மெல்ல அடி எடுத்து
மலர் மாலை தரை துவள
சுயம்வரத்தில் வலம் வந்தாள்
சுற்றியுள்ளோர் வாய்பிளக்க,
வழிமறைத்த நரைக்கிழவன் தான்டி
வலம் திரும்பி சால்வனவன் இடம் நோக்கி
நடக்கின்றாள்.
போர் என்று குரல் கொடுத்தான் பொல்லாத பீஷ்மன்.
மெல்ல திரும்பிவிட்டு
மேலும் நடக்கின்றாள்.
ஆனால்
கிழவன் அள்ளிச்சென்றான்.
சால்வன் மட்டும்
தொடர்ந்து வந்து போரிட்டு
தோற்றுப்போகின்றான்.
பீஷ்மர் அத்தினாபுரம் போய் சேந்தார்.
விசித்திரவீரியனுக்கு 3 பெண்களையும்
விவாகம் செய்ய ஏற்பாடுகள்
செய்தான்
நரைக்கிழவன்.
கல்யாணப்பந்தலில் எல்லோரும் கூடியிலுக்கும் சமயத்தில்
அவள்
பீஷ்மரை நோக்கி நகைத்தவளாக
கங்கைப்புத்திரரே
தர்மம் அறிந்தவரே
நான்
சௌபல தேசத்து ராஜாவான சால்வனை
மனதில் புருஷனாக கொண்டுவிட்டேன் என்றாள்.
விசித்திரவீரியன்
வேண்டாம் என கூற,
காதலனை
தேடிப்போ என பீஷ்மன்விட
காதலனும்
கைவிரிக்க
வீரியனும்
மறுத்துவிட
பீஷ்மனையே அடிபணிந்து தனையேற்கக்
கதறியழ
நரைக்கிழவன் தன் விரதம் பெரிது
என்றான்.
அத்தினாபுரத்துக்கும்
சால்வன்
அரண்மனைக்கும்
பலமுறை
அலைந்ததை
ஆறுவருட
அழுகையை
ஒவ்வெருவரிடமும்
தன்
கதையைச்
சொல்லி
உதவி
கேட்டதை
எதைச்சொல்வது இங்கே.
இதுதான் தலைவிதி என்று முடங்கிவிடவில்லை.
ஆறுமுகன்
கொடுத்த மாலையுடன் பலரிடம் பீஷ்மரிடம் போர் செய்யச்சொன்னால் எல்லோரும் மறுத்தனர்.
பரசுராமரிடம் சென்றாள். பீஷ்மரின் மரணமே நான் விரும்பும் வரம் என்றாள். பரசுராமரும் போரிட்டு தோற்றார்.
இதனால்
வேதனையுடன் இமயமலையில் பரமேசுவரனை நோக்கி தவம்
இருந்து வரம் பெற்றாள்.
பரமேசுவரன் வரம்படி மறுபிறப்பு
அடைந்து
துருபத அரசனுக்கு மகளாய் பிறந்து
முருகன் கொடுத்த மாலையை தானே கழுத்தில் அணிந்து தந்தையால் காட்டிற்கு விரட்டப்பட்டாள்.
அங்கு கடும் தவம் புரிந்து ஆண் தன்மை
அடைந்து சிகண்டி என்கிற வீரனாக மாறிவிட்டாள். அருச்சுனன் சிகண்டியைத் தன்னுடைய
தேர்பாகனாக கொண்டு பாரத யுத்தத்தில் பீஷ்மரை அம்பால் வீழ்த்தினாள்.
அவள் தான் காசி ராஜனின்
மகள் அம்பை.
சுயம்வரத்தின் ஒழுங்கினை மீறி பெண்ணின்
மனநிலையை அறியாமல் அவள் வாழ்வை திசைமாற்றிய பிரமச்சாரி ஏன் சுயம்வரத்திற்கு
வரவேண்டும்.அவரின் தடுமாறிய நிலைக்கு அம்பை கொடுத்த தண்டனை இது.
பாரதம் சொல்லியது, நான்
ஏற்கிறேன். இதன் அடிப்படையில்
தர்மத்தின்
வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.