இயல்புப் புணர்ச்சி என்றால், இரு சொற்களும் எந்தவிதத்திலும் மாறாது. காந்தத்தை அருகருகே
வைத்தால் பச்சக் என்று ஒட்டிக்கொள்வதுபோல் ஒட்டிக்கொண்டு, அதேபோல் நிற்கும் என்று சென்ற பதிவில் பார்த்தோம்.
நிலைமொழி வருமொழியுடன் புணரும்பொழுது, அவ்விரு சொற்களில் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ ஏதேனும்
எழுத்து மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும். விகாரப் புணர்ச்சியை நன்னூலார் தோன்றல் விகாரம்,
திரிதல் விகாரம், கெடுதல் விகாரம் என மூன்று வகைப்படுத்திக் காட்டுகிறார்.
இம்மூவகை விகாரங்களும் நிலைமொழியாகவும், வருமொழியாகவும் வரும் சொற்களின் முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் நிகழும் என்று அவர் கூறுகிறார்.
தோன்றல்,திரிதல்,கெடுதல்,விகாரம்
மூன்றும் மொழிமூ
இடத்தும் இயலும்
என்பது நன்னூல் நூற்பா
(154)
மொழி
= சொல்
மூ இடத்தும் = சொல்லின் முதல், இடை,
கடை
ஆகிய மூன்று இடங்களிலும்.
அதாவது,
பூ + மாலை = பூமாலை. இந்தப் புதிய சொல்லில் ‘பூ’வும்
உள்ளது, ‘மாலை’யும் உள்ளது, இரண்டும் இயல்பாகச் சேர்ந்துள்ளன. ஆகவே, அது இயல்பு புணர்ச்சி.
இப்போது, ‘பூ’வை அப்படியே
வைத்துக்கொள்வோம், ‘மாலை’க்குப் பதில், அதே பொருள் தரும் இன்னொரு சொல்லாகிய ‘சரம்’ என்பதைப்
பயன்படுத்துவோம். பூ + சரம் என்பது எப்படிப் புணரும்?
‘பூசரம்’ என்று புணர்ந்தால்
அது இயல்பு புணர்ச்சி. ஆனால் அவை ‘பூச்சரம்’
என்றுதான் புணரும்!
இங்கே நடுவில் ஓர் ‘ச்’ ஏன்
வந்தது, எப்படி வந்தது
என்றெல்லாம் பின்னர் விரிவாகப் படிக்கலாம், இப்போதைக்கு,
‘பூமாலை’ என்பதும் ‘பூச்சரம்’ என்பதும் ஒரேமாதிரி புணர்ச்சி
அல்ல என்பதைமட்டும் கவனித்தால் போதும்.
‘பூமாலை’
என்ற சொல்லில், ‘பூ’, ‘மாலை’
ஆகிய சொற்கள் இயல்பாக அமைந்திருப்பதுபோல,
‘பூச்சரம்’ என்ற சொல்லில் ‘பூ’, ‘சரம்’ ஆகியவை அமையவில்லை. ஏதோ விகாரம் நடந்திருக்கிறது.
இதைதான் நாம் மேலேப் பார்த்த நூற்பா விளக்குகிறது.
அதான் ‘விகாரப் புணர்ச்சி’
என்கிறோம். அதில் மொத்தம் மூன்று வகைகள்
உண்டு:
தோன்றல் - ஒரு புதிய எழுத்து தோன்றுதல்
திரிதல் - ஓர் எழுத்து இன்னோர் எழுத்தாக மாறுதல்
திரிதல் - ஓர் எழுத்து இன்னோர் எழுத்தாக மாறுதல்
கெடுதல் - ஏற்கெனவே
உள்ள ஓர் எழுத்து நீங்குதல்
உதாரணங்களுடன் பார்ப்போம்,
முதலில் தோன்றல் பார்ப்போம்,
பூ + சரம் = பூச்சரம்
இங்கே ‘பூ’,
‘சரம்’ ஆகியவற்றுடன், ‘ச்’ என்ற புதிய எழுத்து
தோன்றியிருக்கிறது. அதுதான் ‘தோன்றல்
விகாரம்’.
இன்னும் சில உதாரணங்கள்
பூ+கொடி = பூங்கொடி
ங்
என்ற எழுத்து தோன்றியது
யானை+கொம்பு = யானைக்கொம்பு
க்
என்ற எழுத்து தோன்றியது
அன்பு+தொல்லை= அன்புத்தொல்லை
த்
என்ற எழுத்து தோன்றியது
அடுத்து திரிதல் விகாரம்
இரு சொற்களில், ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து இன்னோர் எழுத்தாகத் திரிதல் (மாறுதல்) திரிதல் விகாரம் எனப்படும்.
பொன்+குடம்=பொற்குடம்
நிலைமொழி இறுதி ன் என்பது ற் எனத் திரிந்துள்ளது
நிலைமொழி இறுதி ன் என்பது ற் எனத் திரிந்துள்ளது
சில நேரங்களில் நிலைமொழியின் இறுதி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் வேறு எழுத்தாகத்
திரிதல் உண்டு.
பொன்+தாமரை=பொற்றாமரை
நிலைமொழி இறுதி ன் என்பதும், வருமொழி முதல் த் என்பதும் ற் எனத் திரிந்துள்ளன.
நிலைமொழி இறுதி ன் என்பதும், வருமொழி முதல் த் என்பதும் ற் எனத் திரிந்துள்ளன.
அடுத்த விகாரம் கெடுதல்
இரு சொற்களில் ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து மறைந்து போதல் கெடுதல் விகாரம் எனப்படும்.
கெடுதல்-மறைதல்
மரம்+நிழல்=மரநிழல்
நிலை மொழி இறுதி ம் என்பது கெட்டது.
நிலை மொழி இறுதி ம் என்பது கெட்டது.
மரம்+வேர்=மரவேர்
நிலை மொழி இறுதி ம் என்பது கெட்டது.
வந்தது, கெட்டது,போனது எல்லாம் சரி, ஆனா ஏன் எப்படி?
அதானே,
வரேன், காரணம் சொல்ல,
இதைப் பற்றிய தங்கள்,,,,,,,,,,,,,,,,,,,,,