Thursday 31 December 2015

தமிழண்ணலே



  தமிழண்ணலே

 


  தமிழறிஞர்களால் தமிழண்ணல் என அழைக்கப்படும் இராம. பெரியகருப்பன் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளுள் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர். இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கினார். இலக்கிய உலகில் இவர் ஆற்றிய பெரும்பணிகள் ஏராளம் ஏராளம்.

      இவர் 12.08.1928 இல் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்னும் சிற்றூரில் பிறந்தவர். இயற்பெயர் பெரியகருப்பன். இராம.பெரியகருப்பன் என்றும் அழைப்பர். இவர்தம் பெற்றோர் இராமசாமி, கல்யாணி ஆவர்.

   மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்று தமிழ் வித்துவான் பட்டம் பெற்றவர்.

   சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பொருளியல்), முதுகலைத் தமிழ் ஆகிய பட்டங்களைப் பெற்றவர்.

  முனைவர் சி.இலக்குவனாரும், முனைவர் அ.சிதம்பரநாதனார் இவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மதுரை தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கிய மரபுகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்

    தமிழண்ணல் தமிழ் இலக்கியம், இலக்கணம், திறனாய்வு, நாட்டுப்புறவியல், உரைநடை, நாடகம் எனப் பல நூல்கள் யாத்துள்ளார்.
அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு,
வாழ்வரசி புதினம்
நச்சுவளையம் புதினம்
தாலாட்டு
காதல் வாழ்வு
பிறைதொழும் பெண்கள்
சங்க இலக்கியத் தொன்மை அகச்சான்றுகள்
சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கியக் கொள்கைகள்
சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கிய வகைகள்
தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்
புதியநோக்கில் தமிழ்இலக்கிய வரலாறு
தமிழியல் ஆய்வு(இ.முத்தையாவுடன்)
ஆய்வியல் அறிமுகம்(இலக்குமணனுடன்)
ஒப்பிலக்கிய அறிமுகம்
குறிஞ்சிப்பாட்டு இலக்கியத் திறனாய்வு விளக்கம்
தொல்காப்பியம் உரை
நன்னூல் உரை
அகப்பொருள் விளக்கம் உரை
புறப்பொருள் வெண்பாமாலை உரை
யாப்பருங்கலக் காரிகை உரை
தண்டியலங்காரம் உரை
சொல் புதிது சுவை புதிது
தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்
தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?
பேசுவது போல் எழுதலாமா? பேச்சுத் தமிழை இகழலாமா?
பிழை திருத்தும் மனப்பழக்கம்
உரை விளக்கு
தமிழ் உயிருள்ள மொழி
தமிழ் கற்பிக்கும் நெறிமுறைகள்
தமிழ்த்தவம்
உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்
திருக்குறள் உரை
இனிய தமிழ்மொழியின் இயல்புகள் முதலியன

  தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ்பண்பாட்டைப் பாதுகாக்கவும் பாடுபட்டவர். தமிழண்ணலே நீவீர் மறையவில்லை, என்றும் எங்களுடனே இருக்கிறீர், உம் எழுத்துக்களால்.
                                              
                                                                                

Wednesday 30 December 2015

"புலம்பித் தோன்றல்"


          


             எனக்கு இந்த வீட்டில் இருக்கவே பிடிக்கல, இங்க யாருக்கும் என்னைப் பற்றிய கவலை இல்லை, இப்படியாக புலம்புவதைக் கேட்டிருப்போம். எனக்கு இந்த ஊரே பிடிக்கல, இங்கு இருக்கும் சொந்தங்களுக்கு என்னைப் பற்றிய கவலையே இல்லை, இப்படியும் புலம்பல் உண்டு. இது என்ன நாடு, இந்த நாடே எனக்கு பிடிக்கல, நான் இங்கிருந்து போகிறேன், என்னைப் பற்றிய கவலை யாருக்கு இருக்கு. இது போன்ற புலம்பல்களை நாம் கேட்டிருப்போம். இது இப்ப மட்டும் இல்லங்க. அன்றும், தலைவி ஒருத்தி இப்படித் தான் புலம்பி இருக்கிறாள். எனக்கு இந்த ஊரு பிடிக்கல, இங்கு இருப்பவர்கள் யாரையும் பிடிக்கல  சங்க இலக்கிய தலைவியின் புலம்பல் தான்.

அந்தப் பாடலைப் பார்ப்போமா

உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடி
கானலஞ் சேர்ப்பன் கொடுமை எற்றி
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள்
துஞ்சா துறைநரோ டுசாவாத்
துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே
                                     கொல்லனழிசியார் ஆசிரியர்
                                      பாடல் 145
                                      குறுந்தொகை

  இந்த தூங்குமூஞ்சி மக்களைப் பார், என் கவலை அறியாது நன்றாக உறங்கும் ,இவர்கள் இருக்கும் இந்த ஊர் நான் வாழ்வதற்கு தகுதியற்ற ஊராக போனது என்று தன் தோழியிடம் புலம்புகிறாள்.

தலைவன் இல்லாத ஊர், தலைவிக்கு, உறைவதற்கு உரிய ஊராகத் தோன்றவில்லை. தலைவியின் இவ்வுணர்வு "புலம்பித் தோன்றல்" எனப்படும்.

  இவ்வூர் கடல் பகுதியைச் சார்ந்தது. அதாவது சிறுகுடி. தலைவன் பொருள் தேட சென்றுவிட்டான். திரும்பி வர வேண்டிய காலம் கடந்து விட்டது. அதனால் தலைவிக்கு, இரவுப்பொழுது நீண்டுக்கொண்டே செல்கிறது. முன்பு இன்பத்தைத் தந்த, துறையும் கானலும் மக்களும் தலைவன் பிரிந்த பின் தனக்குத் துன்பம் செய்தலால், இவ்வூர் உறைபதி அன்று எனச் சினந்து கூறுகிறாள். இவ்வூர் பிறர் துன்பம் கண்டு வருந்தும் அருள் உள்ளம் இல்லாதவர்களைக் கொண்டது. தலைவியின் துன்பம் குறித்து கேட்காமல் நல்ல உறங்குதலும் செய்தலால் தலைவியின் வெறுப்புக்கு உள்ளாயிற்று.


துறைகெழு சிறுகுடி கடற்றுறை பொருந்திய இந்தச் சிற்றூர்

கானல் அம் சேர்ப்பன் கடற்கரைச் சோலையையுடைய சேர்ப்பனது

கொடுமை எற்றி கொடுமையை நினைந்து

ஆனா துயரமொடு மிகுகின்ற துன்பத்தோடு

வருந்தி துயரமுற்று

பானாள் நடுயாமத்தில்

துஞ்சாது உறைநரொடு துயிலாமல் தங்குவாரை

உசாவா ஏனென்று வினவாத

துயிற்கண் மாக்களொடு துயிலுதல் பொருந்திய கண்களையுடைய
                          அறிவற்ற மாக்களோடு

நெட்டிரா வுடைத்தே நெடிய இரவை உடையது

                  ஆதலின்

உறைபதி யன்றி -  இது நாம் தங்கியிருத்தற்குரிய ஊர் அன்று.

என்ன, அந்த தலைவி சொல்வது சரி தானே, பதில் சொல்லிட்டுப் போங்க.



      அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
 

பூக்கள் க்கான பட முடிவு




Tuesday 29 December 2015

கடந்து வந்த பாதை

  கடந்து வந்த பாதை  

      




கடந்து வந்த பாதையில் என்
கால்கள் பதிந்தது நிச்சயம் முள் மேல் இல்லை
கற்பனைக் கோட்டைகள் நான்
கட்டினாலும் இடிந்துவிடவில்லை
அவை இதயத்தில் இன்னமும் உறுதியாய்
அன்பால் சாதிக்க முடியும் தான்,
அனைவராலும்?????????
அகிலம் மிகப் பெரியது தான்
மாற்றங்கள் அனைத்தும் பொதுவாயினும்
மனிதனின் அனுபவங்கள் பெரிது
மற்றவர் மேல் நம்பிக்கை அற்றுப்போனது
மனிதம் செத்துப் போனதால்
தேய்பிறையாகவே இருக்கும் அன்பு
தேய்ந்து பின் வளர்பிறையாகும்
நம்பிக்கையில்
கடக்கவிருக்கும் பாதையில்
காத்திருக்கும் அனுபவங்கள் பல
இவ்வாண்டும் கடந்து,,,,,,,

Monday 28 December 2015

மாக்கோலம் அலங்கரிக்கும் மார்கழி

மாக்கோலம் அலங்கரிக்கும் மார்கழி 


     காலையில் எழுந்து தினமும் வாசல் தெளித்து, புள்ளி வைத்தும், வைக்காமலும் இரண்டு கம்பிக் கோடுகளை இழுத்து இது தான் கோலம் என்று வந்தது,,,, இந்த மாதம் பெரிய பெரிய கோலங்கள் வாசல் நிறைக்கும். தினமும் என்னென்ன புதுப்புது வகையில் கோலம் போடலாம் என்று யோசிக்க ஆரம்பிக்கும்.

வாசல் அடைத்துக் கோலம் போட்ட காலம் எல்லாம் போய்விட்டது. இன்று 

இங்கு வாசல் எங்குள்ளது எனும் நிலையாகிவிட்டது. இன்று வீடுகளே ஒரு 

வாசல் அளவுக்கு போனநிலையில், வாசல்களே இல்லாத நிலையில் வாசல் 

அடைத்துக் கோலம் எங்கு போடறது.

சிக்குகோலம் 60 புள்ளிகள் வைத்து போடுபவர்களை எல்லாம் 

பார்த்திருக்கிறேன். படிக்காத இவர்கள் எப்படி புள்ளிகளைக் கணக்கில் 

கொண்டு சரியாக போடுகிறார்கள் என்று நான் வியந்துப் போனது 

உண்டு.புள்ளிகளை வைத்து அதனை இணைக்கும் கம்பிகள் எனக்கு கண்கட்டி

 வித்தையாக இருக்கும். அத்துனை பெரியக் கோலங்கள், இன்றும் ஆச்சிரியம் 

தான் போங்க.

 
  கல்விக்கூடங்கள் இல்லாத அந்தக் காலத்தில் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்த பெண்களுக்கு கணக்கு கற்றுக் கொடுத்தவை இந்தக் கோலங்கள்தான்.

  கணக்கும் நுண்ணிய கவனிப்பும் இதற்கு உள்ளே பொதிந்திருக்கும் அறிவியல் விஷயங்கள். இன்னோரு பயன், மனத்தை ஒருமைப்படுத்துவது.

அறிவு விசாலம், நாகரிக விருத்தி, சோம்பலின்மை, மறதியின்மை, சூட்சமபுத்திஊக்கமுடைமை, மனச்சோர்வின்மை போன்ற மனம் தொடர்பான செயல்பாடுகள் கோலம் போடுவதில் அடங்கியுள்ளன. கற்பனைத்  திறனும், படைப்புத்  திறனும் (creativity)  கைவந்த கலையாகிவிடுகின்றன.

கோலம் இடும் பெண்ணுக்கு குனிந்து நிமிர்ந்து சில நிமிடங்கள் கோலம் போடுவதால், உடற்பயிற்சி செய்த மாதிரியும் ஆகிறது.இது மட்டுமா, கோலம் இடுவது சீரண  உறுப்புக்கும் பிறப்புறுப்புக்கும் நன்மை பயக்கும்.
 




  இந்தியாவுல இருக்கற ஒவ்வொரு பகுதியிலயும் அவங்கவங்க வழக்கப்படிக் கோலம் போடறாங்க. தமிழ் நாடுன்னா புள்ளி வெச்ச, வைக்காத இழைக்கோலங்கள், கேரளான்னா அத்தப்பூக்கோலம் அப்றம் வட மாநிலங்கள்ன்னா ரங்கோலின்னு ஒவ்வொரு பகுதியோட பேரைச் சொல்றப்பவும் அந்தப் பகுதிக்குண்டான கோலங்களும் சேர்ந்தேதானே ஞாபகம் வருது.



அத்தப்பூ கோலம் க்கான பட முடிவு
                              (இது நெட்டில் சுட்டது)

    நம்மூர்ல விசேஷங்களுக்கு பச்சரிசி மாவால கோலம் போடுறது சம்பிரதாயம். வாசல்ல போடற கோலங்கள் வீட்டுக்குள்ள துர்சக்திகள் நுழையாதபடிக்கு காவல் காக்குதுங்கறது ஐதீகம். வீட்டுக்குள்ள நுழையப் பார்க்கற சக்திகள் அந்த இழைகள்ல மாட்டிக்குமோ என்னவோ.. ஆனா, அமாவாசையன்னிக்கு மட்டும் கோலம் போடாம விட்டு வைக்கிறது வழக்கமாம். ஏன்னா பித்ருக்கள் வீட்டுக்குள்ள வரணுமேன்னு சொல்லுவாங்க. கேள்விப் பட்டது ரைட்டா இல்லையான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க. அதேமாதிரி நல்ல விசேஷங்கள் நடக்கறப்ப போடறதுக்குன்னு தனி வகைகளும் அல்லவிஷயங்கள் நடக்கறப்ப இன்னொரு வகைகளும் இருக்காம். நல்ல விசேஷங்கள் நடந்தா கண்டிப்பா ரெட்டை இழைக்கோலம்தான் போடறது வழக்கம்.
                                             (நன்றி ராஜிமா) 

 

       நூல்ல கட்டிய சாக்பீஸை எடுத்துக்கிட்டு கோலம் போடத் தேர்ந்தெடுத்த இடத்துல நூலோட நுனியை தரையோட அழுத்திப் பிடிச்சுக்குவாங்க. இன்னொருத்தர் அடுத்த நுனியில் இருக்கற சாக்பீஸை வெச்சு உக்காந்திருக்கறவரைச் சுத்தி பிரதட்சிணம் வந்து அளவா அழகா ஒரு வட்டம் போட்டுக்குவாங்க. இது நம்ம கணக்குப் பாடத்துல உபயோகப்படுத்தற காம்பஸை அடிப்படையாக் கொண்டதுன்னு கொள்க. இதான் அடிப்படை.இனிமே டிசைனைப் பொறுத்து அங்கங்க அரை வட்டங்களும் வளையங்களும் பூக்களோட டிசைன்களும் வரையப்படும். அப்றம் ஒவ்வொரு பகுதியா கலர்ப்பொடி கொண்டு நிரப்புவாங்க. பெரிய பகுதிகளுக்கு சல்லடையும் சின்ன பகுதிகளுக்கு டீ வடிகட்டிகளும் உபயோகப் படுத்துவாங்க. கலர்ப்பொடியை நிரப்பி லேசா தட்டிக்கிட்டே இருந்தா அழகா எல்லா இடங்கள்லயும் ஒண்ணு போல கலர் நிரம்பும். இப்படி மொதல்ல கலரை நிரப்பினப்புறம் வெள்ளைக் கோலமாவை புனல்ல எடுத்துக்கிட்டு அங்கங்க இழைகளால் அலங்கரிப்பாங்க.
 



  இப்பல்லாம் கோலம் போடுற கலை கொஞ்சம் கொஞ்சமா அருகிக்கிட்டே வருது. ஒரு காலத்துல அடுத்த தலைமுறைப் பெண்குழந்தைகளும் கோலம் போட ஆசையா கத்துக்கிட்டாங்க. இப்பல்லாம் எதுக்கும் டைம் இல்லைன்னு ஓடிடுதுங்க.ஏதோ பண்டிகை சமயங்கள்லயாவது கோலம் போட ஹெல்ப் செய்யுதுங்களேன்னு திருப்திப் பட்டுக்க வேண்டியதுதான். அதுவுமில்லாம இருக்கற அவசர யுகத்துல காலைலயும் சாயந்திரமும் வாசத்தெளிச்சு கோலம்போட யாருக்கு நேரமிருக்கு?.. அதனால ஒரு ஸ்டிக்கரை வாங்கி ஒட்டிடறாங்க. அதுவும் அடுக்கு மாடிக்குடியிருப்புன்னா கேக்கவே வேணாம். நம்மூட்டு ஸ்டிக்கர்ல பாதியை பக்கத்தூட்டு ஸ்டிக்கர் மறைச்சுட்டு இருக்கும்.

  கோலம் பற்றி நான் பேசிய போது, ஆர்வமாக அவர்கள் சொன்னதை அப்படியே கொடுத்துள்ளேன்.


     இவ்ளோ அழகான கலையை அழிய விடலாமா?..  
 

Monday 21 December 2015

பனி விழும் விடியல் - கோலம் 2

 பனி விழும் விடியல்


        கோலம் என்ற கலைத் தமிழ்நாட்டு கலைகளில் ஒன்றாகும். கோலம்

 என்ற  சொல்லிற்கு அழகு, ஒப்பனை, மாதிரி என்ற பொருள் சொல்கிறது 

வாழ்வியற்  களஞ்சியம். 


 பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையில் கோலப்பொடியினை 

வைத்து நெடியதாய் விழுமாறு செய்து, அதனால் தரையில் வடிவங்களை 

அமைப்பது கோலமாகும்.

 


கோலம் இரு வகைக்படும்

 1. புள்ளிக் கோலம்

2. புள்ளியில்லாக் கோலம்  ( ரங்கோலி)

 
 9 புள்ளி 5ல் நிறுத்த ( இடுக்கு புள்ளி)


புள்ளிக்கோலம்  இரு வகைப்படும்

1.சிக்குக் கோலம்

2.உருவக் கோலம் ( பூ மீன் தேர்,,,,,,,,, போல,,




சிக்குக் கோலம், இதனைக் கம்பிக் கோலம் என்றும் அழைப்பர். இதில் நேர்

 புள்ளி, இடுக்கு புள்ளி ( ஊடு புள்ளி) என்ற முறையிலும் புள்ளிகள் வைத்துப்

போடப்படும்.

இதில் புள்ளிகளை விலக்கி கோடுகள் செல்ல வேண்டும்.




சிக்குக் கோலம் போடுவதற்கு சிக்கலானது என்பர். ஆனால் உண்மையில்

 எளிமையானது. கை எடுக்காமல் போடலாம்.




கோலத்திற்கு பாடர் கொடுப்பது உண்டு.

சிக்குக் கோலத்திற்கு பூக்கள் பாடர்.

பூக்கள் கோலத்திற்கு சிக்கு பாடர்.

பார்ப்பதற்கு அழகாக இருக்கும். 





பொதுவாகத் தரையில் போடப்படும் கோலங்கள் கால்பட்டு அழிவதே

சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.

மார்கழியில் 
இலையில் தவழும் பனியும் 
அழகிய கோலம் தான்.