Monday 30 March 2015

விசுவநாததாஸ் photos க்கான பட முடிவு
மாவீரன் விசுவநாததாஸ்

அவர் தாங்க வீரன் தியாகி விசுவநாத தாஸ்.          1886-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் நாளில் சிவகாசியைச் சேர்ந்த சுப்பிரமணிய பண்டிதருக்கும் ஞானாம்பாள் அம்மைக்கும் மூத்த மகனாகப் பிறந்தார் விசுவநாததாஸ். இவரின் இயற்பெயர் தாசரிதாஸ். சிவகாசியிலும், பாட்டன் ஊரான திருமங்கலத்திலும், திருப்பாவை பஜனை கோஷ்டியில் பாடுவது என்பதாக தாஸின் இசைப்பணி தொடங்கி இருக்கிறது. சட்டென இசையில் நுட்பங்களைப் பிடித்துக்கொண்டு பாடும் ஆற்றல், தாஸுக்கு மிக இயல்பாகக் கைவந்தது.
   எட்டு வயதுக்குள் ஊர்ப் பண்டிகை நிகழ்ச்சிகள், கோயில் நிகழ்ச்சிகள் தாஸ் இல்லாமல் நடவாது என்ற நிலையை உருவாக்கினார் சிறுவன் தாஸ். வெண்கலக் குரலால் ஊரைக் கட்டிப்போட்ட தாஸ், காலில் சதங்கையைக் கட்டிக்கொண்டு சப்ளா கட்டையைத் தட்டிக்கொண்டு தாளம் தவறாது ஆடியதை, சிவகாசியில் தோல் வணிகராக இருந்த தொந்தியப்ப நாடார் பார்த்துக் கொண்டே இருந்தார். நாடார், ஒரு நடிகர். நட்டுவாங்கம் அறிந்த ஒரு கலைஞரும்கூட. அருமையான பாடகர். தாஸுக்குள் ஒரு கலைஞன், பிறை நிலவாக ஒடுங்கிக் கிடப்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது.


    சினிமாவும், தொலைக்காட்சிகளும் வராத அந்தக் காலத்தில் மக்களுக்கு பொழுது போக்குச் சாதனாமாக விளங்கியது நாடகங்கள். இந்த நாடகத்தைக் கொண்டு மக்கள் உள்ளங்களில் சுதந்திரக் கனலை வளர்த்தவர்கள் பலர். அவர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் நாடக நடிகர், தேசபக்தர் எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ். இவருடைய இளமைக் காலத்திலேயே இவருக்கு நாட்டுப் பற்றும் தேசிய உணர்வும் ஏற்பட்டு இந்த நாட்டுக்காக ஏதாவது செய்தாக வேண்டுமென்று உணர்வு ஏற்பட்டது. இவர் விரும்பி ஏற்றுக் கொண்ட தொழில் நாடக நடிப்பு. தனது தொழில் துறையிலேயே மக்களுக்கு எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவு சுதந்திர தாகத்தை உருவாக்க வேண்டுமென்று இவர் முடிவு செய்து கொண்டார். நடிப்பு மட்டுமல்லாமல் இவர் ஓர் நல்ல நாடக ஆசிரியரும்கூட. இவருடைய நாடகங்களில் எல்லாம் தேச உணர்வைத் தூண்டும்படிதான் எழுதுவார்.

    இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு தனது நாடகங்கள் மூலம் தேசிய உணர்வை நாடெங்கும் பறப்பியவர்.
 அவருடைய 'வெள்ளை கொக்கு பறக்குதடி" எனும் அந்த பாடலை அது எந்த நாடகமாக இருந்தாலும் மக்கள் பலமுறை பாடச் சொல்லிக் கேட்பார்கள்.
அந்த முழுப்பாடலும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

கொக்கு பறக்குதடி பாப்பா!
கொக்குப் பறக்குதடி பாப்பா நீயும்
கோபமின்றி கூப்பிடடி பாப்பா (கொக்கு)
கொக்கென்றால் கொக்கு நம்மைக்
கொல்ல வந்த கொக்கு
எக்காளம் போட்டு நாளும் இங்கே
ஏய்த்துப் பிழைக்குதடி பாப்பா (கொக்கு)
வர்த்தகம் செய்ய வந்த கொக்கு நமது
வாழ்வைக் கெடுக்க வந்த கொக்கு
அக்கரைச் சீமை விட்டு வந்து கொள்ளை
அடித்துக் கொழுக்குதடி பாப்பா (கொக்கு)
தேம்ஸ் நதிக்கரையின் கொக்கு அது
தின்ன உணவில்லாத கொக்கு பொல்லா
மாமிச வெறிபிடித்த கொக்கு இங்கே
வந்து பறக்குதடி பாப்பா (கொக்கு)
கொந்தலான மூக்குடைய கொக்கு அது
குளிர்பனி கடல் வாசக் கொக்கு
அந்தோ பழிகாரக் கொக்கு நம்மை
அடக்கி ஆளுதடி பாப்பா (கொக்கு)
மக்களை ஏமாற்ற வந்த கொக்கு அதன்
மமதை அழிய வேண்டும் பாப்பா
வெட்க மானமில்லா அந்தக் கொக்கு இங்கே
மடியப் பறக்குதடி பாப்பா (கொக்கு)
பஞ்சாபில் படுகொலை செய்த கொக்கு அது
பழி பாவம் பார்க்காத கொக்கு
அஞ்சாமல் பாஸ்கரன் தமிழ்பாடி அதை
அடித்து விரட்ட வேண்டும் பாப்பா (கொக்கு)
இந்த பாடல் எழுதியது மதுரை பாஸ்கரதாஸ், ஆனால் நாடகத்தில் இவர் பாடுவது அத்துனை விறுவிறுப்பு,,,,,,,,,,,
இந்த வரிகளை பாருங்கள்,,,,,,,,
தேம்ஸ் நதிக்கரையின் கொக்கு அது
தின்ன உணவில்லாத கொக்கு பொல்லா
மாமிச வெறிபிடித்த கொக்கு இங்கே
வந்து பறக்குதடி பாப்பா (கொக்கு)
எனக்கு மிகவும் வரிகள்,
 இருங்கள் நாளை அவரின் அரசியர் நுழைவுடன் வருகிறேன்.
18 comments:

 1. அருமை.. மேலும் அரிய தகவல்கள் வரும் என நினைக்கிறேன்!..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்பின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல. தங்கள் நினைவுக்கு தகவல்கள் சேர்த்தே, நன்றி.

   Delete
 2. வணக்கம்
  அறியாத தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள்.

   Delete
 3. புதிய விடயம் எமக்கு காத்திருக்கின்றேன் அடுத்த பதிவிற்காக...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள்.

   Delete
 4. வணக்கம் சகோ!
  விசுவநாத தாஸைப் பெயர் அளவில் தெரியும். இந்தப் பாடலின் முதல் இரண்டு அடிகளைத் தெரியும். மற்ற செய்திகள் எல்லாம் நீங்கள் கூறும் முன்பு வரை அறியாதன.
  தங்களிடம் கற்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள்.

   Delete
 5. Wow ! இதுவரைக்கும் இவரைப்பற்றி கேள்விபட்டதில்லை அக்கா . கதரின் வெற்றி மட்டும் கேள்விபட்டுள்ளேன் ... தெரியப்படுத்தியமைக்கு நன்றி அக்கா ..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள்.

   Delete
 6. அறியாத தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி......

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள்.

   Delete
 7. அறியாத விஷயங்கள்....சிறப்பு சகோ

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள்.

   Delete
 8. பாடல் வரிகளுக்கு பல நன்றிகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள்.

   Delete
 9. விஸ்வநாத தாசைப் அரிய தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி ! இளம் வயதில் கொண்ட ஆர்வம் வளர்ச்சி தேச பக்தி அப்பப்பா நல்லதோர் பதிவு. இனிய கவிதை அனைத்திற்கும் வாழத்துக்கள் சகோ

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள்.

   Delete