Friday 28 August 2015

என் சுவாச மானவனே
                       கற்பக விருச்சமே காளையே கண்ணே

                       கற்கண் டேகவி வானே- யென்னுயிர்

                       முத்தமி ழேமுக் கனியே முல்லையே

                       முத்தார மேமுத்த மிட்டேன்,

 


என்னைச் சுவாசிக் கவைத்த கண்ணே

என்சுவா சமான வனே - வான்

முகில் பார்க்கும் ஏந்திழை இவள்

 மகிழ்ந்து முத்தமிட் டேன்னடா,

 

                    நீஅழு வதுகூட அழகுதான் கண்ணே

                    நீயோ முழுமதி யாய்யென்- முகம்

                    பார்க்க பரவச மாகிறேன் பார்த்துன்

                    பாதத்தில் முத்தமிட் டேனடா,


  பூலகில் வாழமுடி வெடுக்க வைத்த

 பூவே உன்மழ லையில் - மற்றதை

மறந்தேன டாமயக் கம்தந்த மகனே

மறவனே முத்தமிட் டேனடாவிழுகிறாய் எழுகிறாய் சிரிக்கிறாய் கண்ணே

விழுவதும் எழுவதும் விதியின் - செயலா?

உன்னிட மிருந்து தான் இதை

உணர்ந்துக் கொண்டே னடா- கண்ணே   
கல்விக் கற்று கவிபலப் புனைந்து

               கலைகள் யாவும் உன்கை வரப்பெற்று

    பார்போற்றும் வாழ்க்கை நீ வாழ 

வாழ்த்துக்கிறேனடா,,,,,,,,,,

 அன்புள்ளங்களே கடந்த 27.08.2015  இவரின் 7 வது பிறந்தநாள்.
உங்கள் வாழ்த்துக்களோடும் வளரட்டும்,,,,,,,,,,,
                                                                                                        

                                          
                                               Image result for ரோசா பூக்கள்
                                                                   

                                                                    நன்றி    43 comments:

 1. //நீ அழுவதுகூட அழகுதான் கண்ணே//

  அருமை அருமை ரசிப்பின் உச்சகட்டம் தங்களது மகன் அனைத்து நலனும் பெற்று வளமுடன் வாழ இறைவன் அருள் புரிவானாக....
  தமிழ் மணம் இணைப்புடன் ஒன்று.

  ReplyDelete
 2. ஆஹா வாருங்கள் சகோ,
  இப்ப தான் தங்கள் தளத்தில் குட்டி பர்ஹானாவுக்கு வாழ்த்துச் சொல்லிவந்தேன். அதற்குள் தாங்கள் இங்கே.
  மிக்க மகிழ்ச்சி சகோ,
  நன்றி.

  ReplyDelete
 3. அழகான படங்களுடன் பிறந்த நாள் பகிர்வை எங்களுடன் பகிர்ந்திருக்கிங்க தோழி.
  என்றும் மகிழ்வோடு எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்தும் எங்கள் வாழ்த்தையும் தெரிவியுங்கள்.

  ReplyDelete
 4. வாருங்கள் தோழி,
  மிக்க மழ்ச்சி, அவசியம் தங்கள் ஆசிகளுடன் கூடிய வாழ்த்துக்களை அவன் மாலை வாசிப்பான் தானே,,,,,,,
  நன்றிங்க தோழி,

  ReplyDelete
 5. அழகான கவிதைகள், அதற்கேற்ற புகைப்படங்கள். மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அய்யா,
   தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல.

   Delete
 6. வணக்கம் தோழி!

  கீர்த்தியெலாம் பெற்றுக் கிருத்திக் உயர்ந்திடவே
  சேர்த்தகவி வாழ்த்துச் சிறப்பு!

  அருமையான கவிவாழ்த்துத் தந்து மகனை வாழ்த்திய உங்களுடன்
  என் இனிய வாழ்த்தும் செல்வனுக்கு!

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள், வணக்கம்.
   நலமா? தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிங்க தோழி,

   Delete
 7. பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு சிறப்புடன் வாழ அன்பின் இனிய நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வணக்கம்,
   நலமா?
   தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

   Delete
 8. கல்விக் கற்று கவிபலப் புனைந்து

  கலைகள் யாவும் உன்கை வரப்பெற்று

  பார்போற்றும் வாழ்க்கை நீ வாழ

  வாழ்த்துக்கிறேன்..செல்வரே.......மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .!!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வலிப்போக்கரே,
   தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல.

   Delete
 9. உள்ளம் முழுதும் அன்பின் வெள்ளம்
  பொங்கி பெருகும் மகிழ்வின் மடையாய்
  சிறந்தே வாழ்க! வளமுடன் வாழ்க!

  இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்

  வாழ்த்துகளுடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு நன்றிகள் புதுவையாரே

   Delete
 10. பாசமிகு அன்னையின் அழகான வார்த்தைகள்! வாழ்த்துகள்! தங்கள் மகனுக்கு! வாழ்வில் எல்லா வளமும் பெற்றிட...

  ReplyDelete
 11. அழகுக் கவிதை
  அழகான படங்கள்
  தங்களின் அன்பு மகனுக்கு
  அன்பார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
 12. so cute ம்மா குட்டிங்க என் கண்ணே பட்டிடப் போகுதும்மா சுத்திப் போடுங்க ok வா ஹா ஹா ......
  அழகிய பாவெடுத்து உணர்வுகளைக் கொட்டியுள்ளீர்கள் பாராட்டுக்கள் ...!

  பலகலையும் கற்றுக் கண்ணியம் கட்டுப்பா டெல்லாம் கைவர
  செல்வச் செழிப்போடு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்மா ...! நன்றி !

  ReplyDelete
  Replies
  1. ஆஹா,,,,,,,,, கண்ணெல்லாம் படாதும்மா,,,,,,, அன்பானவர்களின்.
   அன்பான வாழ்த்துக்கள் அவனை என்றும் வளப்படுத்தும்மா, தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

   Delete
 13. இந்த அழகிய, இனிய குட்டிப்பையன் மென்மேலும் சீரும், சிறப்பும் அடைய வாழ்த்துக்கள்:) கவிதை இந்த சுட்டிப்பையனை போலவே அழகு:)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்,
   தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்துக்ககும் நன்றிமா

   Delete
 14. அன்பும் அறிவும் அழகும் நிறைந்த
  தங்கள் பிள்ளைக்கு
  என் குடும்பத்தார் சார்பில்
  பிறந்த நாள் வாழ்த்து!
  தங்கள் பிள்ளைகள்
  பெரும் அறிஞர்களாக வரவேண்டும்!
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அய்யா,
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல.

   Delete
 15. பாசப்பா அருமை.

  குழந்தைக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல ஸ்ரீராம்.

   Delete
 16. அன்பும் ஆசியும் அன்னையும் அழகுத்தமிழ்ப்பாவுமாய்ப் பின்னிப் பிணைந்து வாழ்வில் ஒளியேற்றட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பலம்மா

   Delete
 17. அழகான படங்களுடன் பிறந்த நாள் பதிவு அருமை. தங்கள் மகனுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல

   Delete
 18. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ஏற்கனவே போட்ட கமெண்ட் கூகுள் சாப்பிட்டிருச்சு போல!

  ReplyDelete
 19. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி தளீர். அப்படியும் இருக்குமோ,

  ReplyDelete
 20. வணக்கம் சகோதரி.

  நீண்ட நாள் இடைவெளியில் வலைப்பக்கம் வந்ததில், தங்கள் பதிவை பார்த்து மனம் மகிழ்ந்தேன். அழகான அருமையான மனம் நிறைந்த பாடல் சகோதரி! பாடலைப்போல அழகான தங்கள் குழந்தை வாழ்வில் எல்லா செல்வங்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன். என்னுடைய மனம் கனிந்த வாழ்த்துக்களை குழந்தைகளிடம் தெரிவியுங்கள். நன்றி.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்,
   மகிழ்ச்சி, தங்கள் அன்பின் வாழ்த்துககும் வருகைக்கும் நன்றிகள் பல.

   Delete
 21. வணக்கம் பேராசிரியரே !

  அடடா உரிய நேரத்தில் வாழ்த்துச் சொல்ல தவறிட்டேனே !

  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குட்டித் தம்பி என்றும் இனிமையான தருணங்கள் உனைச் சூழ கல்வி செல்வம்
  நிறையப் பெற்று நீடூழி வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !

  ReplyDelete
 22. வாருங்கள் சீர் ஆளும் கவிஞரே,
  வணக்கம், நலம்தானே, தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பேராசிரியரே மிக்க நலமாக உள்ளேன் இப்போதான் வேலை நேரம் கொஞ்சம் குறைந்து இருக்கிறது அதுதான் வலைப்பக்கம் அன்பின் தேடலுக்கு நன்றி ( சீர் ஆளும் .????? ம்ம்கும் )

   Delete
  2. தங்களின் மீள் வருகைக்கு நன்றிகள் பாவலரே

   Delete
 23. தாமதமாய் எனினும் மனம் நிறை வாழ்த்துகள் !

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாழ்த்துக்கள் எப்பவும் மனம் நிறைக்கும் ஐயா அவனுக்கு,,
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா

   Delete