Thursday, 5 May 2016

கை நிறைய சம்பளம்

                                                கை நிறைய சம்பளம்

என்ன வேலைன்றத அப்புறம் சொல்கிறேன். முதல்ல சம்பளம் எவ்வளோ தெரியுமா??

கேட்டுக்க,

மாதச்சம்பளம் ரூபாய்  50,000.00

வேலைக்கு வர நாளுக்கு 2,000.00

செக்ரட்டரி வச்சுக்க இதர செலவுக்கு 45,000.00

(நீ யார செகரட்டரியா வைக்கிறன்னு கூட யாருக்கும் சொல்ல வேண்டாம்)

நீ வேலைக்கு போகும் போது ட்ரெய்ன்ல போனா ஃபர்ஸ்ட் க்ளாஸ் ட்ராவல்.
கார்ல போனா கீலோ மீட்டருக்கு 16 ரூபாய்,

சம்சாரத்தையும் கூட்டிக்கிட்டுப் போகலாம்.

உனக்கு ஒரு மொபைல், ஒரு லேன்ட் லைன் போன் ஃப்ரீ, எவ்வளவு வேணும்னாலும் பேசிக்கலாம்.

உனக்கு கார் வாங்க ரொக்கமா 4 லட்சம்,,

அய்யோ அய்யோ திருவிளையாடல் தருமி போல் எனக்கில்லை எனக்கில்லை,,,

அப்புறம் சொல்லு,,

தண்ணி, எலெக்ட்ரிசிட்டி  எல்லாம் ஃப்ரீ,,,

அடேங்கப்பா,,,

அதுக்கும் மேலே உனக்கு வாடகை இல்லா வீடு,,

மெடிக்கல் ஃபெசிலிட்டி,,,

அருமையான மெடிக்கல் இன்சுரன்ஸ் பாலிசி,,

உனக்கு கம்ப்யூட்டர் வாங்க 2 லட்சம்

பேப்பர் ப்ரிண்டருக்கு 50,000

ஐ பேட், WI FI ,இன்டர்நெட் எல்லாத்துக்கும் சேர்த்து மாதம் 5,000.00

வீடு, நீ இருக்கும் ஏரியாவை சரி பன்ன ஒரு 15 கோடி,,,

என்னது கோடியா?????????

ஒரு விசயம், இவ்வளவு தராங்களே வேலை ரொம்ப அதிகமா இருக்குமோன்னு பயந்துடாதே,, நீ வேலைக்கே வரவேணாம். இது எல்லாம் உன்னைத் தேடி வீட்டுக்கே வரும். கை எழுத்துக் கூட போடவேணாம்.

சரி யாராவது நான் வேலைக்கு வரல ன்னு போட்டுக்கொடுத்துட்டா,,

அட நீ வேற, இங்க யாரும் வேலைக்கே போறதுல்ல,,

என்ன தான் சொன்னாலும், இப்ப உடனே நான் வர முடியாதே , நான் வெளிநாட்டில் இல்ல இருக்கேன்,, இங்கேயும் நான் நல்லா தான் இருக்கேன். அதனால,,,,

அட நீ வேற, முட்டாள் தனமாகப் பேசாத. உன்னை யார் இங்க வான்னு சொன்னா,,, நீ அங்கேயே கூட இருக்கலாம்.

சரி வேலை பேரு என்ன?

ராஜ்யசபா MP

இது நான் சொல்லங்க,,

நம் விசு அவர்களின் விசுவாசமின் சகவாசம்  

                                           

நூலில் தான் ,,,
                                                                                                                     தொடரும்,,,


 காலத்திற்கேற்ற  செய்தி இல்ல,,,. படித்துப் பாருங்கள். நூல் முழுக்க நகைச்சுவையுடன் ஏராளமான கருத்துக்கள்,,

நீண்ட நாட்கள் ஆகிவிட்டன இந்நூலினைப் பெற்று படிக்க,, நூல் கொடுத்துதவிய திரு கீதா தில்லைஅகத்தார் அவர்களுக்கு நன்றிகள்

நூல் கிடைக்குமிடம்,
ழகரம் புத்தகச்சோலை
8/36 ஜோதி ராமலிங்கம் தெரு,
மேற்கு மாம்பலம்,
சென்னை-600003.
தில்லைஅகத்தாரிடமும்.

37 comments:

  1. பகிர்ந்திருக்கும் தகவலே நூலின் சுவாரஸ்யத்தைச் சொல்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஸ்ரீ

      Delete
  2. இந்த வேலையைக் கூட ,மல்லய்யாவால் காப்பாற்றிக்க முடியவில்லையே :)

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்ய, தெரியாமலே இருந்திருக்குமோ,,
      வருகைக்கு நன்றி பகவானே,

      Delete
  3. ஸ்வாரசியம்..... அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  4. இப்படியெல்லாம் இருந்தும்...

    அமைதி எங்கே?....

    ReplyDelete
    Replies
    1. தேடினாலும் கிடைக்குமா????,வருகைக்கு நன்றி

      Delete
  5. மிகவும் அமர்க்களமான நூல் அறிமுகம். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  6. சிறந்த நூல் அறிமுகம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மா

      Delete
  7. நான் யோசிக்கிறேன் இந்த வேலைக்கு நான் சரிப்படுமான்னு..

    ReplyDelete
    Replies
    1. நண்பர் விசுவாசம் அவர்களுக்கு வாழ்த்துகளும்...

      Delete
    2. வாங்க சகோ, ஏன் லேட்,

      அப்புறம் இந்த வேலைக்கு நீங்க ரொம்ப சரி பட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு வரு,,,,,,,,,,,,,,,வீங்க,, ஹாஹாஹா,,
      வருகைக்கு நன்றி சகோ,,

      Delete
  8. இந்த நூலை நானும் படிக்கவேண்டும்! அருமையான நூல் அறிமுகம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ,, படிங்க படிங்க ,,, வருகைக்கு நன்றி சகோ,,

      Delete
  9. தலைப்பையும் முதல்வரியையும் படிக்கும்போதே எனக்கு புரிந்துவிட்டது.... அது ஓட்டு பொறுக்கி திருட்டு வேலைதான்னு....

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் இவ்வளவு கோபம் ஆகாது வலிப்போக்கரே,,,
      நூல் ஆசிரியர் கொஞ்சம் நாசூக்காக சொன்னார்,,, நீங்கள்,,
      வருகைக்கு நன்றி வலிப்போக்கரே

      Delete
  10. பெனாமியாகவும் இருக்கலாமோ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  11. அருமை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  12. அறிமுகத்திற்கு நன்றி. ஆசிரியருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  13. Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  14. அடியேனின் எள்ளுருண்டையை அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி. தாம் புத்தகத்தை படித்து மட்டும் அல்லாமல் நேரம் எடுத்து .... கோடி நன்றி... பேராசிரியருக்கு .....

    ReplyDelete
    Replies
    1. எள்ளுருண்டை,,,, அருமை அருமை உண்மையிலே நூல் முழுக்க நகைச்சுவை தொனித்தாலும்,,, கருத்துக்கள் ஏராளம், நூல் இன்னும் ரவுண்டிங்கிலே இருக்கு,, நான் மீண்டும் படிக்கனும்,,,
      நன் தான் நன்றி சொல்லனும்,,,
      நன்றி சார்,,,

      Delete
  15. அட பாவிகளா 15 கோடியா...?
    எங்க வீட்ட சுத்தி 15 கோழி கூட இல்லைய்யா...!!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  16. ரசிக்க வைத்த வித்தியாசமான நூல் அறிமுகம். படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. பாராட்டுக்கள் மகி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  17. பேராசிரியரே,

    நண்பரின் நூல்கண்டின் நுனியை அறிமுகபடுத்தியமை கற்கண்டின் சுவையென இனிக்கிறது மனதிலும்.

    நன்றி.

    கோ

    ReplyDelete
    Replies
    1. அரசரின் வருகைக் கண்டு மனம் மகிழ்ச்சிக்கொள்கிறது. நன்றி

      Delete
  18. ஆஹா நாங்கள் மிகவும் ரசித்த பதிவு அது....விசு நகைச்சுவை மன்னர் எனலாம்..அதுவும் மிகவும் டீசன்டான நகைச்சுவை. எங்கள் நண்பர் என்பதிலும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி சகோ/மகேஸ்வரி...இந்த ஒரு சிறு துளி ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ,, தாங்கள் நூலினைக் கொடுத்து உதவியதற்கும்,, வருகைக்கும்...

      Delete