Wednesday, 23 September 2015

முப்பதுக்கும் முன்பே மலடியாய் போனாள்
முப்பதுக்கும் முன்பே மலடியாய் போனாள்
வயல் படம் க்கான பட முடிவு
    அறிவியலின் ஆயிரம் கைகளும் ஆயிரம் திசைகளில் விரிந்து, இப்பரந்த உலகையே ஒரு கைப்பிடிக்கு கொண்டு வந்துவிட்டது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவசியமான தேவை யாதெனில் சுவாசிப்பதற்கு தூயகாற்று, பருகுவதற்குத் தூய நீர், உண்பதற்கு ஊட்டச்சத்துக்கள் கொண்ட நல்ல உணவு. இது தான் தூய்மையான சூற்றுச்சூழல் கொண்ட பூமி எனலாம். இந்நிலையில் இருந்து மாறியிருக்கும் தன்மையை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
                                  
     இயற்கை அமைப்பில் ஈடு இணையற்ற உற்பத்தி காரணியாக திகழ்வது நிலமாகும். இந்நிலம் மனிதனுக்கு வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் அளிக்கிறது. நிலத்தில் வெளியேற்றப்படும் கழிவுகளை நிலம் தன்வயமாக்கிக் கொள்வதால் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படுகின்றன.

   என் வாசக நெஞ்சங்களே, இதனை வாசித்து முடித்தபின் உங்கள் மனம் அமைதியாக இருப்பதை உங்களால் உணர முடிகிறதா? இவை மற்ற நிகழ்வுபோன்ற செய்தி என ஒதுக்கிச் செல்லாதீர் நான் சொல்ல போவது,,,,,,,, நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவாசிய பொருள்,,,,

     நிலம் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படுகின்றது. வேளாண் பயிர்களின் மகசூல் அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி,களைக்கொல்லி, பூஞ்சான் கொல்லி பொன்ற இரசாயன உரங்கள் மண்வளத்தைப் பாதிப்படையச் செய்கின்றன.

        ஒரு விவசாயி தன் நிலத்தில் பயிர் செய்வதற்கு முன் நிலத்தில் உள்ள களைகளை அகற்ற களைக்கொல்லி தெளிக்கிறார். அவை களைகளை மட்டுமா கொல்லும்????

  அடுத்ததாக விதைக்கும்போது நாற்றுகள் நன்கு வேர்பிடிக்க (நெல்லுடன்) விதையுடன் மருந்து கலந்து வீசுகிறார்.
   விதைத் 10ஆம் நாள் யூரியா, அடியுரம்,சல்பேட், குருனமருந்து இவைகள் அனைத்தையும் வீசுகிறார் ,,,

    நாற்று நல்லா தெளிவாக இல்லை என்றாலோ அல்லது பழுப்பு நிறத்தில் இருந்தாலோ பூச்சித் தாக்குதல் என்று கைத்தெளிப்பான் கொண்டு (ஸ்பிரே) மருந்து ,,,

. இந்த பூச்சிக்கொல்லி மருந்து பிற நாடுகளில் தடைச்செய்யப்பட்ட எண்டோசல்பான், மானோகொட்டபாஸ்.

  30 நாட்கள் கழித்து நாற்றைப் பறித்து நடும் போது அந்த நடவுக்கு முன் நிலத்தில் அடியுரம் என்று யூரியா சல்பேட் அந்த கலவை மீண்டும்,,,,,

   நட்ட 15 நாட்களில் ஒரு ஏக்கருக்கு 25 கிலோ யூரியா, 10 கிலோ நுண்ணுட்ட குருனை, அடியுரம் 25 கிலோ இவைகளைக் கலந்து வீசுகிறார்,,,,

   45 வது நாள் யூரியா

     கதிர் வரும் நாளில் சல்பேட்

    நெல் பால் பிடிக்கும் காலத்தில் சல்பேட்

     இதற்கிடையில் பயிர் செழிப்பாக இல்லை என்றாலோ பூச்சித் தாக்குதல் தெரிந்தாலோ கைத்தெளிப்பான் கொண்டு (ஸ்பேரே) பூச்சிக்கொல்லி மருந்தான என்டோசல்பான், மானோகோட்டபாஸ்,,,,,,,
                   மருந்து கைத்தெளிப்பான் படம் க்கான பட முடிவு

     நம் கால சூழலுக்கு வானம் மேகமுட்டமாக இருக்கும் காலத்தில், அதாவது சூரியவெளிச்சம் நல்லா இருந்தால் பூச்சி தாக்குதல் இருக்காதாம். ஆனால் அவ்வாறு இருக்க இயற்கை இசைவது இல்லை,,,,, எனும் போது எத்துனை முறை கைத்தெளிப்பான் மருந்து பயன்படுத்துவார்கள் என்று பாருங்கள்,,,,,

      இது போதாது என்று கதிர் சீக்கிரம் வர அதற்கும் ஒரு மருந்து,

120 நாட்கள் விளையும் நெல்லுக்கு இவ்வளவு மருந்தும்,,

 நாம் என்னத்தைச் சாப்பிடுகிறோம்,,,,,,,

    மகசூலை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இராசாயன உரங்களைப் பயன்படுத்தி அவற்றை அறுவடை செய்து உண்பதால் மனிதனின் உடல்நலமும் பாதிக்கப்படுவதுடன் நிலமும் இயல்புத் தன்மையிலிருந்து மாறும் தானே,,,,,

    ந்தப் பூமியை ஒரு நஞ்சுப்படலம்போல சூழ்ந்திருக்கின்றன பூச்சிக்கொல்லி மருந்துகள். பெயர்தான்பூச்சிக்கொல்லி…’, அவை உண்மையில் அழிப்பது சுற்றுச்சூழலைத்தான். இதில் சமீபத்திய வரவு வீரியம் நிறைந்த பூச்சிக்கொல்லிகள். பூச்சிகளுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தத்தில், பூச்சிகளின் தொடர் வெற்றியைச் சகித்துக்கொள்ள முடியாத மனிதன் கண்டுபிடித்த கொடிய நஞ்சு இது.  

     தற்போது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் வீரியம் குறைந்தது என்று சொல்லப்படும் எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி ஏற்படுத்திய பேரழிவுக்கு உதாரணம், கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதி. ஒரு காலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருந்த காசர்கோட்டில் மாநில அரசுக்கு சொந்தமான முந்திரித் தோப்புகளில், 1978-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஹெலிகாப்டர் மூலமாக எண்டோசல்பான் தெளிக்கப்பட்டது. அதன் பலன், இன்றைக்கும் அந்தப் பகுதியில் மனிதர்களும் கால்நடைகளும் நரம்பு மண்டலப் பாதிப்பு, மனநலப் பாதிப்புகளுடன் நடைபிணங்களாகத் திரிகிறார்கள். வீரியம் குறைந்த எண்டோசல்பானுக்கே இப்படி என்றால், தற்போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் அதைவிட பல மடங்கு வீரியமானவை. பசுமைப் புரட்சியின் விளைவாக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, நாடு முழுவதும் அபரிமிதமாக அதிகரித்துவிட்ட ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, பல்வேறு நோய்களாக விஸ்வரூபம் எடுக்கின்றன.

1.முதல் பூச்சிக்கொல்லி மருந்து நோபல் பரிசு பெற்ற பால் முல்லர் என்னபவரால் கண்டுபிடிக்கப்பட்டது.கொசுவை அழிப்பதற்காக, அதற்கு முன் இந்தப் பூமியில் பூச்சிகளை அழிப்பதற்காக செயற்கை வேதி மருந்துகள் எவையும் கண்டுபிடிக்கப்படல,,,,,,, அதன் பெயர் டிடிடீ அதாவது ஆர்கனோ குளோரைடு (organo chloride) ஆகும்.

2, இதன் வீரியம் சில நாட்களிலே குறைந்துபோனதால், அடுத்ததாக ஆர்கனோ பாஸ்பரஸ்’ (organo phosphorus) என்ற மருந்தைக் கண்டுபிடித்தார்கள்.

3,சில வருடங்களில் இதனுடைய வீரியமும் குறைந்ததால், அடுத்து ஒரு மருந்து வந்தது கார்பமேட்’ (carbamate) என்பது.

4.பூச்சிகளுக்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்ற மனநிலையில் அறிமுகம் ஆனதுதான் சிந்தடிக் பைரித்ராய்ட்ஸ்’ (synthetic pyrethroid) என்ற அடுத்த கண்டுபிடிப்பு. இதனையும் ஏமாற்றியது பூச்சிகள்.

5. அடுத்ததாக மிக வீரியம் உடைய நியோ நிக்கோடினாய்டு’ (neo nicotinoid) என்ற மருந்து அறிமுகம் செய்யப்பட்டது. பூச்சிகள் ஆடிப்போயின. பூச்சிகளை முட்டை பொறிக்கவிடாமல் செய்வது, வளர்சிதை மாற்றத்தைத் தடுப்பது, அதன் நரம்பு மண்டலத்தைக் கடுமையாகத் தாக்குவது எனப் பல்வேறு வகைகளில் இவை செயல்படுகின்றன.

        இத்தகைய கொடிய நஞ்சு நிறைந்த பூச்சிமருந்தைத் தெளித்து விளைவிக்கப்படும் உணவுப்பொருட்களை உட்கொள்ளும் போது, மனிதர்களுக்குள்ளும் இந்த நஞ்சு சென்று அதே பாதிப்பைக் கொடுக்கிறது.

        நிலத்தடி நீரிலும் பூச்சிக்கொல்லியின் எச்சங்கள் கலந்துவிட்டன. 2011 2012 ஆம் ஆண்டுகளில் புனேயில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம், கோலா குளிர்பானம் ஒன்றில் பூச்சிக்கொல்லிகளின் எச்சம் கலந்திருப்பதை ஆய்வில் கண்டுபிடித்தது. இது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் குளிர்பானத்தில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட ரசாயனம் டி.டி.டீ. என்ன கொடுமை எனில், இந்தியாவில் 1970-களிலேயே டி.டி.டீ தடை செய்யப்பட்டுவிட்டது. அதற்கு முன்பு பயன்படுத்திய நஞ்சின் எச்சம் நிலத்தடி நீரில் அப்படியே இருந்திருக்கிறது. அதுதான் குளிர்பானத் தயாரிப்புக்காக நிலத்தடி நீரை உறிஞ்சும்போது, தண்ணீருடன் கலந்திருந்திருக்கிறது. யோசித்துப் பாருங்கள்கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அதன் எச்சம் நீரில் கலந்திருக்கிறது எனும்போது, உணவுப் பயிர்களில் நஞ்சைத் தெளித்து அடுத்த நாளே நாம் சாப்பிடுகிறோம். 

         முட்டைகோஸ், காலிபிளவர், திராட்சை போன்றவற்றில் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படுகிறது.  நன்றாகக் கழுவிவிட்டுச் சமைத்தால் பூச்சிமருந்து போய்விடும் என்றும் நினைக்கிறோம். கழுவினால் போய்விடுவதற்கு, அது தூசி அல்லவிஷம்.

   இருபதாயிரம் ஆண்டுகளாக இளமையோடு இருந்த நிலமகளை இருபதே ஆண்டுகளில் அறுபது வயதை அடைந்தாற் போல் ஆக்கிவிட்டோம்.

      மேகங்களின் பிரசவம் மழைமட்டுமே
      மற்ற எல்லாமே பூமியின் பிரசவம் தானே,,

     நிலம், நல்ல மாசு அற்ற தன்மையுடன் இருந்தால் தான் தாவரங்கள் செழித்து வளர முடியும். என்னதான் நீர்வளம் மிக்கு இருந்தாலும், நிலம் பண்பட்டதாக இருக்க வேண்டும். 

            கன்னி நிலமென்று சொன்ன பிறகும்
            ரசாயன முறையில் கருத்தரிக்கச் செய்கிறோமே
            வீரிய விதையும் ரசாயன உரமும்
            மருந்தும் தெளித்தால் மகசூல் அமோகம்
            கன்னி பூமியோ வலு இழந்தாள்
            முப்பதுக்கும் முன்பே மலடியாய் போனாள்
                 வறண்ட நிலம் படம் க்கான பட முடிவு  நன்றி படம் கூகுல்
நன்றி - தகவல்கள்- திரு.பாலச்சந்திரன் அவர்கள்.


இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது.


      வகை- (2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு-கட்டுரைப் போட்டி-
              சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து,
   என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன் ---- முனைவர்.சீ.மகேசுவரி.


 
                                                                                                                                                                           

45 comments:

 1. மிகச்சிறப்பான கட்டுரை! வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல தளீர்.

   Delete
 2. வணக்கம்

  நல்ல கருத்தை வெளிப்படுத்தும் கட்டுரை. போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல,

   Delete
 3. அருமையான கட்டுரை. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. அம்மா வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல

   Delete
 4. இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் கேட்டினை தெளிவாக விளக்கி உள்ளீர்கள்.

  போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள், தங்கள் முதல்
   வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல

   Delete
 5. வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல ஸ்ரீராம்.

   Delete
 6. "கன்னி பூமியோ வலு இழந்தாள்
  முப்பதுக்கும் முன்பே மலடியாய் போனாள்" என
  சிறந்த ஆய்வுக் கண்ணோட்டத்தைத் தந்தீர்கள்
  வெற்றி பெற வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தொடரும் தங்கள் அன்பின் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல

   Delete
 7. நல்லதொரு கட்டுரை சகோ முடிவில் கவிதை அருமை மிகவும் ரசித்தேன் வெற்றி நிச்சயம் வாழ்த்துகள் சகோ..

  ReplyDelete
  Replies
  1. அன்பின் சகோ, தாங்கள் தரும் ஊக்கத்திற்கும் வருகைக்கும் நன்றிகள் சகோ,

   Delete
 8. உள்ளங்கை நெல்லிக்கனி!..

  கில்லர் ஜி அவர்கள் சொன்னவாறு - வெற்றி நிச்சயம்!..

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள், தங்கள் அன்பின் பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் என்றும் ,,,,,,,,,,, இன்னும் இரு தலைப்பு இருக்கே,,,
   எழுதனும் என்று விருப்பம் இருக்கு,,,,,, நேரம் கிடைக்குமா என தெரியல. முயற்சிக்கிறேன்.
   தங்கள் தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

   Delete
 9. // இருபதாயிரம் ஆண்டுகளாக இளமையோடு இருந்த நிலமகளை இருபதே ஆண்டுகளில் அறுபது வயதை அடைந்தாற் போல் ஆக்கிவிட்டோம்.//

  அற்புதமான வரிகள், மனதை ரணப்படுத்திய கட்டுரை!
  வெற்றிக்கு வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ,
   தங்கள் கட்டுரையைப் பார்த்து பின்னர் தலைப்பு முதற்கொண்டு மாற்றி அவசரமாக தட்டச்சு செய்து வெளியிட்டேன்.
   ஆக்கபூர்வமான யோசனையும் இருக்கு,,,,,
   பார்க்கிறேன் முடிந்தால் எழுதுகிறேன்,
   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

   Delete
 10. தரவுகளும், வர்ணனையும் திகைக்கவைகின்றன, பின் மலைக்க வைக்கின்றன!! அருமை சகோ!! போட்டியில் வெற்றிபெற புதுகை விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் உள்ளார்ந்த ஊக்கத்திற்கும், தொடர்வதிற்கும், வாழ்த்திற்கும் அன்பின் நன்றிகள் பல.

   Delete
 11. அருமை
  அருமை
  வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் தங்களுக்கே சகோ,
   அன்பின் வாழ்த்திற்கு நன்றிகள் பல.

   Delete
 12. விழிப்புணர்வு, இயற்கை நேசம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பல பொருண்மைகளை உள்ளடக்கிய பதிவு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா,
   தாங்கள் எல்லாம் வந்து படித்து வாழ்த்துவதே எனக்கு மகிழ்ச்சியே,
   வேறு என்ன? வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

   Delete
 13. நிலத்தை நஞ்சாக்கி...அதில் விளையும் பயிர்களை நஞ்சாக்கி.. குடிநீரை நஞ்சாக்கி.. நஞ்சினால் இன்று அவதிப்படும் நிலைக்கு யார் காரணம்? நாமேதான் என்பதை மிக அழகாக கட்டுரையாக்கித் தந்துள்ளீர்கள். இப்போதாவது விழித்துக்கொள்ளாவிட்டால் வருந்தலைமுறைக்கு எஞ்சப்போவது எதுவுமே இல்லை.. நல்லதொரு கட்டுரைக்குப் பாராட்டுகள். வெற்றிபெற இனிய வாழ்த்துகள்.

  ஆங்காங்கே தென்படும் ஒன்றிரண்டு பிழைகளை (களைகளை, அடியுரம் போன்று) மட்டும் களைந்தால் போதும்.. கட்டுரை மேலும் சிறப்புறும்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்களம்மா,,,,
   மிக்க மகிழ்ச்சி, சுட்டியதற்க நன்றிகள் பல, சரிசெய்னிறேன், என் கவனக்குறைவு தான்,
   தாங்கள் அருமையாக சொல்லியுள்ளீர்,,,
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

   Delete
 14. முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

  ReplyDelete
 15. அற்புதமான தகவல்களுடன் அவசியமான கட்டுரை தந்துள்ளீர்கள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள்,
   அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிமா

   Delete
 16. வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வலிப்போக்கரே,
   தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.
   வலையுலகம் தங்களுக்கு ஆறுதலாய்,,,
   நன்றி.

   Delete
 17. தாமதமாக வந்துவிட்டேன் மகி! பூச்சிக்கொல்லிகளின் விளைவால் நம் வேளாண்மை பாதிக்கப்பட்டதை நெகிழ்வுடன் விளக்கும் நல்ல கட்டுரை. வெற்றி பெற வாழ்த்துகிறேன் மகி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையே மகிழ்ச்சி தான், வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

   Delete
 18. வணக்கம்! அருமையான கட்டூரை வாழ்த்துகுகள்!! இன்று மழை இல்லததால் விவசாயம் அழிவுப்பாதையை நோக்கி ....
  மழை இல்லாதற்கு "பூச்சி கொல்லிகள் மட்டும் காரணமா?? மனிதனின் அதித ஆசையாலும் அதித தொழில் நுட்ப வளர்ச்சியே காரணம்! ஏனெனில் நான் விவசாய குடும்பம்தான்!!! நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்,
   வாருங்கள், உண்மைதான் மழையின்மைக்கு காரணம் மரம் இல்லை, சரி ஏன் மரம் இல்லை, நாம் வெட்டினோம்,,,,,, பின் வளர்த்தோமா? அதுமில்லை, மண் சரியில்லை எனும் போது அங்கு எதுவும் செழித்து வளர வாய்ப்பில்லையே,,,,, மண்ணின் இயல்புதன்மையை மாற்றிவிட்டோம் என்று தான்,,,,,,,, இது யாரின் குற்றமும் இல்லை, நானும் விவசாய குடும்பமே,,
   இதன் தீர்வு குறித்தும் பிறகு எழுதுகிறேன்.
   தங்கள் வருகைக்கும் நல்ல கருத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

   Delete
 19. உணவு என்ற பெயரில் விஷத்தினை சாப்பிடுகிறோம்.....

  நல்ல கட்டுரை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வணக்கம்,
   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

   Delete
 20. வணக்கம்மா தாமதத்திற்கு வருந்துகிறேன் எப்படித் தவறவிட்டேன் இதை. ம்..ம் ரொம்ப தலைவலி தொடர்ந்து அதனால் வாசிக்க முடிவதில்லை அதனால் வலைப்பக்கம் வருவது குறைவு ஏதாவது ஒன்று இரண்டு பார்த்ததுமே தலிவலி வந்து விடுகிறது. ஆகையால் தான் தாமதம். மன்னிக்கவும். அழகாக பூச்சி கொல்லி மருந்துகள் எப்படிக் எம்மைக் கொல்கிறது என்று தரவுகளுடன் தந்துள்ளீர்கள். விபரம். நன்றி வெற்றி பெற வெண் வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. வாருங்களம்மா, வணக்கம்,
   நலந்தானே? உடல்நனைப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் நினைத்தது சரி தான், உடல் நலன் முதலில், பிறகு பாருங்கள் பதிவுகளை, தாங்கள் எப்பவும் வரலாம், பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாமே,
   தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

   Delete
 21. மரியாதைக்குரியவரே,
  வணக்கம். தலைப்பை படித்தவுடனே பெண்கள் முன்னேற்றத்திற்கான கட்டுரையாக இருக்குமோ? இந்தப்படைப்பு .தவறி சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கட்டுரையில் இடம்பிடித்துவிட்டதோ? என எண்ண வைத்து திகிலடித்து வைத்துவிட்டீர்.வாழ்த்துக்கள்
  என வாழ்த்தும் அன்பன்,
  C.பரமேஸ்வரன்,
  http://konguthendral.blogspot.com
  சத்தியமங்கலம்,
  ஈரோடு மாவட்டம்-638402

  ReplyDelete
 22. வாருங்கள் ஐயா,
  தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள், தொடருங்கள்.

  ReplyDelete
 23. பூச்சி மருந்து நஞ்சாகும்விதத்தை அருமையாக சொல்லும் கட்டுரை. விழிப்புணர்வு கட்டுரை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்பிற்கு நன்றிகள்.

   Delete
 24. பேராசிரியர்க்கு வணக்கம்.

  மேலைநாட்டினர் வரவால் முற்றும் துடைத்தழிக்கப்பட்ட நம் மரபார்ந்த வேளாண் அறிவியல் முறைகளை மீட்டுருவாக்கும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை இக்கட்டுரை காட்டுகிறது.

  இரண்டாம் உலகப்போரின் முடிவில் காளான்களாய் முளைத்த வெடிமருந்து தொழிற்சாலைகள் போர் முடிந்தபோது அதற்குரிய மூலப்பொருட்களை என்ன செய்வது என்ற ஆராய்ச்சியும், எண்ணைக்கிணறுகளின் எஞ்சிய கழிவுகளை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்கிற ஆராய்ச்சியும் நம் ஐயாயிரம் ஆண்டுகள் துளித்துளியாய்ச் சேர்க்கப்பட்டு நம்மிடம் அளிக்கப்பட்ட பட்டறிவைப் பாமரத்தானமானது என்றும் படிப்பறிவில்லாதது என்றும் கேலி பேசி, மேலை நாகரிகத்தின் குப்பைத் தொட்டியாய் பரிசோதனைக் கூடமாய் நம் நாட்டை மாற்றிப் போட்டதன் அடையாளமே இந்தச் செயற்கை உரங்களும் பூச்சிக் கொல்லிகளும்.!

  பூச்சிக் கொல்லிகள் வீரியம் இழந்த போது மேலும் வீரியப்படுத்தப்பட்டவை அறிமுகப்படுத்தப்பட்டன என்பது போல் தங்களின் கட்டுரையில் சொல்லப்பட்டதை என்னால் ஏற்க இயலவில்லை. நான் அறிவியலாளன் அல்லன்.

  அம்மருந்துகளை எதிர்த்துவாழும் ஆற்றலை பூச்சிகள் பெற்றுவிட்டன என்பதுதான் பொருத்தமானதாய் இருக்க முடியும் என்று நான் கருதுகிறேன்.

  அவற்றின் மரபில் , உயிர் மூலக்கூறுகளில் இம்மருந்துகள் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்.

  இனி கண்டு பிடிக்கும் எவ்வளவு வீரியம் மிகுந்த பூச்சிக்கொல்லியையும் தாண்டி பூச்சிகள் உயிர் வாழும். அதற்கான ஆற்றலை அவற்றிற்கு இயற்கை அளிக்கும்.

  மனிதன் தன் அறிவியல் வாள் சுழற்றி இயற்கையை வெல்வதாகக் கருதிக்கொண்டிருப்பது அவனது மாயக்கற்பனை. ஏனில் அவை தரும் எதிர்விளைவுகளுக்குப் பொறுப்பேற்கவும் பலியாகவும் மனிதனே இருந்தாக வேண்டும்.

  நமது மரபு பூச்சிகளைக் கொல்வதல்ல. அவற்றை விரட்டுவது. ஏனெனில் அவற்றின் தேவையும் இயற்கையில் இருக்கிறது என்பதை அறிந்துணர்ந்து கொண்டது நம் முன்னோரின் சூழலியல் அறிவு. எந்த அறிவியல் பாடசாலையிலும் படித்தவன் அல்லன் அவன். மண்ணையும் மரங்களையும் புள்ளையும் பூச்சியையும் தன் வாழ்வின் அங்கமாகக் கொண்டது அவன் சமூகவியல் அறிவு.

  பூச்சிகளை அழித்தால் அவற்றை உண்டு உயிர்வாழும் பறவைகள் அழியும்.

  பறவைகள் அழிந்தால் அவற்றின் எச்சத்தில் இருந்து எங்ஙனும் எழும் தாவரங்கள் குறையும்.

  தாவரங்கள் குறைந்தால் விலங்குகளுக்கு வாழ்விடம் அழிந்துபோகும்.

  தாவர உண்ணிகளைச் சார்ந்து வாழும் ஊன் உண்ணிகள் அழிந்து படும்..

  எல்லாம் போக மனிதன் மட்டும் எஞ்சி இருந்துவிட முடியுமா என்ன?

  இவை நடக்க முடியாத கற்பனைகள் அல்ல. உலகின் சில பகுதிகளில் இவை நடந்தமைக்கு நம்மிடம் வரலாறுகள் உண்டு.

  மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று சொன்னதை வெறும் பாடமாக மட்டும் படித்துக் கொண்டிருக்காமல் செயல்படுத்தவும் வேண்டும் என்பதை உணர்த்தும் இதுபோன்ற தருணங்கள்.

  தங்கள் பதிவிற்கான பின்னூட்டத்தில் இருந்து விலகுகிறேன். மன்னிக்க.

  ““““““ அத்தியாவாசிய பொருள்““““““““““““ என்பது போன்ற பதிவின் இடையிடையே காணலாகும் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.


  வெற்றிக்கு மனப்பூர்வ வாழ்த்துகள்.

  நன்றி.

  ReplyDelete
 25. ஐயா,தங்களின் வருகைக் கண்டு மகிழ்ச்சி,
  தாங்கள் சொன்னது போல் இரண்டாம் உலகப்போர் முடிவில் இருந்த மீதி மருந்துக்களை எல்லாம் கொட்டி வைக்கும் குப்பையாக தான் நம்மை ஆக்கினார்கள்.

  பூச்சிக் கொல்லிகள் வீரியம் இழந்த போது மேலும் வீரியப்படுத்தப்பட்டவை அறிமுகப்படுத்தப்பட்டன என்பது போல் தங்களின் கட்டுரையில் சொல்லப்பட்டதை என்னால் ஏற்க இயலவில்லை. நான் அறிவியலாளன் அல்லன்.

  நானும் மருந்து வீரியம் என்று அல்ல,,, பூச்சிகள் அந்த மருந்தை எதிக்கொள்ளும் திறன் பெற்றன,,,, இப்படியே பல மருந்துகள் உருவாக்கப்பட்டன, கடைசியாக உருவாக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து இவைகளின் நரப்பு மண்டலத்தைத் தாக்கி செயல் இழக்க செய்யும் தன்மையுடையன,
  உதாரணமாக குண்டுதேனீ இவை தேன் எடுக்க சென்று பின் முடித்து திரும்பும் போது பாதையையே மருந்து போகுமாம்,,,, அத்தகைய பூச்சிக்கொல்லி மருந்துகள் இப்ப இருப்பவை,,
  இதற்கான தகவல்கள் சேகரிக்கும் போது நாம் உண்ணும் உணவு முழுக்க பூச்சி மருந்துகளால் ஆனவை எனும் உண்மை முகத்தில் அடித்தது.

  விவசாயிகள் மகசூல் அதிகரிக்கனும் என்று மருந்துகளை ஏகத்திற்கும் போடுகிறார்கள்.
  பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்,,
  வைத்தநகையை மீட்க,,,,,
  பெண்ணைக் கரைச்சேர்க்க,,
  வட்டிக் கட்ட,,
  வாங்கியதைக் கொடுக்க,,,
  எதுவும் முடியாத போது,, அவன் உயிர் மட்டும் தானே கொடுக்க முடிகிறது.
  ஆங்கிலேயர் செய்த ஒரு வேலையும் தெரிய வந்தது, அதனை வேறு ஒரு பதிவாக்க நினைத்தேன் முடியல,,,,,, ஆனாலும் நேரம் கிடைக்கும் போது எழுதனும்,,,,,,,

  மனிதன் இல்லாமல் இயற்கை வாழும்,,,,
  ஆனால் இயற்கை இல்லாமல் மனிதனால் வாழ முடியாது,,,
  இதனை பறவையிலார் சலிம்அலி அவர்கள்
  பறவைகள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது,,,,
  ஆனால் மனிதன் இல்லாமல் பறவைகள் வாழும் என்கிறார்,,,,

  இவை நடக்க முடியாத கற்பனைகள் அல்ல. உலகின் சில பகுதிகளில் இவை நடந்தமைக்கு நம்மிடம் வரலாறுகள் உண்டு.

  உண்மைதான் ஐயா,,,,,,
  வெகுவிரைவில்,,
  இறுதியாக,
  பிழைகள் களைய முயற்சிக்கிறேன்.அவசரம்,கொஞ்சம் சோம்பேறி,நிறைய அறியாமை,,,,
  தங்கள் வருகைக்கும், நீண்ட பின்னூட்டத்திற்கும், வாழ்த்திற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா

  ReplyDelete