ஏன்?
இளஞ்சூரியன் மெல்ல மறைந்து இனிய தென்றல் வீசும் மாலை வேளை, கடல் தன்
அலைக்கரங்களை வீசி நடைபயிலும் இடம்.
நானும் என் மன அலைகளில்.
சற்று
தூரத்தில் நான்கு பேர் அமர்ந்து பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது.
ஒட்டு கேட்க அல்ல, தானாக விழுந்த செய்தி,
நேத்து எம்பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கபோனோம்,
கவர்மெண்ட் பஸ். பாதியில் நின்னுபோச்சு.
கவர்மெண்ட் வண்டினா அப்படித்தான்,,,,,,,,,,,,,
தனியார் பஸ்சுனா இப்படி ஆகுமா? வண்டி எவ்வளவு அருமையாய் பராமரிப்பான். வண்டிய
எடுக்கும் போதே வண்டியோட கண்டிசனச் செக் பண்ணித்தான் எடுப்பான்.
பிரைவேட்ல இருக்கிற ஒழுங்கு, கவர்மெண்ட்ல கண்டிஷன்
எங்க இருக்கு?
ஆமா, ஆமா, இப்ப கூரியர் சர்வீசையே எடுத்துக்கிடுங்க
தபால் எவ்வளவு
சீக்கிரம் போகுது. இன்னிக்கு நாலு மணிக்குக் கொடுத்தா நாளக்கிப் பதினோரு மணிக்குள்ள போய்ச் சேந்திருது. அதே நேரத்தில் போஸ்டல் சர்வீசைப் பாருங்கோ ஒரு இடத்திற்கு வறேன்னு லெட்டர் போட்டா நாம போய்ச் சேர்ந்த பிறகு தான் லெட்டர் வந்து சேருது.......
சீக்கிரம் போகுது. இன்னிக்கு நாலு மணிக்குக் கொடுத்தா நாளக்கிப் பதினோரு மணிக்குள்ள போய்ச் சேந்திருது. அதே நேரத்தில் போஸ்டல் சர்வீசைப் பாருங்கோ ஒரு இடத்திற்கு வறேன்னு லெட்டர் போட்டா நாம போய்ச் சேர்ந்த பிறகு தான் லெட்டர் வந்து சேருது.......
இப்போ
பொதுவானவைகளை பேசியவர்கள் தங்கள் சொந்த சமாச்சாரங்களுக்கு தாவினார்கள்.
பொண்ணுக்கு
மாப்பிள்ளைப் பார்க்கப் போனீங்களே என்னாச்சு?.
மாப்பிள்ளை
விட்டுகாரங்களுக்குப் பெண்ணைப் பிடிச்சிருச்சு எங்களுக்கும் மாப்பிள்ளையைப்
பிடிச்சுப் போச்சு மத்த லௌகிக விஷயங்கள் இனிமேல்தான் பேசி முடிவுக்கு வரணும்.
மாப்பிளப் பையன் என்ன செய்யிராரு?
பஞ்சாயித்து
யூனியன் ஆபிஸ்ல கிளார்க்கா இருக்காரு. பரவாயில்ல கவர்மெண்ட் ஜாப்
கவலைப்படவேண்டாம்.
ஆமா
பியூனோ வாச்சுமேனோ அரசாங்க உத்யோகம்னா அதுக்கு ஒரு மரியாதைதான்.
ஆமா, தனியாரெல்லாம் நம்ப முடியாது.
அவன் வச்சது தான் சட்டம். ஒண்ணும் கேட்க முடியாது. தெரியாமலா சொன்னாங்க கால்
காசானாலும் கவர்மெண்ட் காசு என்று.............
இந்த இரு உரையாடல்களுக்கும் பொதுவானவர்கள் அவர்கள்.
எனக்கு
புரியல.
தாங்கள் தான் சொல்ல வேண்டும் ஏன் இந்த முரண்?.
நரம்பு முளைக்காத நாக்கு நாலும் பேசுமாம். அருமையாக ஒட்டுக்கேட்...சாரி உங்க காதுல வந்து விழுந்துருக்கு.
ReplyDeleteஜீ,,,,,,,,,,,,,,, நான் தான் சொல்லிட்டேனே, வருகைக்கு நன்றிகள்.
Deleteஆகா
ReplyDeleteஇன்றைய யதாரத்தநிலையினை
படம் பிடித்து காட்டிவிட்டீர்கள் சகோதரியாரே
பணிப் பாதுகாப்பிற்கு மட்டும் அரசாங்கம் வேண்டும்.
இதுவே நிரந்தரம் ஆகிவிடுமோ, தங்கள் வருகைக்கு நன்றி சகோ,
Deleteஹஹஹஹஹஹ் இதிலிருந்து என்ன தெரிகின்றது?!!! மக்கள் தங்களுக்குச் சாதகமாக அமைவதை மட்டுமே மதிக்கின்றார்கள்...சுயநலவாதிகள்தான்....எப்படி ஒரு மன நிலை பாருங்கள்!
ReplyDeleteதங்கள் கருத்துரைக்கு நன்றிகள். தொடர்ந்து வாருங்கள். வாழ்த்துங்கள்.
Deleteலஞ்சம் கொடுக்கும்போது எரிச்சல் வருகிறது .லஞ்சம் வாங்குபவனுக்கு பொண்ணைக் கொடுப்பதில் சந்தோசப் படுகிறார்கள் .இந்த இழிநிலைக்குக் காரணம் ,சுயநலம்தான் !
ReplyDeleteநம் அளவில் அனைவரும் நலம் என்று மட்டும் நினைப்பது, தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteஇன்றைய நிலைமையை நீங்க பதிவாக கொடுத்திருக்கீங்க ! மிக அருமை.
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteஇதுதைத்தான்சமூக பொருப்பற்ற சுயநலம் என்பது...............
ReplyDeleteஉண்மைதான். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteஆதாயம் தான் காரணம்...
ReplyDeleteதொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteஅரசாங்க வேலை நிரந்தரம் என்று எண்ணும் மக்கள்
ReplyDeleteஅரசாங்கத்தை நிலையானது என்று "ஏன்?"
சொல்ல முடியவில்லை?
ஏன் என்று சிந்திக்க வைத்தமைக்கு மிக்க நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteம்... இன்றைய நிலை... என்னத்த சொல்ல...?
ReplyDeleteதொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteஅரசு வேலைக்குப் போனால் -
ReplyDeleteநோகாமல் நுங்கு தின்னலாம்..
அதற்காகத் தான்!..
தங்கள் பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும்,
Deleteஎன் அழைப்பின் பேரில் வந்து கருத்து சொன்னதற்கு நன்றிகள் பல.
அரசாங்க வேலை பெருவனிடம் (exception for merits) ஒருமுறையே முதலீடு செய்யும் வாய்ப்பு அதிகம். அதைப்பின் நிரந்தர நிர்ணயக்கப்பட்ட வருமானம்.
ReplyDeleteஅரசாங்க பொருள் பலமுறை மாற்றபட்டால்தான் அரசியல்வாதிகளும், (அனைவருமல்ல) அதிகாரிகளும், ஒரு சேவை பொருளுக்கு பல முதலிடுகளை ஏற்படுத்தி (சுய லாபத்துடன் லஞ்சமாக, மேல் வருமானமாக, etc.) பொருளாதார நாசம் செய்வதே அரசாங்க பொருளின் இலக்கணம்.
ஒரு நல்ல ஒப்பிடு, அருமை சகோதரியே.
sattia vingadassamy
தங்கள் வருகைக்கும், மேலான கருத்துக்கும் நன்றிகள் பல
ReplyDeleteஉண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது மாதிரி இருக்கிறது. அவர்கள் பேச்சு
ReplyDeleteதங்கள் வருகைக்கும், மேலான கருத்துக்கும் நன்றிகள் பல
ReplyDelete