Thursday, 28 July 2016

உமாமகேசுவரமும் இராமநாதமும்


உமாமகேசுவரமும் இராமநாதமும்


  நாம் படித்த பள்ளியை, நாம் எப்போதாவது நினைத்துப் பார்க்கிறோமா? அவ்வாறு நினைப்பின் என்ன செய்தோம். கிடைக்கும் பதில் நம்மில் எத்துனைப்பேருக்கு நல்ல பதிலாக கிடைக்கும்.

      ஆனால், இவர் தான் படித்த பள்ளியில் இன்று ஆசிரியர்,,, தான் படித்த, பள்ளியினை நிறுவிய தகைச்சான்ற பெருமகனார் நினைவினைப் போற்றும் வகையில் தன் செஞ்சோற்றுக் கடனை ஆற்றியுள்ளார். ஆம், வலைவுறவுகளே நாம் அனைவரும் அறிந்தவர் தான்கரந்தை ஜெயக்குமார் எனும் வலைப்பூவில் நல்கட்டுரைப் பல எழுதிவரும்

கரந்தை ஜெயக்குமார்


அவர்கள் தான்.

      கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சியில் இவரின் உழைப்பு என்பது எழுத்துக்களில் விவரிக்க முடியா ஒன்று,,, உமாமகேசுவரனார் அவர்களின் அரும் தொண்டினைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு தபால்தலை வெளியிட்டது. அதற்கான மாபெரும் பணியினை நிர்வாகத்துடன் இணைந்து  சிரம் மேற்கொண்டார். சங்கத்திற்காக இன்னும் பல பணிகளை செய்துள்ளார். ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரி இவைகளின் தோற்றம் இவரின் உழைப்பினைப் பறைசாற்றும்.


      உமாமகேசுவரனார் துவக்கிய கல்வி நிறுவனங்கள்   இற்றை நாள் சங்கச் செயலாளர் செம்மொழிவேளீர் கரந்தை ச. இரதமநாதன் அவர்களால் ஆல் போல் தழைத்துள்ளது. சங்க வரலாறு என்பது இவரின் வரலாறு தான்.


     இராமநாதம் எனும் நூல் உணர்த்தும் செய்திகள் இவை.  உமாமகேசுவரா மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் கரந்தை சரவணன், ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் ஆகிய இருவரும் இணைந்து எழுதி வெளியிட்டுள்ளனர்.

         


                            இராமநாதம்

  அன்பரின் பணியைப் பாராட்டி கரந்தைத் தமிழ்ச் சங்க கல்வி நிறுவனங்களின் பவளவிழா, நூற்றாண்டு விழா நடைபெற்ற சமயத்தில் சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன் பெயரில் விருது வழங்கி சிறப்பித்தனர்.

                          இராதாகிருட்டினன் விருது

  புகழெனின் உயிரும் கொடுக்குவர்,பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர், அயர்விலர்
அன்னமாட்சி அனையர் ஆகித்
தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர்
எனும் புறநானூற்று வரிகள் வந்துப் போகின்ற மனதில்,,,,,,



வாழத்துக்கள் சார்,

காவேரியே நின் நனிநடையால் தஞ்சைக்கு பெருமையா??
எம் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தால் வந்த பெருமையே

30 comments:

  1. வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்

      Delete
  2. நூல் மதிப்புரையையும், விழா பற்றிய பகிர்வையும் கண்டேன். அமைதியாக சாதனை படைத்துவரும் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும், கரந்தை சரவணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களின் சாதனையைப் பற்றிய உங்களுடைய பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா

      Delete
  3. காவிரி மைந்தர்களுக்கு வாழ்த்துகள் :)

    ReplyDelete
    Replies
    1. வைகை மைந்தரின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்

      Delete
  4. பேராசிரியரே,

    நூல் ஆசிரியர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    தகவல் சொன்ன உங்களுக்கு நன்றிகள்.

    கோ

    ReplyDelete
    Replies
    1. அரசரின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்

      Delete
  5. நண்பர் திரு. கரந்தையார் அவர்களுக்கு வாழ்த்துகள் பகிர்வுக்கு தங்களுக்கு நன்றி
    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. ஓட்டு சேர்க்கப்பட்டுள்ளது என்று வருகின்றது.

      Delete
    2. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் சகோ, தெரியவில்லை சகோ,, தமிழ்மணம் புரியா புதிர்,,,. நன்றி

      Delete
  6. தங்களின் அன்பில் நெகிழ்ந்து போய்விட்டேன் சகோதரியாரே
    நாங்கள் ஒன்றும் பெரிதாய் செய்துவிடவில்லை
    இருந்தும் எமைப் பாராட்டும் தங்களின் அன்புள்ளத்திற்கு
    மனமார்ந்த நன்றிகள் பல சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. உண்மை சகோ, நான் எழுதியவை மிகக் குறைவே,,

      வருகைக்கு நன்றிகள் சகோ

      Delete
  7. நூல் ஆசிரியர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் மா

      Delete
  8. அருமையான நூலறிமுகம்
    நூலாசிரியர்களுக்கு எனது பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் சகோ

      Delete
  9. அன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும், கரந்தை சரவணன் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்,
      தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல

      Delete
  10. நூல் அறிமுகமும் விமர்சனமும் அருமை. நூலை உருவாக்கிய நண்பர்களுக்கும் பகிர்ந்த தங்களுக்கும் நன்றி சகோ!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் சகோ

      Delete
  11. Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் சகோ

      Delete
  12. Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா

      Delete
  13. நூல் அறிமுகத்துக்கும் தகவலுக்கு நன்றியும் வாழ்த்துகளும்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா

      Delete
  14. வளர்க அவர்தம் தொண்டு.
    வாழ்க தமிழ்ச்சங்கம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி சகோ

      Delete
  15. வணக்கம் பேராசிரியரே !

    நல்லாரைக் காண்பதுவும் நன்றே என்னும் ஒளவையின் பாட்டுக்கு உரித்துடையவர்களை வாழ்த்தி வரைந்த இப்பதிவில் நெகிழ்ந்து நிற்கிறேன் உண்மையில் கரந்தை மண் காலத்தால் வென்றவர்களைப் பிரசவிக்கிறது ! கரந்தை ஜெயக்குமார் ஆசிரியர் மட்டும் அல்ல நல்ல சிந்தனையாளர் எழுத்தாளர் அவரை வாழ்த்தி மகிழ்வதில் பேருவகை அடைகிறேன் வாழ்க நலத்துடன் !

    தம +1

    ReplyDelete