Thursday, 22 December 2016

வையத்து வாழ்வீர்காள்!

                                     
                                      வையத்து வாழ்வீர்காள்!

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.

                           

ஓங்கி உலகளந்த

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்

பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.



ஆழிமழைக் கண்ணா

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீகை கரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்

பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


மாயனை மன்னு

 மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.


புள்ளும் சிலம்பின

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.


17 comments:

  1. மார்கழி அழகு.. மார்கழியின் கோலங்களும் அழகு..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகள் பல,,

      Delete
  2. Replies
    1. நன்றி நன்றி டிடி சார்,,

      Delete

  3. "மார்கழி காலம் வந்ததும் - ஆங்கே
    மின்னும் கோலங்கள் காண்!" என
    அழகான பதிவு இங்கே கண்டேன்!

    http://www.ypvnpubs.com/
    https://seebooks4u.blogspot.com/
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி சகோ,,

      Delete
  4. மார்கழிக் கோலங்கள்அழகு

    ReplyDelete
  5. மார்கழிக் கோலங்கள் அனைத்தும் அழகு.

    ReplyDelete
  6. மார்கழி கோலங்கள் அழகு, பாடல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. மார்கழியில் எங்கு பார்த்தாலும் திருப்பாவையும் கோலங்களுமே காண்கிறேன் சும்மாச் சொல்லக் கூடாது நீங்கள் வரைந்த கோலங்களா . அழகு தான்

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா என் பக்கத்தில் உள்ள கோலங்கள் அனைத்தும் நான் போட்டவை தான்

      வருகைக்கும் தங்கள் பார்வையில் என் கோலங்கள் பாராட்டு பெற்றதும்,,மகிழ்ச்சி நன்றிகள் ஐயா,

      Delete
  8. ஒ....மார்கழி மாதம் உலகளந்த பெருமாள் நாளோ..... அப்பச் சரி....

    ReplyDelete