Tuesday 12 January 2016

அளவுக்கதிமான அன்பு



அளவுக்கதிமாக அன்பை 
பிறருக்கு கொடுக்கவும் கூடாது
பிறரிடமிருந்து பெறவும் கூடாது
இரண்டுமே வேதனையைத் தான் தரும்.



         
அன்பை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்,,,,,,,,,
அன்பை பெற்று ஏமாற்றி விடாதீர்கள்,,,,,,,,,,
இரண்டிற்கும் வலி அதிகம்,,,,,,,,


   




சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலையின்றி வாழ்பவர்கள் அல்ல
கவலையை ம(றை)றக்க
கற்றுக்கொண்டவர்கள்.






சிலர் அன்பை வார்த்தையால் உணர்த்தலாம்
சிலர் அன்பை உணர்வுகளால் உணர்த்தலாம்
சிலர் அன்பு எப்போதும் புரியாது
அதை
காலம் உணர்த்தும் போது தான்
கண்கள் கலங்கும்



                                                                                                                                      

Friday 8 January 2016

எண்ணங்கள் தெளித்த வண்ணக்கோலங்கள்

 

எண்ணங்கள் தெளித்த 

வண்ணக்கோலங்கள்


                 

வண்ணமயிலே 
ஏன் இந்த அழகிய நடனம், 
இருட்டை கார்மேகம் என்று 
நினைத்தாயா
இல்லையா 
பின்னே
மகியின் கை வண்ணத்தில்
வாசலில் துளிர்த்ததனால்
வந்த  துள்ளல் நடனமே,,,,,,,
                                                                                           (இது கொஞ்சம் ஓவரா இல்ல)


வண்ணக் கலவையில் 
வரைந்த  
வண்ணமலர்களே
வாசல் நிறைக்கும் 
அழகு கோடுகளே
வசந்தம் வளரட்டும் 
நாளும்,,,,,,,,,
                                                                                                    


இழைகளுக்குள் கண்சிமிட்டுவது
வானத்து நட்சத்திரங்கள் தூவிய 
வெண்மலர்கள்


கபிலன் 
சொன்ன பூக்களையும் 
விஞ்சிவிடுகின்றன 
கோலத்தில் காணகிடக்கும்
 பூக்களின் வடிவங்கள்
எந்த கவிஞன் 
கவிகள் சொல்வான் 
இவ்வடிவங்களுக்குரிய 
பெயர்களைத் தன் கவியில்,,,,,,,

       

எண்ணங்கள் தெளித்த 
வண்ணக்கோலங்கள் 
விடியலின் இருட்டில்
விழித்த கோலம்
புத்தாண்டில்,,,,,,,,

 

அழியப்போவது தெரிந்தும் 
அழகாய் சிரிக்கிறாய் 
ஒஒஒ 
நீயும் 
விட்டில் பூச்சா



சிதறா கவனத்தில் 
சிதறும் வெண்துளிகள் 
கோல மழையாய்
என் வீட்டு வாசலில்,,,,,,,

                                                                      தொடரும்,,,,,,,,,,



Friday 1 January 2016


புத்தாண்டே வருக

      

புத்தாண்டே வருக எமக்கு 

புது வாழ்வு தருக

வரும் காலம் இனி

வளம் கோடி தர

வரம் தருக.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

பூக்களின் படம் க்கான பட முடிவு