ஊடகவியலாளர் பயிற்சிப் பட்டறை 2026
கல்வி என்பது ஏதோ தனி நபர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. ஒரு நாட்டின் குடிமக்களை நல்லவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் உருவாக்குவது கல்வியின் வேலை என்கிறார் *அரிஸ்டாட்டில்* .
கல்வி நிலையங்களின் எண்ணிக்கையும் கற்போரின் எண்ணிக்கையும் பெருகி இருப்பது உண்மை, எனினும் வெளிவரும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இத்தகைய கல்வி அவர்களுக்கு என்ன மாதிரியான தன்னம்பிக்கையை கொடுக்கும்?
கரந்தைத் தமிழ்ச்சங்கம் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரி, தமிழ்த் துறையின் தமிழ் உயர் ஆய்வு மையம் தனது மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஊடகத்துறையில் அவர்கள் பங்கெடுக்க, பாடத்திட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றது.15 நாட்கள் தொடரும் இப் பயிற்சியானது மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இன்று (11/09/2026) ஐந்தாம் நாள் பயிற்சி...
No comments:
Post a Comment