விண்வெளியெங்கும்
தேடியலைகிறேன் உன்னை
என் கண்ணில் தெரிவதை
நீ விரும்பவில்லை என்பதை
அறியாமல்
வலிமையற்ற விரல்கள்
உள்ளத்தில் உள்ள
உன் பெரிய உருவத்தை
வெளிபடுத்த
சிந்தைத் துடித்ததாலும்
என்ன செய்யும்
என்னை இம்சிக்கிறாய்
கனவில்
அதிகாலைப் பொழுதே எழுந்து
என் கற்பனைகளைக்
கைவண்ணத்தில்
சிறைவைக்க முயற்சித்து
எப்போழுதும்
தோற்றேப் போகிறேன்,,,,,
மீண்டும்
ஒரு கனவிற்காய்
காத்திருக்கிறது மனம்
ஒரு பதினொருமாதங்கள் உனக்காய்
காத்திருக்கிறேன்.
மனதிற்கு மிக நெருக்கமாகிப் போனதால்