உமாமகேசுவரமும் இராமநாதமும்
நாம்
படித்த பள்ளியை, நாம் எப்போதாவது நினைத்துப் பார்க்கிறோமா? அவ்வாறு
நினைப்பின் என்ன செய்தோம். கிடைக்கும் பதில் நம்மில் எத்துனைப்பேருக்கு நல்ல
பதிலாக கிடைக்கும்.
ஆனால், இவர் தான் படித்த
பள்ளியில் இன்று ஆசிரியர்,,, தான் படித்த, பள்ளியினை நிறுவிய தகைச்சான்ற
பெருமகனார் நினைவினைப் போற்றும் வகையில் தன் செஞ்சோற்றுக் கடனை ஆற்றியுள்ளார். ஆம், வலைவுறவுகளே
நாம் அனைவரும் அறிந்தவர் தான், கரந்தை
ஜெயக்குமார் எனும் வலைப்பூவில் நல்கட்டுரைப் பல எழுதிவரும்
கரந்தை ஜெயக்குமார்
அவர்கள் தான்.
கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சியில் இவரின் உழைப்பு என்பது எழுத்துக்களில் விவரிக்க முடியா ஒன்று,,, உமாமகேசுவரனார் அவர்களின் அரும் தொண்டினைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு தபால்தலை வெளியிட்டது. அதற்கான மாபெரும் பணியினை நிர்வாகத்துடன் இணைந்து சிரம் மேற்கொண்டார். சங்கத்திற்காக இன்னும் பல பணிகளை செய்துள்ளார். ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரி இவைகளின் தோற்றம் இவரின் உழைப்பினைப் பறைசாற்றும்.
உமாமகேசுவரனார்
துவக்கிய கல்வி நிறுவனங்கள் இற்றை நாள்
சங்கச் செயலாளர் செம்மொழிவேளீர் கரந்தை ச. இரதமநாதன் அவர்களால் ஆல் போல்
தழைத்துள்ளது. சங்க வரலாறு என்பது இவரின் வரலாறு தான்.
இராமநாதம் எனும் நூல் உணர்த்தும் செய்திகள்
இவை. உமாமகேசுவரா மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் கரந்தை சரவணன், ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் ஆகிய இருவரும் இணைந்து எழுதி
வெளியிட்டுள்ளனர்.
அன்பரின்
பணியைப் பாராட்டி கரந்தைத் தமிழ்ச் சங்க கல்வி நிறுவனங்களின் பவளவிழா, நூற்றாண்டு
விழா நடைபெற்ற சமயத்தில் சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன் பெயரில் விருது
வழங்கி சிறப்பித்தனர்.
புகழெனின் உயிரும் கொடுக்குவர்,பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர், அயர்விலர்
அன்னமாட்சி அனையர் ஆகித்
தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர்
எனும் புறநானூற்று வரிகள் வந்துப் போகின்ற மனதில்,,,,,,
வாழத்துக்கள் சார்,
காவேரியே நின் நனிநடையால் தஞ்சைக்கு பெருமையா??
எம் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தால் வந்த பெருமையே