Tuesday 30 June 2015

கவசமாக நான்,,,,,,



தலைக்கவசம் க்கான பட முடிவு


 கவசமாக











                                                                            மறுப்பதேன்,,,,,,,,,


                                                      வாழ்த்துக்கள்


                                                      பூக்கள் க்கான பட முடிவு

Wednesday 24 June 2015

கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு


கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு
திருவிளையாடல் க்கான பட முடிவு
சென்ற பதிவின் தொடர்ச்சி,,,,,,,,,,,,
இப்பாடலின் பொருள்- உள்ளுறை,
கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு.
என் கருத்தும், இதனை ஏற்றுக்கொள்கிறது.
இப்ப ஏன் இந்த சந்தேகம் என்றால், சில நாட்களுக்கு முன் என் சக பேராசிரியர் ஒருவர், இவர் அறிவியல் துறை. பேசிக்கொண்டு இருக்கும் போது பீரோமோன்ஸ்(Pheromones) என்ற வேதிப்பொருட்கள் மயிர்கால்களில் இருக்கும் என்றார்.
அப்போ நான் அதனைச் சரியாக கவனிக்கவில்லை, ஏதோ நினைவில் இருந்த நான் அவர்களிடம் இப்ப என்ன சொன்னீங்க திரும்ப ச்சொல்லுங்கள் என்றேன், அவர் திரும்பச் சொன்னார்கள்.
ஆமா, இது என் இலக்கியத்தில், சங்கஇலக்கியத்தில் இருக்கு என்றேன்.
உடனே அவர்கள்,
 ஆரம்பிச்சுட்டா,,,,,,,,,, அய்யோடா ,,, என்று கிண்டல்
ஆனால், நான்,
 உண்மையா இப்படி ஒரு வேதிப்பொருள் இருப்பது, எப்ப நடந்த ஆராய்ச்சி என்றேன்,
ஆம். உண்மைதான். மயிர்கால்களில் சுரக்கும் சுரப்பிகள் பாலின அடையாளம் காட்டவும், நடத்தைகளை நிர்ணயிக்கவும் உதவுகின்றன என்றார்.
அப்படியாயின் கூந்தலுக்கு இயற்கை மணம் என்பது சரிதானே என்ற நினைவில்,
அவர்களுக்குப் பழய திருவிளையாடல் படத்தை நினைவூட்டினேன்.
மன்னன் சந்தேகம், பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணமா? செயற்கை மணமா? என்ற கேள்விக்கு விடைக்குப் பரிசு உண்டு,என மன்னன் அறிவிக்க, ஆசையால் தருமி புலம்ப,
தருமிக்காகச் சிவன் பாடல் எழுதி கொடுக்க, அதனைக் கொண்டு வந்த தருமியிடம் நக்கீரர் அதில் பொருட்குற்றம் உண்டு, பாடல் சரியில்லை என்று பரிசில் மறுக்க, எழுதியவரே வந்து வாதிட்டு நெற்றிக்கண் திறப்பது குற்றம் என்ற கதையை,,,,,,,,,,,,
அவர்களும் ஆர்வமுடன் ஆம் அப்படித்தான், அட என ஆச்சரியப்பட்டனர்,
சரி,
நம் முன்னோன் மன்னனுக்கு வந்தது அறிவியல் சந்தேகம் தான் என்பதும்,
அதற்கு நடந்த வாதங்களும் சரியே,
ஆனால் இறைவன் பெயர் சொல்லி,
அதனை வேறு விதமாகத் திரித்து,
நம் சிந்தனையை மழுங்கடிக்கும் செயல் தான் பின் வந்த காலக்கட்டங்கள்,
இது மட்டும் அன்று  இன்னும் ஏராளம் இருக்கு,
கணினிக்கு முன் வந்த அறிவியல் தமிழ் என்னவாயிற்று, இன்னும் ஆரம்பித்த நிலையிலேயே,
ஆனால் கணிணியோ இன்று,,,,,,,,,,,,

    தகவல் தொழில்நுட்பத்தைக் கண்டு பூரித்துப் போகிறோம், உலகைச் சுருக்கும் போக்குவரத்து என்று வியந்து போகிறோம், அன்று ஆங்கிலேயரின் அஞ்சல் சேவையும், இரயில் பாதையும் எதற்குப் பயன்பட்டன என்பது மறந்து விட்டது. பரந்து பட்ட உலகைச் சுருக்குவது சுருட்டத்தான் என்றுணர்ந்தும் சுருண்டு கொடுக்கிறோம்.      
  எந்த வராக அவதாரம் வந்து நம்மைக் காப்பாற்றப் போகிறது,,,,,,,,,,,,,

அவ்வை என்ற விஞ்ஞானி அடுத்த பதிவில்
 


Tuesday 23 June 2015

முதல் பட்டிமன்றம்

முதல் பட்டி மன்றம்


திருவிளையாடல் க்கான பட முடிவு
                                                                                                               
           முதல் பட்டி மன்றம் எங்கு நடந்தது என்று தானே கேட்கிறீர்கள்?

மதுரையில் தான்,

கடவுளுக்கும் கவிஞனுக்கும் ஏற்பட்ட வாதம் தான்.

அறிவியலை இன்பத் தமிழோடு சான்றோர் சபையில் முதன் முதலில் நடைபெற்ற பட்டிமன்றம். புலமைக்குத் தலைமை தந்த பெருமை.

ஆம் 

சிறப்புடன்,,,,,

அது ஒரு அறிவியல் தலைப்பட்ட அறிஞர் விவாதம்.

எல்லோரும் அறிந்த கதைதான்,

திருவிளையாடல் படத்தில் வருமே தருமி கதை அது தான்,

மதுரை மன்னன் செண்பக பாண்டியனுக்கு ஒரு ஐயம்.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாக மணம் உண்டா?

முக்கண்ணன் தருமிக்கு தந்துதவிய பாட்டு,

பாட்டு இது தான், 

"கொங்கு தேர் வாழ்க்கை அன் சிறை தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியன்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே'' !

     மலர்கள் தோறும் சென்று பூந்தாதுக்களைத் தேர்ந்தெடுத்துத் தேன் உண்ணும் வண்டினை நோக்கித் தலைவன் கூறுவதாய் அமைந்த பாடல்,

   நீ கண்டுள்ள மலர்களில் எல்லாம் தலைவி கூந்தலுக்கு நிகரான மணம் உண்டா என வினவும் பாடல்.

இப்பாடல் சொல்வது, கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு.

இது தான் உண்மை என்று நானும் சொல்கிறேன்.

இறைவனே சொன்னது பொய்யாகுமா?

எனவே பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டு.
உங்கள் கருத்து????????????,
                                                  (மணம் வீசும்)
                                                                     (படம் கூகுல்)

 



Saturday 20 June 2015

9 ஆம் நாள் விழா


9 ஆம் நாள் விழா

        பிரமிக்க வைக்கும் விழா என்றால் மிகையன்று,      தஞ்சை அரண்மனை வளாகத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம், சரஸ்வதி மகால் நூலகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் புத்தகத் திருவிழா நடைபெற்றுவருகிறது. 

2

ஆம் இன்று புத்தகக் கண்காட்சி 9ஆம் நாள் விழா இனிதாக முடிந்தது.
   மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், சிறப்புப் பேச்சாளர் திருமதி.பாரதிபாஸ்கர் அவர்களின் சொற்பொழிவு என விழா அழகாகச் சென்றது.
    மாவட்ட ஆட்சியர் பேசுகையில் தஞ்சைப் பெரிய கோயில் எவ்வாறு உலகமக்களால் பேசப்படுகிறதோ அந்த வகையில் இந்தப் புத்தக விழா பேசபடுவது தான் இதற்கு கிடைத்த வெற்றி என்றார்.
    இவ்விழா நாளையுடன் முடிவடையப்போகிறது, சிறப்பாக அமைய உழைத்த நல் உள்ளங்கள் அத்துனைப் பேரையும் வாழ்த்துவோம் வலை உறவுகளே,
வாசிப்பு என்பது நம்மின் சுவாசமாகிப்போனதால்,,,,,,,,,,,,,,









Wednesday 17 June 2015

இது சங்ககாலம் அன்று

பெண் முன்னேற்றம் கவிதை க்கான பட முடிவு
இது சங்ககாலம் அன்று
சங்க இலக்கியங்கள்
சிற்றிலக்கியங்கள்
சித்தர் இலக்கியங்கள்
சமய இலக்கியங்கள்
முக்தி நெறி
இறைக்கோட்பாடு
அறம்
இவை

  பெண்
  அழகில் சிறந்தவள்
  அன்னம் ஒத்த நடையினள்
  மென்மையானவள்
  வில்லொத்த புருவம் உடையவள்
  தலைவனின் வருகைக்காக
  ஏங்கிக் கிடப்பவள்
  பிரிவுத்துயரில் வருந்திப்
  புலம்புபவள்
  சுயம் இழந்து தன்
  வாழ்க்கை பற்றிய சிந்தனையற்றுத்
  தலைவனைச் சார்ந்து
  வாழுகிற சார்புத்தன்மை
  பொருந்தியவள்
  ஆண் கற்பு குறித்து
  கேள்விகளற்றவள்
  இப்படித்தானே
  படைக்கப்பட்டாள்
  ஆண் பெண் மீது
  கட்டமைத்துள்ள இவைகளை
 தகர்த்தல் என்பது
அதிகம் என்றா?????????
தலைமுறைகள் கடந்தோட
இன்றும் நாங்கள் சிறையில் தான்
ஆணுக்கு அடிமையாய்
கிடந்த பெண்
இனி
அவனுக்கு நிகராய் வளரும்
பெண்ணாயின்
வரவேற்போமே,


Thursday 11 June 2015

இதயமில்லாதவனின் இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

கவலை கவிதை க்கான பட முடிவு
                                                                     படம் நன்றி கூகுல்


இதயமில்லாதவனின் இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

வருகிறேன் என்ற உன்
வார்த்தைகளினால்
உன்
வருகை வேண்டி
என் இரு விழிகள்
வழிவதை நிறுத்தவேயில்லை
வரும் பாதை
பார்வையில் மறையும் என
துடைப்பதைக்
கைகள் நிறுத்தவேயில்லை
வாராயோ,
மாட்டாயோ
மனம் கலங்குவதை
நிறுத்தவேயில்லை
பசித்தலும்
புசித்தலும் இயற்கையா
நான் மட்டும் விதிவிலக்கோ
சிந்தனையும் சொல்லும் செயலும்
நீயாகிப் போனாய்
உன் வார்த்தைத் தந்த
வசந்தத்தில்
உன் வரவையே பார்த்தபடி
வாழும் காலம்வரை
காக்க வைப்பாயோ
பிறரின் நகைப்புக்கு
நானே காரணமாகிப்போனேன்
காத்திருப்பே என் கவலையாகிப் போனது
இதயமில்லாதவனால்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,