Friday 22 July 2016

கனவு நனவானது


                                               கனவு நனவானது

 வணக்கம் வலை உறவுகளே,,, நலம் தானே அனைவரும்,,, வலைக்குள் வரமுடியா சூழல்,,,,

இனி எப்போதும் போல்,,,

 தஞ்சை நகர்க்கு விஞ்சு புகழ் சேர்த்த தலையாய மூன்றனுள்,  தண்டமிழ் மன்னன் தமிழவேள் நிறுவிய கல்வி கோயிலாக அமைத்து கன்னித்தமிழுலகம் போற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கம்

      தன்னால் உருவாக்கப்பட்ட இக்கல்லூரியில் யாரேனும் ஒருவர் படித்து தேர்வு எழுதி பட்டம் பெற்று வெளியில் செல்லக் கேட்பேனாகில் அந்நாளே எனக்கு பெருமைமிகு நன்நாள் என உள்ளம் உருகிய பெருந்தலைவர் தமிழவேள் உமாமகேசுவரனார். அவர்களின் பெயர் தாங்கி, இற்றைநாளில் ஏராளமான, பட்டம் பெற்ற நல்மாணாக்கர்களை உருவாக்கிய, 

         யான் பனியாற்றும் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியின் 75 ஆம் ஆண்டு விழா

அதே நாள் உமாமகேசுவரா மேல்நிலைப்பள்ளியின்  75 ஆம் ஆண்டு விழாவும்,,,

கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் மற்றொரு கல்வி நிறுவனமாம் இராதாகிருட்டினத் தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழாவும்,,,

  
                  
                   
                   
                 
                   


                   
                    இக்கல்வி நிறுவனம் பல்கலைக்கழகமாக தழைத்தோங்க வாழ்த்துங்கள்.

                                                     பூக்கள் போட்டோ க்கான பட முடிவு 

15 comments:

  1. வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா,,

      Delete
  2. இன்னும் பல சிறப்புகள் பெறவும், விழா சிறப்புடன் நடைபெறவும் எமது மனமார்ந்த வாழ்த்துகள் சகோ.
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ, நலம் தானே, வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் சகோ.

      Delete
  3. விழா சிறப்புற
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா,,

      Delete
  4. பேராசிரியருக்கு,

    உங்களை போன்று ஞானத்தெளிவும் ஆழ்ந்த அறிவும் பெற்ற ஆசிரியர்களை கொண்ட உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியின் 75 ஆம் ஆண்டு விழாவிற்கு எமது நல் வாழ்த்துக்கள். தங்கள் சீரிய பணி சிறக்க வாழ்த்துக்கள். ஆமாம் நீங்கள் இங்கு தான் வேலை செய்கின்றீர்களா... சொல்லவே இல்லை.

    நண்பர் கரந்தை ஜெயகுமாருக்கும் எமது வாழ்த்துக்களை மறக்காமல் சொல்லி விடுங்கள். நீங்கள் மறக்கமாட்டீர்கள் என எனக்கு தெரியும்.

    கோ.

    ReplyDelete
    Replies
    1. வருக அரசே, நலம் தானே,

      ஆம் யான் பணியாற்றும் கல்லூரி தான்,,, சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை,,,நிச்சயம் சொல்லிவிடுகிறேன். மறக்கமாட்டேன். தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் அரசே

      Delete
  5. கரந்தை புகழ் கல்வி நிறுவனம்
    பல்கலைக்கழகமாகத் தழைத்தோங்குவதோடு
    சிறந்த அறிஞர்களை உருவாக்குவதோடு
    தமிழரின் முதலீடு கல்வி என்பதை
    உலகிற்கு உணர்த்துவதோடு
    மேலும் சிறந்து விளங்க
    உலகத் தமிழருடன் இணைந்து
    நானும் (யாழ்பாவாணனும்) வாழ்த்துகின்றேன்!

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  7. மேன்மேலும் நன்மாணாக்கர்களை வழங்கி
    ஆல் போல் தழைக்கட்டும்!...

    கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் கல்வி நிலையங்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லாமல் வேறென்ன வேலை!...

    அது சரி..

    கல்விப் பணிகளுக்காக நீங்கள் வெளிநாட்டிற்குச் சென்று விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன்..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  8. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete