Sunday 20 September 2015

நெல்லுச் சோற்றுக்கு இடம்விட்டு

                                 
நெல்லுச் சோற்றுக்கு இடம்விட்டு
                                           
                                             இலைச் சாப்பாடு படம் க்கான பட முடிவு

பிறந்தகுழந்தைக்கு பயத்தமாவும், வசம்பும், மையும் பாவப்பட்டுப்போனது,,,

பின்னலிட்டு பாவாடை சட்டையுடன் பள்ளிக்கு போனது,,,,,

பட்டுப்பாவாடை தாவனி சரசரக்க பார்த்தவிழி மோகித்திருக்க

பாதையெல்லாம் பூ பூத்தகாலம் புதைந்து போனது,,,,,

பம்பரமும் கல்லாங்காயும் கோலியும் கனவில் வந்துப்போகின்றன,,,

பருவத்தின் முதல் நாள் பயத்தில் நடுங்கும் அவளை ஆற்றுப்படுத்த

சல்லடை வைத்து மஞ்சள் நீருற்றி மகிழ்ந்த்து,,,

உளுந்தகளியும், உடைத்த முட்டையின் ஓட்டுக்குள், ஊற்றிக்கொடுத்த 

நல்லெண்ணெய்யும்  உடலுக்கு உரம் என்றது, இன்று

ஒன்றுமில்லா ஓவியமாக மனதில் ,,,,,,

தழயப் பின்னிய பின்னலில் கணகாமரமும் மல்லியும் கட்டிய காட்சிகள் ,,,

மஞ்சளின் மகத்துவம் அறியாமல் அதனை அந்நியனிடம் அடகுவைத்து

முகபூச்சு பசைகளில் இன்று ஒட்டிக்கிடக்கிறோம்,,

வாசல் அடைத்து கோலம் போட்டது வெட்டிச்செயலாகி 

இன்று கருவறையும் வெறும் அறையாகிப் போனது,,,

சேலையின் சிலிரிப்பு,,,,, வேட்டியின் கம்பீரம் வேடிக்கையாய் போனதே,,,,,,

கேழ்வரகு களியும், கம்மஞ்சோறும் நெல்லுச் சோற்றுக்கு இடம்விட்டுப்

போனதால் நாம் இன்று வைத்தியனிடம் வரம் வேண்டி,,,,

அத்தானும் மாமாவும் அகராதியில் டேய் ஆனாதே,,

அடுப்பங்கரைக்குள் ஆசைமனைவியின் ஓரப்பார்வைக்கே

காத்துக்கிடக்க வைத்த கூட்டுக்குடும்பம் குலைந்துப்போனதால்

நீதிமன்றங்கள் நிமிர்ந்து நிற்கின்றன,,,,

உடலை இறுக்கிப்பிடிக்கும் உடையும் வெட்டிய குட்டை முடியும்

இன்று நேரத்தை மிச்சப்படுத்தி தொடுதிரைக்குள்ளும் இணையத்தின் 

இடுக்களில் மனதைத் தொலைக்க உதவின, 

உடையும் நடையும் மாறலாம், தினுசு தினுசா பழக்கம் வரலாம் 

அறிவியலின் உள்ளாழம் உடைய சடங்குகளும் விழாக்களும்

கட்டுப்பட்டியாகியதை பண்பாட்டின் மாற்றம் என்று சொல்லும்

                       மனமே

மனிதம் மாறியதையும் பண்பாடு என்பாயா????

இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது.
வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை.
என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன் ---- முனைவர்.சீ.மகேசுவரி.




40 comments:

  1. அருமையாக இருக்கிறது! வெற்றிபெற வாழ்த்துக்கள்! கலி என்பதை மட்டும் களி என்று திருத்திக் கொள்ளுங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா வாருங்கள், முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் திரு. தளீர்,,,,,,,,
      மாற்றம் செய்துவிட்டேன். நன்றிகள் பல.

      Delete
  2. வணக்கம் சகோதரி.

    ஆகா..! கவிதைப் போட்டிப் பாடலா.? பிரமாதம் . நம் பண்பாட்டின் மங்கிய குறைகளை குறித்து சவுக்கடியாய் வார்த்தைகளைத் தொடுத்து அருமையாய் எழுதி உள்ளீர்கள். மடை திறந்த வெள்ளமாய் வந்த வரிகள் மனதை தொட்டு விட்டுச் செல்கின்றன. போட்டியில் வென்று பரிசைப் பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ,
      மனம் திறந்து பாராட்டும் தங்கள் வாழ்த்தை விட வேறு என்ன வேண்டும்,,
      வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

      Delete
  3. மனிதம் மாறலாமா
    அருமை சகோதரியாரே
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாருங்கள் சகோ,
    வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  5. அடேயப்பா!.. அருமை.. அருமை!..
    ஆற்றோட்டம் போல - சலசலக்கும் நடை!..

    வெற்றி பெறுதற்கு நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  6. தங்கள் வாழ்த்தும் வருகையுமே பரிசு தான்,,
    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  7. அருமை சகோ சமூகச்சாடல் அறச்சீற்றமாய்,,,,, அற்புதமான வரிகள் வெற்றி நிச்சயம் வாழ்த்துகள்
    இதுதான் என்னைப்போன்ற பாமரனுக்கும், தங்களைப்போன்ற முனைவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ,
      தங்களைப் போன்றவர்களினால் தான் இந்த படித்த பதர் வெளியில் வந்துள்ளது.
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிசகோ,

      Delete
  8. கவிதை வரிகள் மிக அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

      Delete
  9. சிறந்த ஒப்பீடு
    அருமையான எடுத்துக்காட்டுகள்
    சீரழியும் பண்பாட்டை எவரறிவார்!
    போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்

    முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
    http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

      Delete
  10. பாரம்பரியம் அருகிவருவதை அழகாக சொன்னீர்கள்.

    மான்குட்டித் துள்ளலும் மருண்ட பார்வையும்
    இனிமையான அக்கிளிப் பேச்சும் இல்லாமல்
    இருண்டு விடுமோ வாழ்வு ?

    அழகாக வந்திருக்கிறது கவிதை ம்..ம் wow
    வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்மா ...!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா
      இல்லைதான்,,,,,,,, ஆனால் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ள நாமே முயற்சிக்கும் போது,,,,,,,,
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிமா.

      Delete
  11. ம்.... பழைய நெனப்புதான் பேராண்டி...பழைய நெனப்புதான்...ம்....

    வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்ரீராம்,
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

      Delete
  12. அந்நிய மோகத்தினால் அழிவதோ நம்பண்பாடு? ஆதங்கம் வெடிக்கிறது அழகிய கவிதையோடு

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா, தங்கள் முதல் வருகை, தொடர விரும்புகிறேன்.
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

      Delete
  13. நம்மை நாமே மறந்துகொண்டிருப்பதை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியுள்ள கவிதை அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

      Delete
  14. நல்ல சிந்தனை.... பாராட்டுகள்.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

      Delete
  15. வணக்கம்! அருமையான ஆக்கம் வெற்றி பெற இனிய வாழ்த்துக்கள் நன்றி!

    தாங்கள் என் தளம் வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள் பல

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ, தங்கள் முதல் வருகை தொடரட்டும், இங்கு
      வந்தமைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

      Delete
  16. இன்றைய நிலையை படம்பிடித்து காட்டிய வரிகள் வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

      Delete
  17. எனக்கு இல்லை எனக்கு இல்லைன்னு புலம்ப வச்சிடிங்களே. இதை மட்டும் ஒரு நாளுக்கு முன்னாள் போட்டு இருந்தால், நான் பாட்டுக்கு நான் உண்டு என் வேலை உண்டுன்னு போய் இருப்பேன் இல்ல. இப்ப பாருங்க. புலியா பாக்காமலே பூனை சூடு போட்ட மாதிர் ஆயிட்டனே. ரசித்து படித்தேன், சிறிய பொறாமையோடு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    எனக்கு இல்ல.. ஐயோ.. 50,000 போர் காசுகள்.. எனக்கு இல்ல.. சொக்கா.. சொமநாதா..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள், வணக்கம்,நான் தான் கிடைத்தேனா இன்று,,,,,,
      உங்களுக்கு அப்படியே கொடுத்துவிடுகிறேன்.
      பணம் அல்ல,,,,,,,,,
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

      Delete
  18. நாம் மறந்து போன பழைய பண்பாட்டு நிகழ்வுகளை மீட்டெடுக்க உதவியது உங்கள் கவிதை. மனிதம் மாறியதையும் பண்பாடு என்பாயா என்பது சிந்திக்க வைக்கும் வரிகள்! வெற்றி பெற வாழ்த்துகிறேன் மகி! இன்னும் எழுதுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா, வணக்கம்,
      தங்களின் அன்பின் வாழ்த்திற்கு நன்றிகள்,
      தொடருங்கள், நன்றி.

      Delete
  19. அருமையான கவிப்பொருள்! சிறப்பு!

    போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  20. வாருங்கள் தங்கள் அன்பின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  21. கடைசில வச்சிங்க பாருங்க..//மனிதம் மாறியதையும் பண்பாடு என்பாயா????// துளைக்கும் ஒரு கேள்வி!
    அருமை, வெற்றிபெற வாழ்த்துகள் சகோதரி

    ReplyDelete
    Replies
    1. நன்றிமா தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும்.

      Delete
  22. காலத்தின் கோலத்தை பட்டியலிட்ட தாங்கள் வெற்றி பெற வாழ்த்துக்க்கள்!!!..........

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க நண்பரே

      Delete
  23. மாற்றம் ஒன்றே மாறாதது.

    போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அப்படி என்றால்,,,,,, மாறும் என்கிறீர்களா?
      வாழ்த்துக்களுக்கு நன்றிகள் ஐயா.

      Delete