இன்று இந்த எழுத்து என்பது என் மாணவர்களுக்காக ....
நான் பணியாற்றும் கல்லூரியில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கான ஊடகவியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தேற்றுதலுக்குரிய தோழமைகள் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி என்னையும் அந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக இணைத்துக் கொண்டு பணியை அவர்கள் செய்கிறார்கள்.பேராசிரிய தோழமைகள் ஜெயராஜுக்கும் தோழர் எழிலுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இந்த ஆண்டும் 15 நாட்கள் 30 ஆளுமைகள் ஊடக உலகின் தலைசிறந்த ஆளுமைகளைக் கொண்டு பயிற்சி அளித்து வருகின்றோம். எங்களின் பணியோடு,மாணவர்களுக்கான தனித்திறமையும் அவர்களுக்கான எதிர்காலத்தை மிகச் சரியாக வடிவமைப்பதலிலும் மனநிறைவு கொள்கின்றோம். இது போன்ற பயிற்சிகளில் நாங்களும் புத்துணர்வு ஆகின்றோம்.