Tuesday, 30 December 2014

புது வருட வரவேற்பு



   என் வருங்காலமே இது வெறும் கனவல்லவே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

 கதிரவனின் கடைக்கண் பார்வையில் மலர்ந்து இருக்கிறது
புது நாள்
புன்னகையுடன் தொடங்குவோம்
பூக்களாக நிறையட்டும்
இன்று
நாம் நினைப்போமே
நாம் மறந்த உண்மையை
பணம் சம்பாதிக் ஆயிரம் தொழில் இருக்கு
ஆனால்
உணவு சம்பாதிக்க விவசாயம் மட்டும் தான இருக்கு
ஒரு விவசாயி துணை என்ற திமிர் எனக்கும் உண்டு
நாங்கள் வயற்காட்டில் குனிந்து நின்றால் தான்
உங்களால் நிமிர்ந்து நிற்கமுடியும்,
பெற்ற சம்பளம் போதவில்லை
என்பதோடு மட்டுமே
நின்றுப்போனது
கற்றறிந்தோர் போராட்டம்.
கவலை இல்லை நமக்கு
விவசாயிகளின்
மனப்போராட்டம்.
இதே நிலை
நீடிக்குமாயின்
படித்தவன்
தன் நிலத்தை
பிளாட்டா போடுவான்
நாம் பிளாட் வாங்கி தினம்
சாப்பிடுவோம்.
இன்று
விவசாய விளை நிலம்
வெடித்து விட்டது
நாம் வேடிக்கைப் பார்ப்போம்
அங்கீகரிக்கப் பட்ட தகவலின் படி
வருடத்திற்கு 17500 விவசாயிகள்
தற்கொலை செய்து கொள்கிறார்கள்
நாம் உண்ண வளையும்
அவர்கள் நிமிராத வரை
நாடும் நிமிரப்போவது இல்லை
சோறு போடும் விவசாயியை அங்கீகரிக்காத
சமூகம், அழிவை நோக்கி செல்வது உறுதி.

Wednesday, 24 December 2014

மக்கள் திலகம்



உலக வரலாற்றில் சாதி இன மொழி போன்றவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டு ஒரு தனி மனிதருக்கு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினார்கள்.

பல மாநிலங்கள் விடுமுறை அளித்தன.

மாநிலங்கள் முழுவதிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

டெல்லி செங்கோட்டையிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் கட்சி தொடர்பான எந்த நிகழ்ச்சியையும் ஒரு வார காலத்திற்கு நடத்தவில்லை.

இந்தியா முழுவதும் துக்கதினமாக அறிவிக்கப்பட்டது.

தென்னக ரயில்வே தமிழகம் முழுவதும் அஞ்சலி செலுத்த வரும் மக்களுக்கு இலவசமாக சிறப்பு ரயில் சேவையை இயக்கியது.

அவரின் பொது கடைசி பேச்சு டிசம்பர் 23.

டிசம்பர் 24 அதிகாலை உடலை விட்டு உயிர் பிரிந்தது.

காலம் எத்தனையோ தலைவர்களை இழந்துள்ளது.

உடலால் மறைந்தாலும் மக்களின் உள்ளங்களில் தெய்வமாக வாழ்ந்து வரும் அந்த தலைவர் மக்கள் திலகம்

 

கிறித்து பிறப்பின் வாழ்த்துகள்



விதைகள் கீழ் நோக்கி எறியப்பட்டால் தான்
மேல் நோக்கி வளரமுடியும்,,,,,,,,,,,,,,
விழும் போது விதையென விழுவோம்
அப்போது தான்
விருட்சமாய்
விரியலாம்
உன் முதுகுக்கு
பின்னால்
பேசுபவர்களை பற்றி
கவலைப்படாதே,,,,,,,,
அவர்களுக்கு இரண்டு அடி
முன்னால்
நாம்
உள்ளோம்.
மனுமகன்
நமக்காய்
பிறந்துள்ளார்
வாருங்கள்
வணங்குவோம்......................

கலைத்துறையின் தலைமகன்






 100 படங்களை இயக்கிய இயக்குநர் கே. பாலசந்தர் காலமானார்!!

 

இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை, வசனகர்த்தா கதாநாயகன் என பல முகங்களைக் கொண்டவர் பாலசந்தர். மனித உறவுகள் மற்றும் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கியவர். பிரபலங்களை தமிழ்த் திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். தன் நீண்ட பயணத்தினை முடிக்காமல் தன் நிழல்களுடன் தொடர்வார்.



Friday, 12 December 2014

பின்னோக்கியான்: வரலாற்றுப் பக்கங்களிலிருந்து.... செந்தமிழ் மொழிப் பாதுகாப்பு

பின்னோக்கியான்: வரலாற்றுப் பக்கங்களிலிருந்து.... செந்தமிழ் மொழிப் பாதுகாப்பு

கரந்தை ஜெயக்குமார்: வேலு நாச்சியார் 2

கரந்தை ஜெயக்குமார்: வேலு நாச்சியார் 2

நீர்



நீர்
நீருக்குத்தான் பூவுலகில் எத்தனை முகங்கள்,
மழை, பனி, அருவி, நதி, கடல், ஏரி, குளம், கிணறு இப்படி தண்ணீர் எடுக்கும் அவதாரங்கள் எத்தனை, இயற்கையோடு இனியதொரு தோழமை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த நம் முன்னோர்கள் மிகவும் அருமையாக நீண்டகாலத் திட்டமிட்டு ஊர்களை, நகரங்களை நிர்மாணம் செய்தார்கள். தாழ்வான பகுதிகளில் குளத்தையும், வாய்க்காலையும் வெட்டினார்கள். நதி வெள்ளம் பொங்கி நாச நர்தனமாடினாலும் மனிதர்க்கு தொல்லையில்லாத வகையில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.
கடலலைகளின் தாக்குதல்களிருந்து தப்பிக்கும் வகையில் கரைக்கு மிகத்தள்ளி வீடுகள் அமைக்கப்பட்டன.ஆனால் இன்றைய நிலையென்ன குளத்தை, ஏரிகளை, நதிப்படுகைகளைத் தூர்த்துதான் பேருந்து நிலையங்கள், அரசுஅலுவலகங்கஙள, குடியிருப்புப்பகுதிகள் அமைக்கப்படுகின்றன.இதனால் நிலத்தடி நீர் சுழற்சி முறை பாதிப்படைவதோடு பெரு மழைக்காலங்களில் வெள்ளம் தன் அகன்ற அலைவாய் திறந்து மக்களை, உடைமைகளை அள்ளி விழுங்குகிறது.
வருடம் தோறும் பொழிகிறது மழை
 இடிந்து விழுகிற கட்டிடங்கள்
சிதைந்த உடல்கள் பார்த்து
உச் கொட்டி பெருமுச்சு விட்டு
கடவுளை சபித்து நகர்கிறது
வேகமாய் நம் வாழ்வு,,,,,,,,
என்கிற கவிஞனின் வார்த்தைகள் தான் எவ்வளவு உண்மை,
 ஆனால் கருத்த மேகங்கள் கண் சிமட்டி கலைந்து போய் விட்டால்,,,,,,,
     ஒரு கவிஞன் சொல்கிறான் இப்படி
           சரியாய்த் தான் எழுதினான்
                மாணவன் பாழாறு
           மணல் லாரிக்காரர்கள் தினம்
கொள்ளை கொண்டால் நதிகள்
யாவுமே பாழாறு தானே
திசம்பர் 2004 ல் கோரத்தாண்டவம் ஆடிப்போன ஆழிப்பேரலை
அதனைத் தொடர்ந்து ஆண்டுதோரும் ஆடும் புயல்
இயற்கைச் சீற்றம் குறித்து முன்னெச்சரிக்கைகள் தந்தும் காப்பாற்றிக் கொள்ளாத அலட்சிய மனிதருக்குக் கடல் தந்த எச்சரிக்கையோ,,,,
நதி நீர் இணைப்பு
                வீணாகும் ஆற்றுநீர்
தேனாகும் இணைப்பால்
இணைப்போ கானல்நீர்,,,,,,,
எல்லாம் சரிதான் எதார்த்தமொன்று இருக்கிறதே,,,,
                மழை அழகுதான்
வீடு
ஒழுகாதவரை.

Monday, 8 December 2014

இனியது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


 




  இயற்கையை ஒட்டிய வாழ்வு,,,,,,,,,,,,,,,,
இவ்வுலகம் இனியது,
இதிலுள்ள வான் இனிமையுடையது,,
காற்றும் இனிது,,,
தீ இனிது,,,,
நீர் இனிது,,,,,
நிலம் இனிது,,,,,,
ஞாயிறு நன்று,,,,,,,
திங்களும் நன்று,,,,,,,,
வானத்து சுடர்களெல்லாம் மிக இனியன,,,,,,,,,,
மழை இனிது,,,,,,,,,,
மின்னல் இனிது,,,,,,,,,,,
இடி இனிது,,,,,,,,,,,,
கடல் இனிது,,,,,,,,,,,,
மலை இனிது,,,,,,,,,,,,,,
காடு இனிது,,,,,,,,,,,,,,,
ஆறுகள் இனியன,,,,,,,,,,,,,,,,,,,
மரமும் செடியும், கொடியும் மலரும்,
காயும்,கனியும் இனியன,
பறவைகள் இனிய
ஊர்வனவும் இனியன
விலங்குகளெல்லாம் இனியவை
மனிதர் ‘மிகவும்‘ இனியர்
ஆஹா,,,,,, மகாகவிக்குத்தான் எத்துனை நம்பிக்கைச் சிந்தனை.
ஆனால் நடைமுறையில் பாரதி சிந்தனைப்போல் உலகம் இனியதாகவா இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நம் மனசாட்சியிடம் இக்கேள்வியை எழுப்புவோமானால் பதில் என்னவாக இருக்கும்
கசப்பான மவுனம் தானே

Thursday, 4 December 2014

ஒரு பெற்றோரின் கனவு மாளிகைக்கு
மனித வெடிகுண்டாய்
மாறி வருகின்றது இன்றைய தலைமுறை
எங்கே போகிறது நம் கலாச்சாரம்.
நம் கண் முன்னே கரைந்து காணாமல் போகும்
இன்றைப் போலவே நாம் பிறந்து வளர்ந்து
நம்முடன் விளையாடிய இயற்கையும்
இறந்து கொண்டே இருப்பதை
நாம் உணரவில்லையே.

Tuesday, 2 December 2014


அகன்ற உலகு நான்
என்றது அகல்
அழகிய உடல் நான்
என்றது திரி
அசையும் உயிர் நான்
என்றது சுடர்
உழைப்பு வடித்த
உதிரத்துளிகளாய்த்
தேங்கிய எண்ணெய்
வாய்

திறக்கவேயில்லை.

தொடரட்டும் இப் பணி

தீர்வுக்குக் காரணமாக இரு
பிரச்சனைக்குக் காரணமாக இராதே
நேற்றின் நிகழ்வுகள் நிழலாய் நீங்க
இன்றின் தோற்றங்கள் மாயமாய் மறைய
நாளை என்பதும் நம்பிக்கையாய் ஒளிர,,,,,,,,,,,,,
நன்றி

கரந்தை ஜெயக்குமார் அவர்களே

Monday, 1 December 2014



கனவுகள்
என் கனவுகள்
எல்லாம் நிறைவேறியதுண்டு
காலம் கடந்தேனும்
இந் நிஐம்மும்.

அம்மா

இருள் தின்னும்
ஒளிப் பறவை
விடுப்பு எடுக்காத
அவள்
பிதா

செம்புலப் பெயர் நீர்

யாயும் யாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயர் நீர் போல்
அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே