வேறானவள்
பல ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய பெண் முன்னேற்றம் குறித்த கவிதை, இன்றும் அப்படியே, கவியும் கவிப்பொருளும்,,,,
பாரதியின்
இலட்சிய கனவே
முட்டிகளுக்குள்
புதைத்துக்கொள்ளவா
உன்
பட்டுமுகம் படைக்கப்பட்டது,
நெல்மணிக்கு
தப்பிய நீ
சொல்மணியாய்
சுடர்விடத்தான்
கோழிக்குழம்புக்குத்
தப்பிய நீ
கோள்களின்
போக்கிற்கே
புதுக்கவிதை
விளக்கம் கூறத்தான்,
கள்ளிபாலுக்கு
தப்பிய நீ
காலங்களையே
மாற்றி அமைக்கத்தான்,
அடுக்களைக்குள் ஆழ்ந்து போன நீ
அடிமைத்தளை
களையத்தான்
இப்படித் தான் பல கவிகள்
புரட்சி கவிகள் எழுதினேன்,,
ஆனால் இன்றும்
நான் காண்பது என்னவோ
மெத்த படித்த அவள்
படித்த
பதறாக ,,,,,,,,,,,
அடிமையாய்,,,,,,
போகப்பொருளாய்,,,
காட்சிப்பொருளாய்,,,
அடங்காப்பிடாரி
எனும் பட்டத்துடன்
அலங்கோளமாக,,,,,
இன்னும் இன்னும்,,,,,,
ஆணுக்குப்
பெண் கீழானவளும் அல்ல
மேலானவளும்
அல்ல
வேறானவள்
பாரதியே,,,,,,,,,,,
பெண்
முன்னேற்றம்
உன் எழுத்தின்
சாதனைதான்
ஆனாலும்
நடக்கும்
அநியாயம்
கண்டு
கலங்கியிருப்பாய்,
இன்று நீ
இருந்திருந்தால்,,,,,,,,,,,,
பெண்கள் தினம்,,,,,,,
கொண்டாட்டம்,,,
மனம் வலிக்கிறது
பெண்ணாய் பிறந்ததற்கு,,,,,
மகத்துவம்
மிக்க
என் இனிய
சமூகமே
என்று நீ
அவளை
மனுசியாய்
பார்க்கப்போகிறாய்???
பெண்ணை
நல்ல தோழியாய்,,,,
நல்ல மாணவியாய்,,,,
நல்ல அகத்தவளாய்,,,,,
இதுவே போதும்
அவள் நலமுடன் வளமுடன் வாழ,,,
வாழவிடு ,
வார்த்தையில் அல்ல
வாழ்க்கையில்,,
நிஜத்தில்,,