பொதுவாக திருநங்கைகள் கேலிப்பொருளாகவே
சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் சமீபத்தில் வெளிவந்த ஐ படம் தன் கதைப்போக்கின்
தொடக்கத்தில்,
திருநங்கையை
பெரியளவில் அறிமுகப்படுத்தி விட்டு, பின்னர் அவர் விக்ரமை காதலிப்பது பிறகு அது நிறைவேறாமல்
போவதில் அவரும் வில்லியாக மாறுவது எல்லாம் தேவையா?.
இன்று திருநங்கைகள் தாங்கள் எல்லோரும் அனைவராலும்
மதிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும் இத்தருணத்தில், மிகப் பெரிய இயக்குநர்
என்று பேர் போன இவர் இப்படி காட்சி படுத்தி இருப்பது சரியா?
காட்சிகளின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்திய விதம்
பாராட்டுக்குரியது. பெரிய சம்பளம். அனைவரும் விரும்பும் ஒப்பனையாளர். அவர்
ஒப்புக்கொள்ளும் நாள் கிடைப்பது அறிது இப்படி கதாநாயகி அறிமுகப்படுத்தும் பாங்கு
சரி?.பின்னர் அவரையும் வில்லியாக மாற்றுவது, கதையென்றால்
எப்படிவேணாலுமா? கொஞ்சமேனும் மாறுங்களேன்.
ஊடகங்கள் தாங்கள் சமூகத்திற்கு செய்ய நினைப்பது என்ன
என்று அவாக்ளுக்கு புரியாமல் இல்லை. எல்லாம் ஒரு மெத்தனம். நம் வரை நாம் நலம்
எனும் கொள்கை.பணம் பன்னும் வழி. பார்பவர்கள் என்ன செய்ய?.
கண்டனத்திற்கு உரிய செயல் சகோதரியாரே
ReplyDeleteThankyou sir,
Deleteஇவையெல்லாம் தேவையே இல்லை... ஆனால் பணம் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது...!
ReplyDeleteThankyou sir,
Deleteசகோதரிக்கு வணக்கம்,
ReplyDeleteமுதல் முறையாக உங்கள் வலைப்பூவை பார்க்க வாய்ப்பு கிடைத்தது, நன்றி.
திருநங்கை யார் ? ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர் தானே ? மனிதம் என்பது புனிதம். வலி உள்ளவருக்கே வேதனை தெரியும் - ஒரு உணமுற்றவரை போல். கேலி பொருள் அல்ல ஒரு உயிர், காசுக்காக எதையும் செய்யும் உலகில், உங்களை போல் சமுக உணர்வை சுட்டிக்காட்டும்போது வேதனையே விடையா ? சமுக குற்றமே. நன்றி.
வலைதளம் உள்ளது நண்பனிடம், அங்கு வாருங்கள் பல நல்ல தகவல்கள் பெறலாம். (http://kuzhalinnisai.blogspot.fr/).
தொடர்ந்து உங்கள் பதிவை வாசிப்பேன்.
sattia vingadassamy
தங்கள் வருகைக்கு நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.தங்கள் வலைதளம் வருகிறேன்.
Deleteஆயிரமாயிரம் கதா பாத்திரங்கள் திரையுலகில் குவிந்திருக்க வில்லியாக சித்தரிக்க
ReplyDeleteதிருநங்கை கதா பாத்திரம் தேவையா? சமூகத்தில் சக மனிதராக வேண்டி போராடி வரும் வேளையில் இவ்வாறு செய்து இருப்பது இழிவானது. ஒருவர்தானே நடித்தார் என்று எண்ணாதீர்கள் . இது ஒரு சமூக அவலமாகவே எனது பார்வைக்கு படுகிறது
வாழ்த்துகள் சகோதரி!
நல்ல சிந்தனை! தொடர்க! சமூக அவலம் நீங்கட்டும்!
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
சகோ தங்கள் வருகைக்கு நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.
Deleteஉங்கள் கருத்தே என் கருத்தும், கதையில் திடம் இல்லை , தொழில் ரீதியாக தன்னை முடக்கி விட்டானே என்ற ஆதங்கத்தில் கதா நாயகனை அழிக்க நினைக்கும் அந்த ஒரே ஒரு வில்லனின் செயல் மட்டுமே கொஞ்சம் ஏற்புடையதாக இருக்கின்றது மற்றபடி மற்ற வில்லன்கள், வில்லியினுடைய பழி வாங்கலுக்கான காரணங்கள் சில்லரைத்தனமாகவே இருந்தன.
ReplyDeleteபகிர்வு பாராட்டத்தக்கது.
கோ
வாருங்கள் அரசனே,
ReplyDeleteவணக்கம், நலமா?
அது எப்படி ஒத்துப்போறீங்களா? தங்கள் தாத்தா அப்படி எதுவும் சொன்னாரா,
சரி பரவாயில்லை,
அரசனின் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டிற்கும் அ
நன்றிகள் பல.