உலக நாடக தினம்
இன்று உலக நாடக தினம். ஒவ்வொறு ஆண்டும் உலக நாடக தினமாக மார்ச் 27ல் உலக
நாடக விற்பன்னர் ஒருவரை நியமித்து அவரது
செய்தியை உலக நாடகவியலாளருக்கு வழங்குதல் மரபு. அதன்படி இந்த ஆண்டு போலந்து நாட்டு
நாடக விற்பன்னர் கிறிஸ்டோ வர்லிகோவ்ஸ்கி செய்தி வழங்கியிருக்கிறார். அரங்க
மேடையும், நடிகர்களின் நடிப்பும் பத்தாம்பசிலித்தனமாகவே இருப்பதை அனுமதிக்க
முடியாது, உலகைப் பார்த்து உள்ளம் கொந்தளிக்காமல் இருக்க முடியவில்லை.
கொந்தளிப்பின் வெளிப்பாடுகள் என மேடைகிளில் நகல்களாக மாற்றாமல் படைப்பாக்கங்களாகச்
செய்திட வெண்டும். காஃப்கா போன்ற படைப்பாளர்களை எண்ணிப் பார்க்க
வேண்டியுள்ளது.கிரேக்க கலையான பிராமிதியாஸ் கதையைக் குறிப்பிடும் போது வாழ்க்கை
உண்மை என்பது மடிவு. இது விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்பார் காஃப்கா. அதுபோல
நாடக அரங்கமும் விளக்க முடியாத உண்மைகளை விளக்க வேண்டும். சமுகம் மேம்பட நாடக
அரங்கும் தன் பங்களிப்பை செம்மையாகச் செயற்படத் தவறக் கூடாது. இது அவரின் செய்தியின்
தமிழ் சுருக்கம்.
இந்த சமுகம் மேம்பட செய்தவர்கள் ஏராளம்,,,,,,,,,,,,,,
மாவீரன் விசுவநாததாஸ்
என்ன திரைப்படம்
என்று நினைக்கீறீர்களா? அல்லது வேறு ஏதேனும் என்று.................
என்ன செய்வது
நம்மில் எத்துனைப் பேருக்கு இந்த பெயர் நினைவில் உள்ளது. சொல்லூங்கள் பார்ப்போம்.
எனக்கும் தெரியாது. என் ஆய்வியல் நிறைஞர்
பட்டத்திற்காக நான் ஆய்வேடு சமர்பிக்க தலைப்பு தேடிய போது, என் நண்பர் இவர்
பெயரில் செய்யுங்கள் தாங்கள் சிறப்பாக கொண்டுவருவீர்கள் என்றார். நான் என்னால்
களப்பயணம் போக முடியாது, உதவிக்கு ஆள் இல்லை என்றேன். உடனே அவர் நான் அனைத்தையும்
செய்து தருகிறேன் என்றார். மற்ற நண்பர்களும் உதவ தயார் என்றனர். ஆனால் ஏனோ எனக்கு
இந்த தலைப்பில் செய்ய மனம் ஈடுபடல,ஆனால் என் நண்பரோ விடாப்பிடியாக இந்த தலைப்பிலே
செய்ய முனைந்தார்.(இதில் வேடிக்கை என்வென்றால் என் வழிகாட்டி அந்த தலைப்பில் நான்
ஆய்வு மேந்கொள்ள விருப்பம் தெரிவித்தார், அவர் வழிகாட்டி விரும்பல) அவர் அருமையாக
செய்தும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றார். என் நண்பருக்கு நன்றி. அன்று
அவருடன் நான் இது சம்பந்தமாக சில தகவல்கள் சேகரித்து உதவும் போது தான் என் தவறு
புரிந்தது. எத்துனைப் பெரிய மனிதரின் வரலாறு என்னால் வெளிவராமல் போய்விட்டதே
என்று, இன்று அதற்கு பரிகாரமாய், அவர் சேகரித்த தகவல்களுடன் நான்,,,,,,,,,,,,,,,,,,,,
என்ன என் வலைவுலக
உறவுகளே என் மேல் கர்ணகொடுரமான தாக்குதலுக்கு தயாராகிவிட்டது போல்
உள்ளது,,,,,,,,,,,,,,,,,,,,,,,
சரி
யார் அவர்?
சற்று இருங்கள் இதோ வருகிறேன்.
நாடக தின வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteநாளை நினைவு படுத்தி அருமையான பதிவை பதிவிட்டுள்ளீர்கள்... நாடக தின வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் சகோ,
Deleteநாடக தின நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் சகோ,
Deleteஅடுத்த பதிவை காண ஆவலுடன்...
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் சகோ,
Deleteசிறிது விளக்கமாக எழுதி dindiguldhanabalan@yahoo.com தொடர்பு கொள்ளவும்...
ReplyDeleteநாடக தின நல் வாழ்த்துக்கள். உங்களுடைய ப்ளாக் லிஸ்டில் எனது வலைப்பூவையும் இணைத்ததற்கு மிக்க நன்றி. நீங்களும் தொடர்ந்து வருகை தாருங்கள்.
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் சகோ,
Deleteநாடக தின நல்வாழ்த்துக்கள் சகோ நாளைய பதிவுக்காக வெயிட்டிங்
ReplyDeleteநாளைய தினம் வரை காத்திருக்கிறேன். தாங்கள் அடுத்த பதிவை பதிவிடும் வரைக்கும் ...
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் சகோ,
Deleteமாவீரன் - தியாகி விஸ்வநாததாஸ்!..
ReplyDeleteஅந்தக் காலத்தில் தேசபக்தி நாடகங்களை நடத்தி சிறைக்குச் சென்றவர். என் தந்தை - இவரை அடிக்கடி நினைவு கொள்வார்..
முருகனாக நடித்துக் கொண்டிருந்த போது - நாடக மேடையிலேயே இவரது உயிர் பிரிந்தது.
இன்று பெரியோர்கள் இது போல் வரலாறு சொல்ல இளைய தலைமுறை விரும்பல போல்,,,,,,, தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Delete
ReplyDeleteசீக்கிரம் வாங்கம்மா .நாடகத்தின் அடுத்த காட்ச்சிக்காக முன் வரிசையில் காத்திருக்கின்றேன்.
கோ
வருகிறேன், தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteஅன்புள்ள சகோதரி,
ReplyDeleteஉலக நாடக தினம் மார்ச் 27ல் கிறிஸ்டோ வர்லிகோவ்ஸ்கி செய்தி வழங்கியிருப்பதைக் காணக் கொடுத்ததற்கு மிக்க நன்றி.
‘மாவீரன் விசுவநாததாஸ் ’ என்ற பெரிய மனிதரின் வரலாறு தங்களால் வெளிவராமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் தெரிந்தது. இன்று அதற்குப் பரிகாரமாய் அவரைப்பற்றி அறிந்துகொள்ள... தங்களின் முயற்சி கண்டு பாராட்டுகள்.
-நன்றி.
தங்கள் பாராட்டுக்கும், தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் சகோ,
Deleteஆவலுடன் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் சகோ
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் சகோ,
Deleteவிசுவநாததாஸ் பற்றி மேலும் அறிய தங்களின் வரவை எதிர்பாரத்துக் கொண்டு இருக்கிறேன்.
ReplyDeleteவருகிறேன் இதோ,,,,,,,,,,,,, நன்றி.
ReplyDeleteஆஹா............
ReplyDeleteஇன்னும் ஒரு தமிழறிஞர்....!
நீங்கள் தமிழ் படித்ததாகச் சொல்லவே இல்லை சகோ...!
நான் இன்னம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருப்பேனே..!!!
பரவாயில்லை இப்பொழுதாவது சொன்னீர்களே....!
இனிமேல் கவனமாய் இருப்பேன் நன்றி!!!
சகோ,
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள்,
தாங்கள் அவ்வாறு நினைக்க வேண்டாம்,
தங்களைப் போன்றவர்களிடம் கற்றுக்கொள்ளத்தான் இந்தப்
பக்கம்.
எனக்கு எதுவும் தெரியாது.
முனைவர் பட்டம் என்பது பட்டமே, கற்க வேண்டியது இனி ஏராளம்.
தாங்கள் தொடர்ந்து வந்து கருத்துச்சொல்லி கொட்டவும்,
////////தொடர்ந்து வந்து கருத்துச்சொல்லி கொட்டவும், ///
ReplyDeleteஎன்னை அப்படி நினைத்துவிட்டீர்களா சகோ..???????
தேள்கொட்டும்! தேனீக்கள் கொட்டும் என்பார்!
தெரியாமல் குளவிகளும் கொட்டல் உண்டு!
ஆள்கொட்டி பிள்ளைப்பாண் டியனார் என்றே
அறிந்ததுண்டு ! அக்கொட்டைப் பெற்றே னில்லை!
வாள்கொட்ட மடித்தவர்கள் வீழ்ந்தார்! வாழ்ந்தார்
வாழ்கின்ற இலக்கியங்கள் வடித்த பேர்கள்!
நாள்கொட்ட வாழ்ந்தேநான் நகர்வேன்! என்றும்
நான்கொட்டேன் பாலமகி பக்கம் வந்தே!!
பிள்ளைப்பாண்டியனை அறிவீர்கள் அல்லவா :))
என்னைத் தவறாக நினைத்துவிடாதீர்கள் சகோ!!!!
நன்றி.