கற்றுக் கறவை
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே!
புற்றுஅரவு அல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
விளக்கம்
கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால்கறப்பவனும், தங்களை
பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனுமான
கோபாலனை குற்றமற்ற அன்போடு நேசிக்கிறாய், பொற்கொடியே, அழகியே,
மயில்போன்றவளே, நம் சுற்றுப் புறத்தில் உள்ள தோழியர் அனைவரும் உன்
வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டனர்.மேகவண்ணனாகிய கண்ணனைப்
புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கிறார்கள், பொறுப்பானவளே,பெண்மையை
புனிதமாய் காப்பவளே,, இவையெல்லாவற்றையும் கேட்டும் அசையாமலும்
பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே, இந்த அர்த்தமற்ற உறக்கம்
தேவையா? அதனால் என்ன பயன் உனக்கு, எழுந்து வா பாவையே
(இந்த மார்கழி கோலம் அல்ல,,,)
கனைத்திளம் கற்றெருமை
கனைத்திளம் கற்றெருமை
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால்சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்
பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள்
மடியில் சொறியும் பாலைச் சிந்தியபடியே அங்கும் இங்கும்
செல்கின்றன.அவை சொறிந்த பால் இல்லத்து வாசலை சேறாக்குகின்றது.
இந்த அளவுக்கு பால் சொறியும் எருமைகளுக்கு சொந்தகாரனான ஆயனின்
தங்கையே,கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, எருமைகள் சொறிந்த
பால் கால் நனைக்க, உன் வீட்டு வாசலில் காத்துகிடக்கின்றோம். சீதையை
கவர்ந்து சென்ற இராவணனை அழிக்க அவதாரம் எடுத்த கோமானாகிய அந்த
நாராயணனின் பெருமைகளை நாங்கள் பாடுகிறோம், நீயோ பேசாமல்
இருக்கிறாய், எல்லா வீடுகளிலும் உள்ள அனைவரும் எழுந்து வந்து விட்டனர்,
உனக்கு ஏன் இத்தனை பேருறக்கம்.
(இந்த மார்கழி கோலம் அல்ல,,,)
புள்ளின் வாய் கீண்டானைப்
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்
பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப்
பிளந்து அழிக்கவும், பிறன் மனை ஏகிய இராவணனின் தலையைக் கொய்யவும்
அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே நம் தோழியர்
அனைவரும் பாவை நோன்பு இருக்கும் இடத்திற்கு சென்றாகிவிட்டது.
கீழ் வானத்தில் வெள்ளி முளைத்துவிட்டது, வியாழன்
மறைந்து விட்டது.பறைவகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற அழகிய
கண்களை உடையவளே, விடியலை
உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும், எழாமல்
இருப்பது ஏன்?உடல் நடுங்கும்படி குளீர்ந்த நீரில்
நீச்சல் அடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்த கண்ணனை
நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே, மார்கழியில்
அவனை
நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? உனக்கு ஏன்
இந்த திருட்டு தூக்கம், எழுந்து எங்களுடன் வா,,
>>> நீச்சல் அடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்?..<<<
ReplyDeleteகுளிர் அதிகமாக இருக்கின்றது.. தோழியரே!..
சுள்.. என்று வெயில் கிளம்பியதும் போகக்கூடாதா!..
நீ வேற!.. அங்கே வலைப்பதிவுகள்..ல எல்லாம் போட்டு கலக்கிக்கிட்டு இருக்காங்க.. வெளிச்சத்துக்கு முன்னால போய் குளிச்சிட்டு வந்துடலாம்!.. வா!..
ஹா ஹா ஹா
Deleteஆமா சீக்கிரம் வந்து படித்துவிட்டு பொகனும்ல்ல,,
நன்றி நன்றி,,
அருமை
ReplyDeleteநன்றி நன்றி சகோ,,
Deleteஅருமை.....
ReplyDeleteநன்றி சகோ
Deleteஆகா...! ஒவ்வொன்றும் அருமை - விளக்கம் உட்பட...
ReplyDeleteநன்றி டிடி சார்,,
Deleteஅருமை. ரசித்தேன்.
ReplyDeleteநன்றி ஸ்ரீ
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteநன்றி சகோ
Delete