எனக்கு மோர் குழம்பு மிகவும்
பிடிக்கும். ஆனால் பாருங்கள் செய்யத்தான் தெரியாது. சக தோழிகளிடம் கேட்டேன்,
அவர்கள் சொன்னது ஒன்றும் புரியல, உடன் என் நினைவுக்கு வந்தது, நம்ம சாராதாம்மா
தளம். சரி அதில் சொல்லி இருப்பார்கள் என்று நினைத்து, அவர்கள் தளத்தில் பார்த்துச் செய்யலாம் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். அங்கிருந்து நகர தொடங்கிய நிலையில்,
என் உடன் இருப்பவர்கள் ஏன் உன் சங்கத் தமிழில் இது பற்றி ஒன்றும் சொல்ல வில்லையா? என்று
கிண்டல் செய்தார்கள்,,,,,,,
ஆம் ,,,,,,,,,,,,,,
அவர்களுக்கும் உங்களுக்குமாய்
இதோ,,,,,,,,,,
நம்ப இலக்கியம் காட்டும்
மோர்குழம்பு தான் இன்றைய பதிவு,,,,,,,,,
முளி தயிர் பிசைந்த
காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம் கழாஅது
உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை
கழுமத்
தான் துழந்த அட்ட தீம்
புளிப் பாகர்
இனிது எனக் கணவன்
உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று
ஒண்ணுதல் முகனே.
கூடலூர்
கிழார்.
இது நம் தமிழ் இலக்கியம்
காட்டும் குறுந்தொகைப் பாடல்.
தலைவியின் கை வண்ணத்தில்,,,,
முளி தயிர் பிசைந்த
காந்தள் மெல் விரல்,,,,,,,,,,,,
முற்றிய தயிருடன் சில
பொருட்கள் சேர்த்து பிசைந்து,பிசைந்த கையைத் தன் சேலையிலே துடைத்துக் கொள்கிறாள்.
விறகு அடுப்பினை சரியாக எரிய விட அதனை ஊதும் போது ஏற்படும் புகையினால், கண்கள்
எரிந்து கலங்குகிறது, அதனால் கண்களில் தீட்டிய மை கலைந்து, இப்படி ஒரு கோலத்தில்
அவள் செய்து முடித்த மோர்குழம்பினைக் கனவனுக்கு பரிமாறுகிறாள். கனவனும் நன்றாக
உள்ளது என்று உண்ணும் அழகிய காட்சியினைப் இப்பாடல் விளக்குகிறது.
திருமணம் ஆன புதிய
தம்பதியர்கள், இவர்களின் தனிக்குடித்தன அழகைக் கான செல்லும் செவிலித்தாய், தான்
கண்டு வந்த நிகழ்வுகளைத் தன் சுற்றத்திடம் சொல்லும் பாடல்.
மோர் குழம்பு வைக்க முதலில்
வேண்டிய அளவு அரிசி துவரம்பருப்பு இரண்டையும் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
இதனுடன் பச்சைமிளகாய், சீரகம், தேங்காயையும் சேர்த்து அம்மியில் இல்ல இல்ல இப்ப
மிக்ஸியில் அரைத்து, ஏற்கனவே வைத்துள்ள கெட்டி மோருடன் கலக்க வேண்டும்.
இதை அடுப்பில் வைத்து,
கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலையுடன் தாளித்து கொட்ட வேண்டும். குழம்பு
நுரைத்துவரும் போது அடுப்பை அணைக்க வேண்டும்.
சாராதாம்மா செயல்முறை
விளக்கம் சரியா?
சரிங்க நம்ம
இலக்கியத்திற்கு வருவோம்,,,,,,,
முளி தயிர் – முற்றிய தயிர் (நன்கு
கெட்டியான,நன்கு காச்சப்பட்ட,,,,,,,சுன்ட காச்சப்பட்ட,,,
பிசைந்த – கலக்கிய, துழாவுதல்,,,,,,
காந்தள் – பூ
மெல் விரல் – மெல்லிய மென்மையான விரல்கள்
கலிங்கம் - ஆடை,,, பட்டாடை
கழாஅது – கழுவாமல் (கழா அல்)
குவளை உண்கண் –கண்களின் விளிம்பு, குவளை மலர்
போன்ற,,,,,,,,,,,
குய்ப் புகை – தாளிப்பு புகை,(குய்-தாளிப்பு
புகை) இங்கு தாளிப்பதால் எழும் புகை, விறகு அடுப்பில் இருந்து வரும் புகை,,,,,,,,
கழுமத் – சோர்வு, மயக்கம்
(கழுமல்-மயக்கம்)
தான் துழந்த அட்ட – தான் ஆக்கிய
தீம் - இனிமையான, அமுது போன்ற,,
புளிப் – புளிப்பு
பாகர் - சமையல்
இனிது எனக் கணவன் உண்டலின்
– நன்றாக இருக்கிறது என
கணவன் உண்ண
நுண்ணிதின் - நாவால் சுவையுணர்ந்து
மகிழ்ந்தன்று –மகிழ்ந்து
ஒண்ணுதல் –ஒளியுடைய நெற்றி
முகனே –முன்புறம் ( ஒளியுடைய நெற்றியின்
முன் புறம்)
தலைவியின் ஒளி பொருந்திய நெற்றியும், முகமும் மிகவும் நுண்மையாக தன் மகிழ்வைக்
காட்டியது.
கூடலூர் கிழார் பாடல் இது தாங்க.
எனக்கு, தலைவி
மோர்க்குழம்பு தான் செய்தாளா? என்று ஒரு சந்தேகம்,,,,,,,,,,,,,
உங்கள் கருத்துக்கள்
வேண்டி,,,,,,,,,,,
படம்
நன்றி கூகுள்