Monday, 9 January 2017

                       
                               நாயகனாய் நின்ற

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய


கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண


வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்


ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை


மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்


தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்


வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ


நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.






                          அம்பரமே தண்ணீரே

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்


எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!


கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே!


எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்


அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த


உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்


செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!


உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.


                 
                                                                        


                                                                                  உந்துமத களிற்றன்

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்

வந்துஎங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


 



                  குத்து விளக்கெரிய (குத்து விளக்கு எரிய)



குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்


மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்


கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்


வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்


மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை


எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்


எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால்


தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.






                             முப்பத்து மூவர்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று


கப்பம் தவிர்க்கும் கலையே! துயிலெழாய்


செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு


வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்


செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்


நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்


உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை


இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்




11 comments:

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. சூப்பர் கோலங்கள்!

    ReplyDelete
  3. கோலங்கள் அழகு.


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. பேராசிரியருக்கு,

    கோலங்கள் அருமை, கோலங்களின் அழகினை கவிதையோடு சொல்லி இருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன் , அதன் அர்த்தத்தையும் சொல்லி இருந்தால் என்போன்றோர்க்கு புரிந்துகொள்ள வசதியதாக இருந்திருக்கும்.

    வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete
  5. வணக்கம் பேராசிரியரே !

    காலம் இனிக்கக் கடைந்தவலி நீரெழுத்தாய்
    சீலம் கடக்கச் சிதைந்தவிழி மீழுயிர்த்து
    சாலச் சிறந்த சந்ததிக்கும் வாழ்வுதரக்
    கோல அழகில் கொடுத்தகவி பேரழகே !

    அற்புதம் தொடர வாழ்த்துகள் !

    ReplyDelete