Thursday 23 April 2015

தொடனும்

மழை படம் க்கான பட முடிவு
தொடனும்

திருக்குறளின் சிறப்புகள் நாம் அறிந்ததே,
அதில்
உங்களுக்காக
இது,
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
          துப்பாய தூவும் மழை

எனத் தொடங்கும் வான்சிறப்பு அதிகாரபாடல்

மழை குறிப்பிட்ட இடைவெளியில் பூமியைத் தொட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

இதில் ஒவ்வொரு வார்த்தையினை உச்சரிக்கும் போதும் உதடுகள் ஒட்டும்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
        அதனின் அதனின் இலன்
என்ற குறள்.
இதன் பொருள்,,,,
      எந்த பொருளில் எல்லாம் மனம் விலகி இருக்கிறதோ, அந்த பொருள்களால் நமக்கு துன்பம் கிடையாது. மனம் ஒட்டாமல் இருக்க வேண்டும் என்று பொருள்படக் கூடிய இக்குறளின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் உச்சரிக்கும் போது உதடுகள் ஒட்டாது.

    அப்புறம் 1330 குறள் மட்டும் நமக்கு கிடைத்துவிட்டது,

அவன் பற்றிய குறிப்புகள் மட்டும் எப்படி கிடைக்காமல் போனது,,,,,,,,,,,,,,


Monday 13 April 2015

சீர்மிகு வளம்பல தரும் சித்திரையே,

வலி
அது கூட
நீ
எனக்கு தந்த
வரப்பிரசாதமடி
என்
கண்ணே,,,,,
பங்குனியில் எடுத்த (பிறந்த)
என் மகளின் பிறந்தநாளுக்கு
வலைப்பூவில்
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கும்,
வந்து வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும்

நன்றிகள் பல,,,,,,,


சீர்மிகு வளம்பல தரும்
சித்திரையே,
உன் வரவால்
இங்கு
வன்முறை விலகட்டும்,
வளம் பல பெருகட்டும்,
பெறுதல் மகிழ்வன்று
பெற்றுக்கொள்ளச் செய்தலே
மகிழ்வு என்ற
எண்ணம் எமக்குள்
பெருகட்டும்,
எம்
உழைப்பாளர் சோதரன்
சோர்வில்லாத
உலகம் காணட்டும்,
சித்திரையில்
வான்மழையின்
ஒரு துளிக்காக
ஏரி குளங்கள் தவம் மேற்கொள்கின்றன,
வா
வான்மழையின் வரம்
தா,
வேதனை அவலம் அகன்று
துன்பங்கள் நீங்கி ஒளிவீசிட
சிறுமை
பேதமை
பிணக்குகள் அற்று
சகல நன்மைகளும் பெற்று
காலமெல்லாம் இன்பம்
பொங்க
மன்மத ஆண்டே
வருக வருகவே,,,,,,,
பூக்கள் படம் க்கான பட முடிவு 

Friday 10 April 2015

வாழ்த்த வாருங்கள்


  வாழ்த்த வாருங்கள்
நான்
வார்த்தைத் தேடி
அலைந்த போது,
வந்து கிடைத்த
கவிதை நீ,,,,,,,,,,,


இன்று 10.04.2015 என் மகளின் 4 வது பிறந்தநாள்.

உங்கள் வாழ்த்துக்கள் பெற விருப்பமுடன்
பால.சாராகெஜலெட்சுமி.
வாருங்கள், மாலை விருந்துக்கு.
பூக்கள் படம் க்கான பட முடிவு
 

Wednesday 1 April 2015



     



மாவீரன் விசுவநாததாஸ் 3



         1940 ஆம் ஆண்டு திரும்பவும் நாடகங்களை நடத்தத் திட்டமிட்டார். இந்த நாடகங்களினால் வரும் வருமானத்தை வைத்து ஏலத்திற்கு வரும் வீட்டை மீட்டு விடலாம் என எண்ணினார். உடல் நலம் குன்றியதோடு ஊரிலிருந்து வந்து சென்னையில் பழைய வண்ணாரப் பேட்டையில் சாக்கு வியாபாரியான தாமஸ் வீட்டில் தங்கினார்.

     தாஸை வைத்து நாடகம் நடத்தும் நாடக கான்ட்ராக்ட்காரர்களை போலீஸ் மிரட்டியதன் காரணமாக, அவருக்கு நாடகங்கள் குறைந்தன. அதோடு நாவிதர்சமுதாயத்தைச் சேர்ந்த தாஸோடு நடிக்க மாட்டோம் என்று நடிகைகள் பின்வாங்கினார்கள். இது தாஸை வெகுவாகப் பாதித்தது. மனதளவில் நொந்துபோனார். ஒவ்வொரு நாடகத்திலும், மறக்காமல்,
தாழ்த்தப்பட்ட சோதரரைத் தாங்குவோர் உண்டோ,
மண்ணில் ஏங்குவோர் உண்டோ
   என்ற பாடலைப் பாடிக் கொண்டுதான் இருந்தார். நடிகைகளில், கே.பி.ஜானகி அத்தடையை மீறி அவருடன் நடிக்க முன்வந்தார். பிறகு முத்துலட்சுமி என்ற பிராமண நடிகை. பிறகு மற்றவர்களும் முன் வந்தார்கள்.
பல்வேறு துன்பங்களைத் தாங்கினார்,

தன் நாடகத்தின் முலம் தன் வீட்டை மீட்க எண்ணி, 1940 டிசம்பர் 31-ம் நாள் இரவு, ‘வள்ளித் திருமணம்நாடகம், சாலக் கொட்டகை எனப்பட்ட ராயல் தியேட்டரில் நிகழ இருந்தது. ஒரு வார நாடக வருவாயில் கடனை ஓரளவு அடைத்து விடலாம் என்று நினைத்திருந்தார் தாஸ். முதல் மூன்று நாட்கள் மேடை ஏறும் உடல் நிலையில் அவர் இல்லை. 1940 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி இரவு வள்ளித் திருமண நாடகத்தில் முருகன் வேடத்தில் நடிப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. ராயல் தியேட்டரே நிரம்பி வழிந்தது. போலீஸாரும் வந்திருந்தனர்.
    அன்று இரவு மேடைக்கு முருகன் வேஷத்தில் வந்தார். முதல் காட்சி. முருகன், மயிலாசனத்தில் அமர்ந்து பாடத் தொடங்கினார்.
மாயா உலகம்-இம்
மண் மீதேஎன்ற பல்லவி. தொடர்ந்து பாட முடியாமல் அவர் தலை சாய்ந்தது.
     விசுவநாததாஸ் முருகன் வேஷத்தைக் கலைக்காமலேயே இறந்துபோனார். என்னைப் பற்றி தவறான தகவல் வந்தால் நம்ப வேண்டாம் என்று தாஸ் சொல்லி இருந்ததால் அவர்கள் குடும்பத்தினர் இறுதி யாத்திரையில் கலந்துகொள்ள வரவில்லை. 1941 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி மயில்மீது அமர்ந்த முருகன் வேடத்தில் இறுதியாத்திரை நடந்தது.

யானைக்கவுனி, சைனா பஜார், செளகார்பேட்டை, தங்கசாலை வழியாக இறுதி ஊர்வலம் சென்றது. இரவு 7 மணி அளவில் மூலக்கொத்தலம் மைதானத்தில் தாஸின் மகன் சுப்பிமணியம் சிதைக்கு தீ மூட்டினார். அவரை எரித்தது சாதித் தீ என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
     நாடகம் முடிந்தவுடன் அரங்கை பிரித்துவிட வேண்டும் என சென்னை மாநகராட்சி நாடகத்திற்கு அனுமதி வழங்கும்போதே உத்தரவிட்டிருந்தது. நீதிக்கட்சி மேயரான வாசுதேவ் ஈமச் சடங்குகள் முடியும் வரை அரங்கை பிரிக்க வேண்டாம் என்று மறு உத்தரவு இட்டார். அரங்கின் உரிமையாளர் கண்ணையா உடையார் இனிமேல் இந்த அரங்கில் எந்தக் கலை நிகழ்ச்சியும் நடக்காது. தாஸின் நிகழ்ச்சியே கடைசியாக இருக்கட்டும் என்றார்.

    முன்டி அடித்து ஓடிப்போய் நாற்காலியில் அமர்ந்து கொண்டவர்களுக்கு வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. தியாகிகள், தாழ்த்தப்பட்ட சாதியாகவோ, விலக்கப்பட்ட சாதியாகவோ, விளிம்பு நிலைச் சாதியாகவோ இருந்துவிட்டால்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
     இந்தியச் சுதந்திரப் போருக்குத் தலைவர்கள் செய்த பங்களிப்புக்குப் பெரும்பாலும் சுவடுகள் இல்லை. விடுதலை பெற்ற தேசத்தைக் காணத் தன் நடிப்பாலும் பாட்டாலும் மகத்தான தன் போர்க்குணத்-தாலும் தொண்டு செய்த மாபெரும் கலைஞர் விசுவநாததாஸ், மறக்கப்பட்ட பெரும் ஆளுமைகளில் ஒருவர். அவர் காலத்தில் அவருக்கு இணை சொல்லத்தக்க நாடகக் கலைஞர் இந்திய அளவிலே மிகச் சிலரே இருந்தார்கள்.

      தாஸ் வாழ்ந்தது 54 ஆண்டுகள் மட்டுமே. இதில் 29 முறை சிறைக்குச் சென்றார் அந்த வீரத் தியாகி. தேசத்தைத் தவிர, விடுதலையைத் தவிர வேறு எதையும் நினைக்காத அந்தக் கலைஞனை, பின்னால் சுதந்திர இந்தியப் பதவிக்கு வந்தவர்கள் மறந்தே போனார்கள்.
  தன் நாடகமொன்றில் முருகன் வேடமிட்டு மயில் மீது அமர்ந்தபடி அமரரான அந்த தேச விடுதலைப் போராட்ட வீரர், அந்த தியாக புருஷனுக்கு அஞ்சலி செலுத்துவோம்.