ஐந்தமிழானவள் சூடிய வலைப்பூ
படம் நன்றி கூகுள்
வழுவல கால வகையினானே,,,,
நம் இலக்கண ஆசான் சொன்ன வரிகள்,,,,,,,,,
சைகை மொழியாய், குகைகளில் சித்திரமாய், பலப்பட்ட
ஒலிகளின் வழியாய், ஓலையில், காகிதத்தில் முகிழ்த்து வளர்ந்த அவளை முத்தமிழ்
என்றோம், பின் நான்கானாள் (அறிவியல் தமிழ்), இன்றோ ஐந்தமிழாய், ஆம் கணிணித்தமிழுமாய். வளர்ந்துள்ளாள்.
கணிணியில் கோலோச்சும் தமிழ் வளர்ந்து வந்த பாதை மிகப் பெரிது. தமிழ் அன்னைக்கு
அணிகலன்கள் (காப்பியங்கள்) செய்து அழகுப் பார்த்த நம் முன்னோர்களின் வழியில் அவள்
கூந்தலுக்கு பூச்சூடினர். ஆம் வலைப்பூச்சூடி அவளை மேலும் அழகாக்கிய கணிணியில், வலைப்பூக்கள் குறித்தே
இக்கட்டுரை.
தமிழ் வளர்ச்சிக்கு இணையத் தொழில்நுட்பம்
பெரிதும் பயன்படுகிறது. இணையம் வந்த பிறகு உலகம் ஒரு சிற்றூராகியது. இன்றைய அறிவியல்
வளர்ச்சியில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்றிருப்பது இணையமாகும். தகவல் தொழில்நுட்ப
உலகில் இணையம் மிகப்பெரிய உதவிகளை மொழி, இனம், பாராமல் உலக மக்களுக்குச் செய்து
வருகின்றது. இது விஞ்ஞானம் அறிவியல் கணக்குகள் என்ற குறிப்பிட்ட சிலவற்றிற்கு
மட்டும் பயன்படாமல் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றி வருகின்றது. நெடிய
பாரம்பரியம் மிக்க தமிழ்மொழியும் இவ் இணையத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்று
வளர்ந்து வருகின்றது. எண்ணிலடங்கா இலக்கிய வகைகளைப்
பெற்று வளர்ந்து வரும் தமிழ் மொழிக்குள் வலைப்பூக்கள் என்ற இலக்கிய வகையும் ஒன்று.
அதன் வளர்ச்சி மிகப் பெரிது.
ஒருவர் தன் கருத்துக்களைப் பிறருக்கு தெரிவிக்க ஒலி, ஒளி
வடிவம் மற்றும் ஓவியம், படங்கள், எழுத்துக்கள் இவைகள் அனைத்தையும் இணையம் வழியே
உதவும் சேவையே வலைப்பூ
என்றால் மிகையல்ல.
வலைப்பூ என்பதை
ஆங்கிலத்தில் பிளாக்(blog) என்கிறார்கள்.
இதன் மூலம் வெப்பிளாக் (webblog) என்பதாகும்.
ஜார்ன்பெர்கர் என்பவர் தான் இப்பெயர் சூட்டினார்.இது பின்னர் இரண்டாக
உடைக்கப்பட்டு ,,,,, ( இது நீங்கள் அறிந்தது தான்,) இப்படியே வலைப்பூ (blog) எனும் பெயர் நிலைத்தது.
ப்ளாக் (blog) எனும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையாகத் தமிழில் ஒரு பெயர் உருவாக்க விரும்பிய போது தமிழ் உலகம் மற்றும் ராயர் காபி கிளப் மடலாடற் குழு (மின் குழுமம்) உறுப்பினர்கள் தங்கள் கலந்துரையாடல்களின் வழியாக blog-க்கு வலைப்பூ என்று தமிழில் பெயர் உருவாக்கினர். இன்று தமிழில் இந்த வலைப்பூ என்ற பெயரே பயன்பாட்டில் இருந்து வருகிறது.
முதல் தமிழ் வலைப்பூ நவன் என்கிற வலைப்பதிவர் 2003 ஆம் ஆண்டில் ஜனவரி 26-ல் உருவாக்கினார் என்று அவருடைய வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேராசிரியர் மு. இளங்கோவன் எட்டாவது தமிழ் இணைய மாநாட்டு மலரில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவிலும் கார்த்திகேயன் ராமசாமி வலைப்பூதான் முதல் தமிழ் வலைப்பூ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.(karthikramas.blogdrive.com/archive/21.html)
தொடக்கக் காலத்தில் தமிழ் எழுத்துருப் பிரச்சனைகள் இருந்ததால் வலைப்பூக்களின் வளர்ச்சி சற்றுக் குறைவாகவே இருந்தது.
எழுத்துருச் சிக்கல், தட்டச்சுப் பலகைச்சிக்கல் தொடக்கத்தில் இருந்தன. இதனால் பல தமிழ் மென்பொருள்கள் உலகம் முழுவதும் தமிழர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் உருவாக்கப்பட்டன.
வலைப்பூக்களின் உள்ளடக்கத்தைக் கொண்டு
சில
வகையாக அவற்றை
வகைப்படுத்தலாம்.
தமிழ் வலைப்பூக்களில் அதிகமாக கவிதைகளுக்கான வலைப்பூக்கள் இருக்கின்றன. வலைப்பூக்களை உருவாகியிருக்கும் பல வலைப்பதிவர்கள் தங்கள் கவிதைகளை அவர்களுக்கான வலைப்பூக்களில் அதிக அளவில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.
கவிதைகளுக்கான வலைப்பூக்களைத் தவிர ஆசிரியர்களாகவும், தமிழாசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணியாற்றி வரும் சிலர் தமிழ் இலக்கியம் சார்ந்த கருத்துக்களைப் பதிவேற்றி வருகின்றனர்.
தமிழ் வலைப்பூக்களில் அதிகமாக கவிதைகளுக்கான வலைப்பூக்கள் இருக்கின்றன. வலைப்பூக்களை உருவாகியிருக்கும் பல வலைப்பதிவர்கள் தங்கள் கவிதைகளை அவர்களுக்கான வலைப்பூக்களில் அதிக அளவில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.
கவிதைகளுக்கான வலைப்பூக்களைத் தவிர ஆசிரியர்களாகவும், தமிழாசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணியாற்றி வரும் சிலர் தமிழ் இலக்கியம் சார்ந்த கருத்துக்களைப் பதிவேற்றி வருகின்றனர்.
ஆன்மீக ஈடுபாடுடைய பலர் அவரவர்க்குப் பிடித்த
ஆன்மீகக் கருத்துக்களை வலியுறுத்தும் விதமாக இந்து, இசுலாம், கிறித்தவம், பவுத்தம்
மற்றும் பிற ஆன்மீகக் கருத்துக்களைக் கொண்டு தமிழில் வலைப்பதிவு செய்து வருகின்றனர்.
வலைப்பூ உருவாக்குவது எப்படி? என்றும் சில வலைகள் கற்றுத்தருகின்றன. இணையப் பயன்பாட்டில் அதிகமாகப் பங்கு கொள்ளும் கணினிக்கான தொழில்நுட்பப் பணியிலிருக்கும் பலர் கணினி தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக உருவாக்கிய பல தமிழ் வலைப்பூக்கள் இருக்கின்றன.
பறவைகள், விலங்குகள், காடுவாழ் உயிரிகள்,
இயற்கை மேலாண்மை, கடல்சார் மேலாண்மைக் குறித்த தகவல்கள் பற்றி பலர் பதிவேற்றி
வருகின்றனர்.
விண்வெளி, அறிவியல், கணிதம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் சில வலைப்பூக்களையும் தமிழில் சிலர் உருவாக்கியுள்ளனர்.
அச்சு இதழ்கள்போல தமிழ் மின்னிதழ்கள் எண்ணற்றவை
தோன்றின. தமிழ்ப்படைப்புகளையும் படைப்பாளிகளையும் உலக அளவில் அறிமுகப்படுத்துவதில்
வலைப்பூக்கள் பெரும்பங்காற்றுகின்றன.
.
விதவிதமான சமையல், கோலம், கைத்தொழில் பெண் உடல் நலம், பெண்களுக்கான சுதந்திரம், வேலைவாய்ப்பு போன்ற சிறந்த வலைப்பூக்களும் தமிழில் உருவாகியிருக்கின்றன.
.
விதவிதமான சமையல், கோலம், கைத்தொழில் பெண் உடல் நலம், பெண்களுக்கான சுதந்திரம், வேலைவாய்ப்பு போன்ற சிறந்த வலைப்பூக்களும் தமிழில் உருவாகியிருக்கின்றன.
வலைப்பூக்களின் வருகையால் தமிழ் மொழி இலக்கியங்கள் வெளியுலக மக்களுக்குத் தெரிய வருகின்றன.தமிழில் இணையத்தில் எழுதுபவர்கள் பெருகியுள்ளனர். இதனால் தமிழின் வளர்ச்சி உயர்ந்துள்ளது.
இலங்கை,மலேசியா, கனடா,தென்கொரியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் போன்றவற்றில் வாழும் மக்களின் படைப்புகள் தமிழ்மொழியில் இருப்பதால் அனைவரும் கருத்தைப் பகிர்த்துகொள்ள முடிகிறது. தமிழ் மொழியின் இலக்கண, இலக்கியங்களான சங்க இலக்கியம் முதற்கொண்டு இக்கால இலக்கியங்கள் வரை வலைப்பூவினால் உலகத் தமிழ்ர்களுக்குக் கிடைக்கிறது. இதனால் தமிழ் மொழி வளர்ச்சிப் பெற்றுவருகிறது.
கணிப்பொறிச் சார்ந்த தகவல்கள் அதிகம் கிடைக்கின்றன. அறிவியல், விஞ்ஞானக் கருத்துக்களும் அது தொடர்பான புதிய
கண்டுபிடிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன. உலக நாடுகளில் உள்ள சைவ மடாலயங்களும், திருத்தலங்களும் பற்றியச் செய்திகள்
இடம்பெற்றுள்ளன். தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் அதிகம் வலைப்பூக்களில்
வெளிவருகின்றன.
வலைப்பூக்களில் வெளிவரும் படைப்புகளுக்கும், கட்டுரைகளுக்கும், கவிதைகளுக்கும், பிற கருத்துக்களுக்கும் உடனுக்குடன் பின்னூட்டம் என்ற பெயரில் விமர்சனங்கள் பல நாடுகளிலிருந்து எழுதுகின்றனர். இது தமிழ் மொழிக்குக் கிடைத்த விமர்சன இலக்கியம் என்றே கூறலாம்.
வலைப்பூ உருவாக்கி எழுதும் பதிவர்கள்
சந்திப்பும், மாநாடும் சமீப ஆண்டுகளில் இன்னும் அதிக ஆர்வத்தை அவர்களிடையே ஏற்படுத்தியுள்ளன
எனலாம். ஈரோடு, சென்னை மதுரை என நடைப்பெற்ற இச்சந்திப்புகள், இவ்வாண்டு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைப்பெற உள்ளது. இதில் தமிழ்நாடு அரசும் இணைந்து (தமிழ்
இணையப் பல்கலைக்கழகம்) தமிழ்த் தொண்டு ஆற்ற முனைந்திருப்பது வலையுலத்தின்
வள்ர்ச்சியே.
தமிழ் இலக்கிய வரலாற்றைச் சங்க காலம், சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கிய காலம், காப்பியக் காலம், சிற்றிலக்கிய காலம், இருண்ட காலம் என்கின்றோமே அதனைப் போன்று இன்றைய காலக் கட்டத்தைக் “கணினியுகக் காலம்” அல்லது “தமிழ் இணையக் காலம்” எனலாம். புதிய இலக்கிய வகையாக வலைப்பூ உருவாகி உலக மொழிகளில் தமிழின் பெருமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் பலவகைப்ப்ட்ட தமிழ் இலக்கியங்கள் வெளி உலகுக்கு விரைவாகக் கொண்டுச் செல்லப்படுகிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்கு வலைப்பூக்களின் பங்களிப்பும் அளவிட முடியாத ஒன்றாக இன்று உள்ளது.
(நன்றி- தரவுகள்
தந்துதவிய சுனிதா,அன்புச்செல்வன்,
பல வலைப்பக்கங்கள்,கூகுள்,,,,,,,)
இப்படைப்பு ‘வலைப்பதிவர்
திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ்
இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது.
வகை-(1) கணினியில் தமிழ்வளர்ச்சி-
கட்டுரைப் போட்டி-
கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள்,
என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல
என்றும் முடிவு வெளியாகும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன் ---- முனைவர்.சீ.மகேசுவரி.
அனைத்து தரப்பிலும் வெற்றிக் கொடி நாட்டியாகி விட்டது என நினைக்கின்றேன்!..
ReplyDeleteபுதிய தகவல்கள் - தெரிந்து கொண்டேன்..
வாழ்க நலம்.. வெற்றிக்கு நல்வாழ்த்துகள்!..
எல்லாம் தாங்கள் தரும் ஊக்கம் தான்,,,
Deleteதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி... என்றும்,,,,
தங்கள் பணியை என்ன சொல்வது என்றே தெரியலப்பா,,,,,,,
ReplyDeleteஇவ்வளவு வேகமாக பதிவிட்ட சில நொடிகள்,,,,
நன்றி நன்றி டி டி சார்,,,,,,,,
கணினியில் தமிழும் வலைப்பூ தோற்றம் பெருக்கம் இன்னும் பல செய்திகள். வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி ஐயா, வருகைக்கும், வாழ்த்திற்கும்.
Deleteநல்லதொரு விடயங்கள் அருமை சகோ வெற்றி உமதே வாழ்த்துகள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ,
Deleteஅறியாதத் தகவல்கள் அறிய தந்தமைக்கு நன்றி!!!
ReplyDeleteவாருங்கள் வலிப்போக்கரே, வருகைக்கு நன்றிகள்.
Deleteவலைப் பூவின் தோற்றம் பற்றி
ReplyDeleteஅறியாத பல செய்திகள் அறிந்தேன்
சகோதரியாரே
நன்றி
வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றி சகோ, தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்.
Deleteமுதல் வலைப்பதிவர் பற்றி இன்று தான் அறிந்தேன். வலைப்பூவில் தமிழின் வளர்ச்சி பற்றி விரிவாக எடுத்துரைக்கும் கட்டுரைக்குப் பாராட்டுக்கள் மகி! போட்டியில் எல்லாப் பிரிவுகளிலும் பங்கேற்றமைக்குப் பாராட்டுக்கள்! வெற்றி பெற வாழ்த்துகிறேன்!
ReplyDeleteவாருங்களம்மா, தங்கள் மனம் நிறை வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றிகள் பல.
Deleteநடப்பு சம்பவங்களையே பதிவாக மாற்றி அதை போட்டிக்கும் அனுப்பும் வல்லமை தங்களுக்கு மட்டுமே உண்டு. தமிழின் நவீன இனிமையை சொன்ன விதம் அருமை.
ReplyDeleteவெற்றிக்கு வாழ்த்துக்கள்!
என்னப்பா பன்றது,,,,, தங்கள் அளவுக்கு முடியாது இல்லையா? இது கிண்டல் தானே, தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ,
Deleteவலைப்பூவின் வளர்ச்சி பற்றி அழகாகச் சொன்னீர்கள்
ReplyDeleteவாழ்த்துகள்
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா
Deleteநல்ல ஆராய்ச்சி கட்டுரை,வலைப் பூவைப் பற்றி உங்கள் வலைப் பூவில் :)
ReplyDeleteநன்றி ஜீ,,,,,
Deleteஐந்தமிழ். அருமை. குகனோடு ஐவரானோம் என்பது மாதிரி கணினித் தமிழோடு ஐந்தமிழ்!
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துகள்.
நன்றி ஸ்ரீ,,,
Deleteவழியில் வளரும் தமிழ் பற்றி அழகாக தொகுத்து அளித்துளீர்கள். நன்றி!
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள் ...!
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிமா
Deleteநன்றி டி டி சார்.
ReplyDeleteவணக்கம் நல்ல வலைப்பூவை பற்றிய கட்டூரை! பல தகவல் தெரிந்து கொண்டேன் நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள்!
நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteவலைப்பூவின் வளர்ச்சி பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்.
ReplyDelete
ReplyDelete"தமிழ் இலக்கிய வரலாற்றைச் சங்க காலம், சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கிய காலம், காப்பியக் காலம், சிற்றிலக்கிய காலம், இருண்ட காலம் என்கின்றோமே அதனைப் போன்று இன்றைய காலக் கட்டத்தைக் “கணினியுகக் காலம்” அல்லது “தமிழ் இணையக் காலம்” எனலாம்." என்ற கருத்தை வரவேற்கிறேன்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.
Deleteவலைப்பூவின் வளர்ச்சி பற்றிய கட்டுரை சிறப்புங்க தோழி.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிமா
Deleteஅருமையான செய்திகள் அடங்கிய கட்டுரை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.
Deleteசிறப்பான கட்டுரை.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் சகோ,
Deleteவணக்கம் பேராசிரியரே!
ReplyDeleteதேர்ந்த பேச்சாளர் ஒருவரின் உரையை எழுத்தாக்கியது போல இருந்தது தங்களின் இந்தப் பதிவைப் படித்து முடிக்கும் வரை.
மேடையில் நல்ல பேச்சாளர் என்பதை இக்கட்டுரை வாயிலாக அவதானிக்கிறேன்.
மற்றபடி,
பழையன கழிதல் என்ற நூற்பாவைத்தவிர இன்ன பிற எல்லாம் எனக்குப் புதிய செய்திகள்.
தங்கள் பதிவின் வாயிலாகப் பலதகவல்களைக் குறித்துக் கொண்டேன்.
கட்டுரையின் நுவல் பொருளில் இருந்து விலகி என் மனதிற்குப் பட்டதைச் சொல்வதென்றால் , பவணந்தியை இலக்கண ஆசான் என நீங்கள் குறிப்பிட்டிருப்பது பேராச்சிரியம் ;)
வெற்றிக்கு வாழ்த்துகள்.
நன்றி.
வணக்கம் ஐயா,
Deleteமேடையில் தான் என் பேச்செல்லாம்,,,
அதில் என்ன ஆச்சிரியம், தாங்கள் தான் அவரை எப்படியாவது காப்பாற்றி விடுவீர்களே,,
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா