என்
வலைதள ஆசான்.
சிலர் எங்கு சென்றாலும்
சங்தோஷத்தை மட்டுமே
கொண்டு செல்வார்கள்.
அவர்களது பாதையில்
புன்னகையும் பூரிப்பும்
அன்பும் கருணையும்
நிறைந்து இருக்கும்.
மனிதாபிமானம்
மரத்துப்போய்,
மனித
உயிர்கள் வெறும்
மலைப்பிஞ்சுகளாக
கருதப்படும் நிலையில்,
மனம் சோம்பிக் கிடக்கையில்
சோம்பல் நீக்கி
ஆறுதல் படுத்த
மட்டுமே
தெரிந்த அன்பான
ஓர் இதயம்.
இந்த வலைதள பூங்காவில்
என் கால்கள் பதிய
என்னை ஊக்கியவர்.
நான் செயல்படுத்த
முடியவில்லை எனும் போது,
தானே வலைப்பூ
உருவாக்கி பெயரிட்டவர்.
பாலமகி
பின் உள்ள புத்தகமும்
அவரின் கை வண்ணமே,
பிறரை வாழ்த்துதல் ஒன்றே
அவரின் தொழில்.
ஒரு கணிதத்துறைக்குள்
இத்துனை
தமிழ் மறக்காதலா
என்று
நான்
வியந்ததுண்டு.
ஆம்,
அவரின் படைப்புகள் ஒன்றே
அதற்கு சாட்சி.
ஒரே நிறுவனம்
ஆயினும்
எங்கோ
எப்போதோ
சில உரையாடல்கள்,
பணிக்கான சில தொலைப்பேசி
அழைப்புகள்
இவ்வளவே இம் மாமனிதரிடம்
எனக்குள்ள தொடர்பு.
எனக்கு அவர் உதவிய
பல்வேறு
தருனங்களில்
நான் சொன்ன
THANK YOU SIR க்கு
முறுவலோடு சென்றுவிடுவார்.
ஆகையால்,
நீர்
தந்த
என் நம்பிக்கையின்ஒரு துளி மிச்சத்தை
தரையில் பதித்து
வளர்ச்சியின் வித்தை
வானத்தில் தேடினேன்
வீழ்ந்த ஒரு துளியை
பொக்கிஷமாய்
வேரில் புதைத்தேன்
நான் விருச்சமாவேன்
எனும்
நம்பிக்கையுடன்
THANKYOU SIR…………………
திரு JK ஐயா அவர்கள் தான் தங்களின் ஆசான் என அறிந்து மகிழ்ச்சி..
ReplyDeleteஆசானுக்கு ஏற்ற மாணவியாய் இருந்து நல்ல பல பதிவுகளை வழங்க வேண்டுமெனெ வாழ்த்துகின்றேன்!..
தங்கள் வருகைக்கு நன்றிகள் பல. தாங்கள் சொல்லி தந்த சில தகவல்களுக்கும் என் நன்றிகள். உங்களைப் போன்றோரின் வாழ்த்துகள் வரும் எனும் போது நல்ல பதிவுகளையே தொடர்வேன். மீண்டும் நன்றிகள் பல.
Deleteஆசானை மதிக்கும் நீங்களும் ஒரு நல்ல மாணவிதான்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல
Deleteதங்களது ஆசானைப்போல் தாங்களும் வலைப்பூவில் ஆலமர விழுதுகள் போல் படர்ந்து பல நல்ல விடயங்களை தருக தருக என வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஅவர் அளவுக்கு முடியாது. ஏதோ என்னால் முடிந்தவரை முயல்வேன். தங்கள் வருகைக்கு நன்றிகள்.
Deleteஆசானுக்கு அருமையான ஒரு நன்றிப்பா.
ReplyDeleteஆசானை நினைவுக்கூர்ந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல,
Deleteஆசானுக்கு இயற்றிய பா அருமை சகோ.
ReplyDeleteநன்றி சகோ,,,,,,,,,,,,,,,
Deleteகொடுத்து வைத்தவர்கள். நீங்கள்......
ReplyDeleteஉண்மைதான் ,,,,,,,,,,,,,, நன்றிகள்.
Deleteகுருவிற்கு வணக்கங்கள்...
ReplyDeleteநன்றிகள் பல
Deleteசிலர் எங்கு சென்றாலும்
ReplyDeleteசங்தோஷத்தை மட்டுமே
கொண்டு செல்வார்கள்.----இவர்களும் கொடுத்து வைத்தவர்கள்.
ஆம்,,,,,,,,,,, தங்கள் வருகைக்கு நன்றிகள் பல
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
ஆசான் அரும்புகழைப் பேசும் எழுத்தெல்லாம்
வீசும் மணத்தை மிகுத்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
தாங்கள் என் வலைத்தேடி வந்தமைக்கு என் வணக்கமும் நன்றியும். தொடர்ந்து தாங்கள் வருகைப் புரிய வேண்டுகிறேன். நன்றிகள்.
ReplyDeleteஆசானுக்கு அளித்த பாடல் அருமை. அவர் போல் வலையுலகில் மின்ன வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றிகள் பல, தொடர்ந்து வாருங்கள்.
Deleteமகேஸ்வரி,
ReplyDeleteதங்களின் ஆசானின் மென்மையான -மேன்மையான குணத்தை பலர் அறிய பதிவாக்கியமைக்கு பாராட்டுக்கள்.
கறந்த பாலின் சுகந்த மணம் வீசும் கரந்தையாரின் படைப்புகள்போல் தங்களின் படைப்புக்களும் திசைகள் எட்டும் எட்டட்டும் நம் தமிழ் நெஞ்சங்களில் தித்திக்கட்டும். கணித மனதில் மனித நேயம் கனிந்த மனிதருக்கு எனது வணக்கங்கள்.
நட்புடன்
கோ.
தங்கள் வருகைக்கு நன்றிகள் பல, தொடர்ந்து வாருங்கள்.
Deleteஆசானை மதித்து கவிதையாக வழங்கிய தொகுப்பு அருமையான பதிவு.
ReplyDeleteஎனது வலைப்பூ மூன்றாம் ஆண்டு தொடக்கத்துக்கு வருகை தாருங்கள். இன்றைய பதிவு அசோகா அல்வா !
தங்கள் வருகைக்கு நன்றி.வருகிறேன்.
Deleteமனம் நெகிழ்ந்து போய்விட்டது சகோதரியாரே
ReplyDeleteதங்களுக்கு நான் ஆசானா,
ஒரு சில நிமிடங்கள்
செலவிட்டமைக்கே
இத்தகு பாராட்டா
தங்களின் அருங்குணம்,
பெருந்தன்மை கண்டு வியக்கிறேன்
சகோதரியாரே
தங்களைப் போன்ற உறவுகளைப் பெற
நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
சகோதரியாரே
நன்றி
தங்கள் மனம் அப்படி, எதையும் எதிர்பார்க்காத, தாங்கள் எனக்கு சில மணித்துளிகள் தான் செலவிட்டது என்றாலும் எனக்கு பெரும் பயன் தரும் செயல் அல்லவா? தெரியாத ஒன்றைத் தெளிவிப்பவர் ஆசான் தானே, என் கருத்துகளை நூல்லாக்கம் செய்ய இயலவில்லை எனும் போது தாங்கள் காட்டிய பாதை அல்லவா இது, நன்றி என்பது என் அளவில் மிக குறைந்த ஒன்றே, தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள் உங்கள் சகோதிரி வளர,,,, நன்றி.
Deleteதங்களின் அன்பிற்கு நன்றி சகோதரியாரே
Deleteதங்களின் வளர்ச்சியில் என்றென்றும் மகிழ்ந்திருப்பேன்
தங்களின் ஆசான் பாராட்டிய பெருமை பெற்றதற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் மீள் வருகைக்கு நன்றிகள் பல,,,,,,,,,,,,
Deleteசகோதரிக்கு வாழ்த்துக்கள். சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் நல்ல வழிகாட்டி.
ReplyDeleteஅய்யா அவர்கள் என் வலைதளம் வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் பல,
Delete"நான் விருச்சமாவேன் எனும் நம்பிக்கையுடன்"
ReplyDeleteஇந்த வரியே ஒருவரை வீரியத்துடன் செயல்படுத்தும்.
சகோதரிக்கு வாழ்த்துக்கள், வெற்றியுடன் மேலும் சிறப்பாக செயல்படுக.
sattia vingadassamy
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteசகோதரி தங்களின் ஆசானுக்குத் தாங்கள் படைத்தை நன்றி நவிலல் அருமை! அவரைப் போன்று தாங்களும் இந்த வலை உலகில் மிளிர வாழ்த்துகின்றோம். அவர் அருமையான ஆசிரியர்!
ReplyDeleteமுயற்சிக்கிறேன் அய்யா, தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் பல,
ReplyDeleteஅடுத்த பதிவை எதிர்பாரத்துக் காத்திருக்கும் வாசகன்.
ReplyDeleteவிரைவில், தங்கள் மேலான அன்புக்கு நன்றிகள்.
Deleteவாழ்த்துக்கள்! கரந்தையாரின் படைப்புக்கள் என்னை மிகவும் கவர்ந்தவை ஒருமுறை அலைபேசியில் உரையாடியுள்ளேன்! அவர் ஆசானாக வழிகாட்டுகையில் அச்சம் இல்லை! தொடருங்கள்!
ReplyDeleteஉண்மைதான், தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் பல,
ReplyDeleteஅன்புச் சகோ!
ReplyDeleteகரந்தையாரின் எழுத்துகள் அவரது வாசிப்புப் போலவே அபாரமானவை!
உங்களை அவர் ஆற்றுப் படுத்தியிருக்கிறார் என்றால் நிச்சயம் உங்கள் வருகையும் பதிவுலகிற்கு மிகுந்த நன்மை பயக்கும் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. தற்பொழுதுதான் தங்களின் தளம் வருகிறேன்.
என்னையும் இதுபோன்று முத்துநிலவன் அய்யா மற்றும் சிலர்தான் வலையுலகிற்குக் கொணர்ந்தனர்.
இங்கு வந்த பிறகுதான் எத்தனை எத்தனை ஆளுமைகள் நிறைந்த கடல் இது என்பதைப் பட்டினப் பிரவேசம் செய்யும் பட்டிக்காட்டானைப் போலவே இன்றும் கண்டு திகைத்துக் கொண்டிருக்கிறேன்.
கரந்தையில் இருந்து வருகின்றீர்கள் என்றால் தமிழோடு இருக்கின்ற பிணைப்புக் காரணமாகவே மனப்பூர்வமாக உங்களை வரவேற்கிறேன்.
உங்கள் ஆசிரியருக்கான உங்களின் கவிதை அபாரம்.
நன்றி
தங்கள் அன்பின் முதல் வருகைக்கு நன்றிகள் பல, நான் இன்னமும் பட்டிக்காட்டான்( காட்டி) தான். தொடர்ந்து வந்து வாழ்த்துங்கள் வளர்கிறேன்.
ReplyDeleteFantastic Akka ... கரந்தையார் மாதிரியான நன்மனிதர்களின் ஊக்கமும் உள்ளமும் என்னையும் எழுதவைத்தன . அவர்களைப்போற்றி பிள்ளைத்தமிழ் கூட பாடவேண்டும் என்று மனது துடிக்கும் . தமிழ்த்தாய் பாவமென்பதால் அத்தகைய கொடிய எண்ணத்தை மனதிலிருந்து அறுத்தெறிந்துவிட்டேன் . (பின்ன . நா பிள்ளைத்தமிழ் பாடுனா நாடு என்னாவாறது ....) . தொடர்ந்து எழுதுங்கள் . முடிந்தால் எனக்கும் கவிதை எழுதக்கற்றுத்தாருங்கள் . என்னுடைய ஆசானாக ....
ReplyDeleteவருக தம்பியாரே, நலமா, நீர் பிள்ளைத்தமிழ் பாட கேட்க நாங்கள் இருக்கிறோம். நீ எழுதும் அத்துனையும் கவிதை தான். யார் இல்லை என்று சொல்ல முடியும். கவிதை அவர் மனநிலை. தொடர்ந்து வந்து வாசிக்கவும் தம்பி.
Delete