Thursday, 29 December 2016

உங்கள் புழக்கடை

             
                          உங்கள் புழக்கடை

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்


செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்


தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்


எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்


நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!


சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்


பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.






விளக்கம்

   உங்கள் வீட்டின் பின் வாசலிலுள்ள தோட்டத்தின் குளத்தில் செங்கழுநீர் மலர்கள்  மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலைகவிழ்ந்தன.காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஓளிவீச கோயில்களை நோக்கி திரிசங்கு  ஊத சென்றுவிட்டனர். ஆனால் பெண்ணே சங்கும் சக்கரமும் ஏந்திய கரங்களை உடையவனும், அழகிய தாமரை மலர் போன்ற கண்களை உடையவனுமான கண்ணனைப் பாட நீ இன்னும் எழாமல் இருக்கிறாயே, நேற்று நீ என்ன சொன்னாய்,, நாளை நான் முன்பே எழுந்து வந்து உங்கள் எல்லோரையும் எழுப்புவேன் என்று வீரம் பேசினாயே, கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே,, வா,,  எழுந்து வா,,

15 comments:

  1. சிந்திக்க வைக்கும் பதிவு

    சிறந்த தமிழ் மொழி நடை

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும்

      Delete
  2. வணக்கம் சகோதரி

    மார்கழி மாதத்திற்குரிய சிறந்த பதிவு. எளிய நடையில் பாட்டின் பொருள் பரியும்படி அருமையாய் விளக்கம் தந்து எழுதியிருக்கிறீர்கள். கோலங்களும் மிக அழகு. தொடர்கிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி,, எளிய நடையில் சொல்ல விரும்பினேன். நன்றி.

      Delete
  3. பாட்டு கோலம் மட்டும் தானா?..

    பொங்கல் புளியோதரை எல்லாம் எங்கே!?..

    ReplyDelete
    Replies
    1. சரி சரி அதையும் போட்டுட்டா போச்சு படமா,, ஹாஹாஹா

      நன்றி நன்றி

      Delete
  4. Replies
    1. நன்றி நன்றி டிடி சார்

      Delete
  5. கலை வாழ்க... தமிழ் வாழ்க.. ரசித்தேன்.

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு. கோலமும் வித்தியாசமாய்.

    ReplyDelete
  7. தாமரை கன்னங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன் "தாமரை கண்கள்" கொஞ்சம் புதிய தகவல்.

    பதிவுதோறும் புது செய்தி பதிக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

    அருமை, வாழ்த்துக்கள் .

    கோ

    ReplyDelete
  8. பாடலின் கருத்து என் அம்மா அவர் மொழியில் என்னை எழுப்புவது போன்று உள்ளது

    ReplyDelete