மணம் பேசி வரவேண்டிய காதலன் வரவில்லை.
அவன் எங்கு போனான் என்பதும் தெரியவி்ல்லை, அவனை எப்படித் தேடுவது என்று
தெரியாமல் அல்லல்படும் பெண்ணை ஆற்றுவிக்கும் தோழியின் எண்ண அலைகளே
இப்பாடல். இந்தப் பாடலை இயற்றியவர் வெள்ளிவீதியார் என்ற பெண்பாற் புலவர்.
நிலம்தொட்டுப் புகார் வானம் ஏறார்
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம் காதலோரே. வெள்ளிவீதியார்
சாதாரணமாக, நாம் பேசிக்கொள்ளும் பேச்சு வழக்கிலே இப்பாடலின் மொழிநடையும் அமைந்துள்ளது.
அவர் எங்கே போகப் போகிறார்? நிலத்திற்குள்
புகப் போவதில்லை, வானத்திற்கு மேலேயும் ஏறவும் முடியாது, கடலுக்குள்
சென்றிருக்கவும் மாட்டார், நாடு நாடாக, ஊர் ஊராக, குடியிருப்பு
குடியிருப்பாகத் தேடினால் நம்மிடம் அகப்படாது போய்விடுவாரோ நம் காதலர்!
என்கின்றாள் தோழி.
படம் இணையத்திலிருந்து
Monday, 9 January 2017
நாயகனாய்
நின்ற நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும்
தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே
அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.
அம்பரமே தண்ணீரே அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எல்லே இளம்கிளியே எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ? சில்என்று அழையேன்மின் நங்கைமீர்!
போதர்கின்றேன் வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும் வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய். விளக்கம் ஏய், இளம் கிளியே, இன்னும் உறங்குகிறாயே, உனக்காக நாங்கள் எல்லாம் இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படி எல்லாம் அழைத்தும் இன்னும் உறங்குகிறாய். என்று தோழிகள் சற்று கடுமையாகவே அழைத்தனர்.அப்போது அவள் ஏன் இப்படி கத்துகிறீர்கள், இதோ வந்துவிட்டேன். என்று அவளும் கோபமாக கத்துகிறாள். உடனே தோழிகள், உன் வார்த்தை நன்றாக இருக்கிறதே, இவ்வளவு நேரம் நாங்கள் உன்னை எழுப்ப கத்திக்கொண்டு இருக்கிறோம். நீ எங்களை கோபிக்கிறாயே என்று சிடுசிடுத்தனர். சரி சரி விடுங்கள் எனக்கு பேச தெரியவில்லை, நீங்களே திறமைசாலிகளாக இருங்கள், நான் ஏமாற்றுக்காரியாக இருந்துவிட்டுப்போகிறேன். அடியேய் நாங்கள் முன்னமே எழுந்து வந்து உன்னை எழுப்ப வேண்டும், அப்படி என்ன நீ பெரிய ஆளா??? எங்களிடம் இல்லாத சிறப்பு உன்னிடம் என்ன?? அவளும் விடுவதாக இல்லை,, அவளும் வாயாடி போலும்,, ஏய் என்ன என்ன,, என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்கள்,எல்லோரும் எழுந்து வந்துவிட்டீர்களா? என்கிறாள். உடனே தோழிகள் நீயே வந்து இங்கு இருப்பவர்களை எண்ணிப் பார்த்துக்கொள். வலிமை பொருந்திய யானையை அழித்தவனும், வேட்டையாடும் திறன் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி வாழ்த்தி பாட போகனும் சீக்கிரம் வா,, (தோழியை எழுப்பும் பாடல் இத்துடன் நிறைவு)
உங்கள்
புழக்கடை உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய்
கூம்பினகாண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான்
போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்!
நாவுடையாய்!
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
விளக்கம் உங்கள் வீட்டின் பின் வாசலிலுள்ள தோட்டத்தின் குளத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலைகவிழ்ந்தன.காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஓளிவீச கோயில்களை நோக்கி திரிசங்கு ஊத சென்றுவிட்டனர். ஆனால் பெண்ணே சங்கும் சக்கரமும் ஏந்திய கரங்களை உடையவனும், அழகிய தாமரை மலர் போன்ற கண்களை உடையவனுமான கண்ணனைப் பாட நீ இன்னும் எழாமல் இருக்கிறாயே, நேற்று நீ என்ன சொன்னாய்,, நாளை நான் முன்பே எழுந்து வந்து உங்கள் எல்லோரையும் எழுப்புவேன் என்று வீரம் பேசினாயே, கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே,, வா,, எழுந்து வா,,