Monday 26 December 2016

நோற்றுச் சுவர்க்கம்

             

                      நோற்றுச் சுவர்க்கம்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?

ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.


       முற்பிறவியில் நாராயணன் நாமம் சொல்லி வாழ்ந்ததால் இந்த பிறவியில்  இப்படி

ஒரு  சொர்க்கம் போன்ற சொகுசான வாழ்க்கை வாழ்கிறாய்,, நீ கதவை திறக்காவிட்டாலும் 

பராவியில்லை,, பேசவும் மாட்டாயோ,, நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்துள்ள 

நாராயணனை நாம் போற்றி  பாடினால் அவன் நம் நோன்பிற்குரிய பலனை 

உடனே தருவான்.   தூக்கத்திற்கு கும்பகர்னனை உதாரணமாக சொல்வார்கள்,, உன் 

தூக்கத்தைப் பார்த்தால் நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் இருக்கிறது.

 சோம்பல் திலகமே, கிடைததற்கரிய அணிகலனே,  எந்த தடுமாற்றமும்  

 இல்லாமல் கதவை திறந்து வா,,


   

                     

16 comments:

  1. இரசித்தேன் சகோ

    ReplyDelete
  2. நம்மைப் போல (!) சோம்பல் திலகங்களும்
    அந்தக் காலத்திலேயே இருந்திருக்கின்றார்கள்..

    ReplyDelete
    Replies
    1. ஆம் நம்மைப் போல,, ஹாஹா சோம்பல் திலகங்கள்,,

      வருகைக்கு நன்றிகள் பல,,

      Delete
  3. அழகான கோலம்! தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. நிரந்தரமா... தூங்குறவங்கள..பத்தி ஒன்னும் சொல்லலையே...

    ReplyDelete
    Replies
    1. ஏன்,,இங்கேயுமா?? வலிப்போக்கரே,, வருகைக்கு நன்றிகள் பல,,

      Delete
  5. கோலமும், தமிழ்ப் பகிர்வும் .பகிர்வும் அருமை.

    ReplyDelete
  6. கோலமும் அழகு!பாடல் தமிழின் சுவையைச் சொல்லும் பாடல்!! அருமை

    ReplyDelete
  7. பாடலையும், கோலத்தையும் இடும் பாங்கு அருமை. நன்றி.

    ReplyDelete