Friday 12 December 2014

நீர்



நீர்
நீருக்குத்தான் பூவுலகில் எத்தனை முகங்கள்,
மழை, பனி, அருவி, நதி, கடல், ஏரி, குளம், கிணறு இப்படி தண்ணீர் எடுக்கும் அவதாரங்கள் எத்தனை, இயற்கையோடு இனியதொரு தோழமை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த நம் முன்னோர்கள் மிகவும் அருமையாக நீண்டகாலத் திட்டமிட்டு ஊர்களை, நகரங்களை நிர்மாணம் செய்தார்கள். தாழ்வான பகுதிகளில் குளத்தையும், வாய்க்காலையும் வெட்டினார்கள். நதி வெள்ளம் பொங்கி நாச நர்தனமாடினாலும் மனிதர்க்கு தொல்லையில்லாத வகையில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.
கடலலைகளின் தாக்குதல்களிருந்து தப்பிக்கும் வகையில் கரைக்கு மிகத்தள்ளி வீடுகள் அமைக்கப்பட்டன.ஆனால் இன்றைய நிலையென்ன குளத்தை, ஏரிகளை, நதிப்படுகைகளைத் தூர்த்துதான் பேருந்து நிலையங்கள், அரசுஅலுவலகங்கஙள, குடியிருப்புப்பகுதிகள் அமைக்கப்படுகின்றன.இதனால் நிலத்தடி நீர் சுழற்சி முறை பாதிப்படைவதோடு பெரு மழைக்காலங்களில் வெள்ளம் தன் அகன்ற அலைவாய் திறந்து மக்களை, உடைமைகளை அள்ளி விழுங்குகிறது.
வருடம் தோறும் பொழிகிறது மழை
 இடிந்து விழுகிற கட்டிடங்கள்
சிதைந்த உடல்கள் பார்த்து
உச் கொட்டி பெருமுச்சு விட்டு
கடவுளை சபித்து நகர்கிறது
வேகமாய் நம் வாழ்வு,,,,,,,,
என்கிற கவிஞனின் வார்த்தைகள் தான் எவ்வளவு உண்மை,
 ஆனால் கருத்த மேகங்கள் கண் சிமட்டி கலைந்து போய் விட்டால்,,,,,,,
     ஒரு கவிஞன் சொல்கிறான் இப்படி
           சரியாய்த் தான் எழுதினான்
                மாணவன் பாழாறு
           மணல் லாரிக்காரர்கள் தினம்
கொள்ளை கொண்டால் நதிகள்
யாவுமே பாழாறு தானே
திசம்பர் 2004 ல் கோரத்தாண்டவம் ஆடிப்போன ஆழிப்பேரலை
அதனைத் தொடர்ந்து ஆண்டுதோரும் ஆடும் புயல்
இயற்கைச் சீற்றம் குறித்து முன்னெச்சரிக்கைகள் தந்தும் காப்பாற்றிக் கொள்ளாத அலட்சிய மனிதருக்குக் கடல் தந்த எச்சரிக்கையோ,,,,
நதி நீர் இணைப்பு
                வீணாகும் ஆற்றுநீர்
தேனாகும் இணைப்பால்
இணைப்போ கானல்நீர்,,,,,,,
எல்லாம் சரிதான் எதார்த்தமொன்று இருக்கிறதே,,,,
                மழை அழகுதான்
வீடு
ஒழுகாதவரை.

5 comments:

  1. நன்று

    ReplyDelete
  2. ///மழை அழகுதான்
    வீடு
    ஒழுகாதவரை.///
    அருமை சகோதரியாரே

    ReplyDelete
  3. நீருக்கு மட்டுமல்ல மனிதருக்கும் பல முகங்கள்தான்.

    கவிதையும் கற்பனையும் பாராட்டுக்குரியவை.

    மழை அழகுதான்
    வீடு
    ஒழுகாதவரை.

    வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete