படைப்புகளும் தங்கள் பார்வையில் பட்டதே,,
    நன்றி நன்றிமா,,,,,,,,,,,, மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.

    ReplyDelete
  18. Translation:
    Dharma might be shadowed by Adharma but
    at the end only Dharma will triumph

    ReplyDelete