Friday, 30 January 2015

அய்

ojas-rajani--s11-600 

பொதுவாக திருநங்கைகள் கேலிப்பொருளாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் சமீபத்தில் வெளிவந்த ஐ படம் தன் கதைப்போக்கின் தொடக்கத்தில்,
 திருநங்கையை பெரியளவில் அறிமுகப்படுத்தி விட்டு, பின்னர் அவர் விக்ரமை காதலிப்பது பிறகு அது நிறைவேறாமல் போவதில் அவரும் வில்லியாக மாறுவது எல்லாம் தேவையா?.
   இன்று திருநங்கைகள் தாங்கள் எல்லோரும் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும் இத்தருணத்தில், மிகப் பெரிய இயக்குநர் என்று பேர் போன இவர் இப்படி காட்சி படுத்தி இருப்பது சரியா?
   காட்சிகளின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. பெரிய சம்பளம். அனைவரும் விரும்பும் ஒப்பனையாளர். அவர் ஒப்புக்கொள்ளும் நாள் கிடைப்பது அறிது இப்படி கதாநாயகி அறிமுகப்படுத்தும் பாங்கு சரி?.பின்னர் அவரையும் வில்லியாக மாற்றுவது, கதையென்றால் எப்படிவேணாலுமா? கொஞ்சமேனும் மாறுங்களேன்.
    ஊடகங்கள் தாங்கள் சமூகத்திற்கு செய்ய நினைப்பது என்ன என்று அவாக்ளுக்கு புரியாமல் இல்லை. எல்லாம் ஒரு மெத்தனம். நம் வரை நாம் நலம் எனும் கொள்கை.பணம் பன்னும் வழி. பார்பவர்கள் என்ன செய்ய?.


 

Sunday, 25 January 2015



குடியரசு தின வாழ்த்துகள்





nghq;fp tUk; mUtpia Nghy;
fUj;J kPd;fs;
jq;F jil ,d;wp ePe;jp nry;y
me;ehs;
rpiwapdpNy
fy;Yilj;j nghpNahh;fs;
nrf;fpOj;j rhd;Nwhh;fs;
vj;jidg; Ngh; vd;W
vz;z nrhd;dhy;
Vuhsk; Vuhsk; vd;fpwJ
,e;ehs;                        


Monday, 12 January 2015

Tuesday, 30 December 2014

புது வருட வரவேற்பு



   என் வருங்காலமே இது வெறும் கனவல்லவே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

 கதிரவனின் கடைக்கண் பார்வையில் மலர்ந்து இருக்கிறது
புது நாள்
புன்னகையுடன் தொடங்குவோம்
பூக்களாக நிறையட்டும்
இன்று
நாம் நினைப்போமே
நாம் மறந்த உண்மையை
பணம் சம்பாதிக் ஆயிரம் தொழில் இருக்கு
ஆனால்
உணவு சம்பாதிக்க விவசாயம் மட்டும் தான இருக்கு
ஒரு விவசாயி துணை என்ற திமிர் எனக்கும் உண்டு
நாங்கள் வயற்காட்டில் குனிந்து நின்றால் தான்
உங்களால் நிமிர்ந்து நிற்கமுடியும்,
பெற்ற சம்பளம் போதவில்லை
என்பதோடு மட்டுமே
நின்றுப்போனது
கற்றறிந்தோர் போராட்டம்.
கவலை இல்லை நமக்கு
விவசாயிகளின்
மனப்போராட்டம்.
இதே நிலை
நீடிக்குமாயின்
படித்தவன்
தன் நிலத்தை
பிளாட்டா போடுவான்
நாம் பிளாட் வாங்கி தினம்
சாப்பிடுவோம்.
இன்று
விவசாய விளை நிலம்
வெடித்து விட்டது
நாம் வேடிக்கைப் பார்ப்போம்
அங்கீகரிக்கப் பட்ட தகவலின் படி
வருடத்திற்கு 17500 விவசாயிகள்
தற்கொலை செய்து கொள்கிறார்கள்
நாம் உண்ண வளையும்
அவர்கள் நிமிராத வரை
நாடும் நிமிரப்போவது இல்லை
சோறு போடும் விவசாயியை அங்கீகரிக்காத
சமூகம், அழிவை நோக்கி செல்வது உறுதி.

Wednesday, 24 December 2014

மக்கள் திலகம்



உலக வரலாற்றில் சாதி இன மொழி போன்றவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டு ஒரு தனி மனிதருக்கு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினார்கள்.

பல மாநிலங்கள் விடுமுறை அளித்தன.

மாநிலங்கள் முழுவதிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

டெல்லி செங்கோட்டையிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் கட்சி தொடர்பான எந்த நிகழ்ச்சியையும் ஒரு வார காலத்திற்கு நடத்தவில்லை.

இந்தியா முழுவதும் துக்கதினமாக அறிவிக்கப்பட்டது.

தென்னக ரயில்வே தமிழகம் முழுவதும் அஞ்சலி செலுத்த வரும் மக்களுக்கு இலவசமாக சிறப்பு ரயில் சேவையை இயக்கியது.

அவரின் பொது கடைசி பேச்சு டிசம்பர் 23.

டிசம்பர் 24 அதிகாலை உடலை விட்டு உயிர் பிரிந்தது.

காலம் எத்தனையோ தலைவர்களை இழந்துள்ளது.

உடலால் மறைந்தாலும் மக்களின் உள்ளங்களில் தெய்வமாக வாழ்ந்து வரும் அந்த தலைவர் மக்கள் திலகம்

 

கிறித்து பிறப்பின் வாழ்த்துகள்



விதைகள் கீழ் நோக்கி எறியப்பட்டால் தான்
மேல் நோக்கி வளரமுடியும்,,,,,,,,,,,,,,
விழும் போது விதையென விழுவோம்
அப்போது தான்
விருட்சமாய்
விரியலாம்
உன் முதுகுக்கு
பின்னால்
பேசுபவர்களை பற்றி
கவலைப்படாதே,,,,,,,,
அவர்களுக்கு இரண்டு அடி
முன்னால்
நாம்
உள்ளோம்.
மனுமகன்
நமக்காய்
பிறந்துள்ளார்
வாருங்கள்
வணங்குவோம்......................

கலைத்துறையின் தலைமகன்






 100 படங்களை இயக்கிய இயக்குநர் கே. பாலசந்தர் காலமானார்!!

 

இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை, வசனகர்த்தா கதாநாயகன் என பல முகங்களைக் கொண்டவர் பாலசந்தர். மனித உறவுகள் மற்றும் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கியவர். பிரபலங்களை தமிழ்த் திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். தன் நீண்ட பயணத்தினை முடிக்காமல் தன் நிழல்களுடன் தொடர்வார்.