நிலம்தொட்டுப் புகார்
நிலம்தொட்டுப் புகார் வானம் ஏறார்
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம் காதலோரே.
வெள்ளிவீதியார்
வெள்ளிவீதியார்
சாதாரணமாக, நாம் பேசிக்கொள்ளும் பேச்சு வழக்கிலே இப்பாடலின் மொழிநடையும் அமைந்துள்ளது.
அவர் எங்கே போகப் போகிறார்? நிலத்திற்குள்
புகப் போவதில்லை, வானத்திற்கு மேலேயும் ஏறவும் முடியாது, கடலுக்குள்
சென்றிருக்கவும் மாட்டார், நாடு நாடாக, ஊர் ஊராக, குடியிருப்பு
குடியிருப்பாகத் தேடினால் நம்மிடம் அகப்படாது போய்விடுவாரோ நம் காதலர்!
என்கின்றாள் தோழி.
படம் இணையத்திலிருந்து
அருமையான பதிவு அக்கா...
ReplyDeleteஅடடே வாங்க சகோ நலமா ?
ReplyDeleteநீண்ட இடைவெளிக்குப் பிறகு புலவர் இயற்றிய பாடலோடு வருகை தந்தமைக்கு நன்றி. வாழ்க நலம்.
நீண்ட இடைவெளிக்குப் பின் என்று நினைக்கிறேன் நீரில் பண்டை எத்தனை அமுக்கினாலும் கை எடுத்தவுடன் மிதக்குமாம் பந்து நீரின் அழுத்தத்தையும் மீறி வெளியே வந்து விட்டீர்கள் வாழ்த்துகள்
ReplyDeleteஅடேங்கப்பா...
ReplyDeleteஎவ்வளவு நாள் கழித்து ....
மீண்டும் தங்கள் பதிவினைக் கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது..
தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்க நலம்...
வணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? எவ்வளவு நாட்களாகி விட்டன தங்களை சந்தித்து.. எப்படியிருக்கிறீர்கள்?
நல்லதொரு பாடலும், அதன் தெளிவான பொருளுடனும், தோழியின் தேற்றுதலும், தலைவிக்கு ஆறுதல் கூறி அமைதி படுத்துவதுமாய் பதிவு மிகவும் ரசனையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நலம்தானே? சுவை மிகு பாடல் பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteநலமா அம்மா...?
ReplyDeleteஇதற்கு தான் தோழிகள் இருக்க வேண்டும் என்பது...! ஆனால், தோழியர் இல்லாத ஊரில் குடியிருப்பது மிகத் துன்பமானது, அதைவிட காதலரைப் பிரிந்து தனித்திருப்பது மிகவும் துன்பமானது - இப்படி நம்ம தாத்தா சொல்கிறார்...
இன்னா தினனில்லூர் வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு (1158)
அட! டிடி அவர் சொல்லாததே இல்லையே!! தோழிகள் இல்லாத ஊரில் குடியிருப்பது மிகத் துன்பமானது// அதானே...தூது போறதுக்கு யாரு இருப்பாங்க இல்லை கவலையை ஷேர் செய்வதற்கு யார் இருப்பாங்க?! செமையா சொல்லிருக்கார் பாருங்க பெண்ணின் ஆங்கிளிலும்...
Deleteகீதா
நலம்தானே? பல மாதங்கள் ஆகிவிட்டதே. பார்த்து. அருமையான பாடல் பகிர்வு.
ReplyDeleteதுளசிதரன், கீதா
அருமையான பொருள் விளக்கம்
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை
ReplyDelete