Thursday 13 August 2015

தீம் புளிப் பாகர்
                       தீம் புளிப் பாகர்
          Image result for மோர் குழம்பு படம்


    எனக்கு மோர் குழம்பு மிகவும் பிடிக்கும். ஆனால் பாருங்கள் செய்யத்தான் தெரியாது. சக தோழிகளிடம் கேட்டேன், அவர்கள் சொன்னது ஒன்றும் புரியல, உடன் என் நினைவுக்கு வந்தது, நம்ம சாராதாம்மா தளம். சரி அதில் சொல்லி இருப்பார்கள் என்று நினைத்து, அவர்கள் தளத்தில் பார்த்துச் செய்யலாம் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். அங்கிருந்து நகர தொடங்கிய நிலையில், என் உடன் இருப்பவர்கள் ஏன் உன் சங்கத் தமிழில் இது பற்றி ஒன்றும் சொல்ல வில்லையா? என்று கிண்டல் செய்தார்கள்,,,,,,, 


ஆம் ,,,,,,,,,,,,,,

அவர்களுக்கும் உங்களுக்குமாய் இதோ,,,,,,,,,,

நம்ப இலக்கியம் காட்டும் மோர்குழம்பு தான் இன்றைய பதிவு,,,,,,,,, 

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்த அட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.
                                     கூடலூர் கிழார்.

இது நம் தமிழ் இலக்கியம் காட்டும் குறுந்தொகைப் பாடல். 

தலைவியின் கை வண்ணத்தில்,,,,

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,,,,,,,,,,,,

முற்றிய தயிருடன் சில பொருட்கள் சேர்த்து பிசைந்து,பிசைந்த கையைத் தன் சேலையிலே துடைத்துக் கொள்கிறாள். விறகு அடுப்பினை சரியாக எரிய விட அதனை ஊதும் போது ஏற்படும் புகையினால், கண்கள் எரிந்து கலங்குகிறது, அதனால் கண்களில் தீட்டிய மை கலைந்து, இப்படி ஒரு கோலத்தில் அவள் செய்து முடித்த மோர்குழம்பினைக் கனவனுக்கு பரிமாறுகிறாள். கனவனும் நன்றாக உள்ளது என்று உண்ணும் அழகிய காட்சியினைப் இப்பாடல் விளக்குகிறது.

திருமணம் ஆன புதிய தம்பதியர்கள், இவர்களின் தனிக்குடித்தன அழகைக் கான செல்லும் செவிலித்தாய், தான் கண்டு வந்த நிகழ்வுகளைத் தன் சுற்றத்திடம் சொல்லும் பாடல்.

மோர் குழம்பு வைக்க முதலில் வேண்டிய அளவு அரிசி துவரம்பருப்பு இரண்டையும் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். இதனுடன் பச்சைமிளகாய், சீரகம், தேங்காயையும் சேர்த்து அம்மியில் இல்ல இல்ல இப்ப மிக்ஸியில் அரைத்து, ஏற்கனவே வைத்துள்ள கெட்டி மோருடன் கலக்க வேண்டும்.

இதை அடுப்பில் வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலையுடன் தாளித்து கொட்ட வேண்டும். குழம்பு நுரைத்துவரும் போது அடுப்பை அணைக்க வேண்டும்.

சாராதாம்மா செயல்முறை விளக்கம் சரியா?

சரிங்க நம்ம இலக்கியத்திற்கு வருவோம்,,,,,,,

முளி தயிர் முற்றிய தயிர் (நன்கு கெட்டியான,நன்கு காச்சப்பட்ட,,,,,,,சுன்ட காச்சப்பட்ட,,, 

பிசைந்த கலக்கிய, துழாவுதல்,,,,,, 

காந்தள் பூ 
  
மெல் விரல் மெல்லிய மென்மையான விரல்கள் 

கழுவுறு - கலந்த, கலக்கிய

 

கலிங்கம்   - ஆடை,,, பட்டாடை

கழாஅது  கழுவாமல் (கழா அல்)

குவளை உண்கண் கண்களின் விளிம்பு, குவளை மலர் போன்ற,,,,,,,,,,,

குய்ப் புகை தாளிப்பு புகை,(குய்-தாளிப்பு புகை) இங்கு தாளிப்பதால் எழும் புகை, விறகு அடுப்பில் இருந்து வரும் புகை,,,,,,,,

கழுமத் சோர்வு, மயக்கம் (கழுமல்-மயக்கம்)

தான் துழந்த அட்ட தான் ஆக்கிய

தீம்  - இனிமையான, அமுது போன்ற,,

புளிப் புளிப்பு

பாகர்  - சமையல்

இனிது எனக் கணவன் உண்டலின் நன்றாக இருக்கிறது என கணவன் உண்ண

நுண்ணிதின் - நாவால் சுவையுணர்ந்து

மகிழ்ந்தன்று மகிழ்ந்து

ஒண்ணுதல் ஒளியுடைய நெற்றி

முகனே முன்புறம் ( ஒளியுடைய நெற்றியின் முன் புறம்)

தலைவியின் ஒளி பொருந்திய நெற்றியும், முகமும் மிகவும் நுண்மையாக தன் மகிழ்வைக் காட்டியது.

 கூடலூர் கிழார் பாடல் இது தாங்க.

எனக்கு, தலைவி மோர்க்குழம்பு தான் செய்தாளா? என்று ஒரு சந்தேகம்,,,,,,,,,,,,,

உங்கள் கருத்துக்கள் வேண்டி,,,,,,,,,,,

                                                                 
                                Image result for தலைவாழை இலை சாப்பாடு

படம் நன்றி கூகுள்62 comments:

 1. இங்கே - குவைத்தில் (1.00Pm) நல்ல மத்தியான வேளை.. சாப்பாடு நேரம்!..


  புதுமணத் தம்பதிகள் - அவர்கள்..
  அவள் - மோர்க்குழம்பு தான் செய்தனள்..
  அவனும் அகமகிழ்ந்து உண்டனன்!..

  இடையில் - நாம் புகுந்து குழப்ப வேண்டாம்!..

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வணக்கம்,
   மகிழ்ச்சி தங்களின் உடன் வருகைக்கு.
   அப்படியா, உண்டாயிற்றா???
   சாப்பாடு நல்லா இருக்கா??, நான் குழப்ப வில்லை, எனக்கு சின்ன சந்தேகம்,,,
   அவ்வளவே
   நன்றி.

   Delete
 2. எங்கள் வீட்டில் தலைவி அவ்வப்போது மோர்க்குழம்பு செய்வதுண்டு. ரசித்து, ருசித்து சாப்பிடுவோம்.

  ReplyDelete
 3. வாருங்கள் அய்யா,
  வணக்கம்,
  மகிழ்ச்சி
  தங்கள் வருகைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 4. எங்கள் பாஸ் மோர்க்குழம்பு ஸ்பெஷலிஸ்டாக்கும்.

  தமிழில் பிசைந்த மோர்க்குழம்பு சுவையாயிருந்தது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம்,
   தங்கள் பாஸ் அளவுக்கு சுவையில்லையோ,,
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 5. வணக்கம் சகோ மேர்குழம்பு எனக்கு மிகவும் பிடித்தது

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ,
   மோர்குழம்பு பிடித்ததற்கு படித்ததற்கு நன்றி.

   Delete
 6. மோர்க் குழம்பா...நான் சாப்பிட்டதே இல்லீங்க.......சாப்பாட்டில் கூட வசதி வாய்ப்புகள் இருக்க வேண்டும். எமக்கு கஞ்சி தண்ணி கிடைக்கலைண்ணா...பரவாயில்லை ..குழாய் தண்ணியும் கிடைப்பதில்லை....

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வலிப்போக்கரே,
   இங்கேயுமா? அரசியல்,,,,,,,
   வருகைக்கு நன்றிகள்,

   Delete
 7. இந்த பாடலை ப்ளஸ்டூவில் எங்க தமிழய்யா சொல்லிக் கொடுத்த விதமே அருமையாக இருக்கும். உங்களின் விளக்கமும் ரசித்தேன்! விரைவில் என் தித்திக்கும் தமிழில் பகிர்கிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தளீர்,
   அப்போ நான் சொன்னது அருமையாக இல்லை,,,,
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

   Delete
 8. உங்களுடைய இந்த பதிவில் என்னுடைய தளமும் உங்கள் நினைவுக்கு வந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி மகேஸ்வரி. மோர் குழம்பும் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றிம்மா,
   நான் சொன்ன செயல்முறை சரியாம்மா,,,,

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. நான் கொஞ்சம் வேறு முறையில் செய்வேன். என்னுடைய லிங்கை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். http://saratharecipe.blogspot.in/2013/04/blog-post_26.html

   Delete
  4. நானும் நேற்று உங்க பதிவு பார்த்துத் தான் தக்காளி சட்னி செய்தேனே. நீங்க போட்டதும் ஒரு முறை செய்தேன் அப்புறம் மறந்து விட்டேன். உடனும் உங்கள் பதிவில் பார்த்து செய்தேன். ரொம்ப நன்றிம்மா!

   Delete
  5. தக்காளி சட்னி என்னுடைய பதிவை பார்த்து செய்து கருத்து சொன்னதற்கு நன்றி சகோ. தொடர்ந்து எனது பதிவுக்கு ஆதரவு கொடுங்கள்.

   Delete
  6. வணக்கம், பார்க்கிறேன்ம்மா,,,,,,
   நன்றி தகவலுக்கு,,,,,

   ஆஹா வாங்க இனியா,,,,,,,,,,,, மகிழ்ச்சி.

   Delete
 9. மோர்க் குழம்பு வைக்க சங்கப் பாடல் எங்கிருந்துதான் தேடுகிறீர்களோ எனக்கு மோர்க்குழம்பு பிடிக்காது. என் மனைவிக்குப் பிடிக்கும் அரிசி துவரம் பருப்பு எல்லாம் சேர்த்து அரைப்பதில்லை. சில சமயங்களில் வெண்டைக்காய் போன்றகாய்களை சேர்த்துவேக வைப்பது உண்டு.

  ReplyDelete
  Replies
  1. வாங்கய்யா, வணக்கம்.
   மோர் குழம்பு தானே பிடிக்காது, பாடல்?????????
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.

   Delete
 10. படிக்கப் படிக்க நா இனிக்கிறது சகோதரியாரே
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ,
   இனிக்கிறதா??? புளிப்பல்லவா நான் சொன்னது,,,,,
   வருகைக்கு நன்றி சகோ.

   Delete
 11. வணக்கம்
  சமையல் குறிப்பும் அரும்பத விளக்கங்களும் நன்று...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றிகள் பல,
   பல பதிவுகள் பார்க்கலையோ,

   Delete
 12. ஆமா தீம்புளிப் பாகர் dish உங்களோடது தானே அல்லது அதுவும் google picture தானா? அட பேராசிரியர் சமையல் கலையிலும் விண்ணி என்று நினைத்து சந்தோஷப் பட்டால் இப்படி ஏமாற்றி விட்டீர்களே......அப்போ அது உங்க dish இல்லையா ........ஓ நோ......

  ஆனால் அதற்கெல்லாமா சங்ககாலப் பாடல்கள் உள்ளன. ஒன்றையும் விட்டு வைக்காமல் எழுதி வைத்துள்ளார்களே ... எத்தனை ஆச்சரியம் அதை அனாயசமாக எடுத்து வந்து தருவது இன்னும் ஆச்சரியம் தான் ..... தொடரட்டும் தங்கள் தணியாத வேட்கை இல்லை வேட்டை ஹா ஹா .... அருமைம்மா தாமதத்திற்கு மன்னிக்கணும் .....அது தான் வந்திட்டேனே

  ReplyDelete
  Replies
  1. வாங்க இனியாம்மா,,,,,
   இப்பவெல்லாம் தங்கள் வருகையை மனம் தேடுகிறது.
   தங்களுக்கு என் கையால் சமைத்து மணக்க மணக்க போட்டால் போச்சு, எப்ப வேண்டும்? அப்ப சொல்லுங்கள்,,,,,,
   நான் தங்களை ஏமாற்றுவேனா?
   தாமதம் எல்லாம் இல்லை, அது என் தேடுதல்,,,,,,,,,,,
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றிமா

   Delete
  2. தோழி இனியா அவர்களின் சிறப்பே அதுதான் தோழி மகி அவர்களே:)

   Delete
 13. இலக்கிய வாசமுடன் மோர் குழம்பும் அல்லவா சேர்ந்து மணக்கிறது இங்கே... சூப்பர்! சூப்பர்!

  ஒரு சந்தேகம் தோழி கணவர் என்று இருக்க வேண்டமோ?

  ReplyDelete
  Replies
  1. வேண்டுமோ என்று படிக்கவும்.

   Delete
  2. தங்கள் கவி பாகர் முன் இவ்விளக்கம் எம்மாத்திரம் தோழி,,,,,,,
   மாற்றுகிறேன், நன்றிமா,
   தட்டியதில் தவறு,,,,,,,,, சுட்டியமைக்கு நன்றிகள்.
   வருகைக்கு நன்றிகள்.

   Delete
 14. அட!!! two in one பதிவு!!! சமையலும் ஆச்சு, இலக்கியமும் தெரிஞ்சுகிட்டாச்சு!!! அருமையாக இருக்கிறது பதிவு! மேலும் உங்கள் ரசனை நீங்க மாற்றும் கூகுள் புகைப்படங்களிலும் தெரிகிறது:) அழகு!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வணக்கம்,
   அய்யோடா,,,, நல்லா இல்லையா?
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

   Delete
 15. வணக்கம் சகோதரி.

  அருமையான மோர்குழம்பு செய்முறையுடன், இலக்கியச் சுவையையும் சேர்த்து சுவைத்தோம். படித்ததை நினைவூட்டியமைக்கு மிகுந்த நன்றி. தங்கள் கைபாகத்தில் மோர்குழம்பு மிகவும் சுவைத்திருக்குமெனவும், நம்புகிறேன் பகிர்ந்நமைக்கு நன்றி.

  தங்களுக்கு என் இனிய சுதந்திர தின நல்வாழ்ததுக்கள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள்
   மோர்க்குழம்பை சுவைத்தமைக்கும் இல்ல படித்தமைக்கும் வாழ்த்துக்கள்.

   Delete
 16. தமிழ்ச் சுவையுடன் மோர்க்குழம்பு.... ருசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. ருசித்ததற்கு நன்றிகள்.

   Delete
 17. வகை வகையான மோர்க் குழம்பு வைப்பது எப்படி?
  என்பதை பலரும் அறிவர்.
  அறியவும் பதிவாய் தருவர்.
  ஆனால்,
  அறு சுவையோடு ஆர்ப்பரித்தெழும்
  ஏழாம் சுவையாம் "இலக்கிய சுவையை"
  சுவைபட தந்தமைக்கு தங்கத் தாம்பூலம் தந்து
  உம்மை பாராட்ட அல்லவா தோன்றுகிறது.
  இலக்கியச் சுவை ததும்பும் ஒன்ஸ் மோர் கேட்கத் தோன்றும் பதிவு.
  பாராட்டுக்கள்.
  நன்றி சகோதரி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள்
   தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள்.

   Delete
 18. குழலின்னிசையின்
  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

   Delete
 19. செவியிற்கும் வாய்க்குமே சேர்த்த சுவையோ?
  குவித்தேன் கரங்கள் குளிர்ந்து!

  அருமையான விருந்து! அகம் நிறைத்தீர்கள் சகோதரி!
  தாமதமான வருகைக்கு வருந்துகிறேன்!

  நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் கவிஞரே வணக்கம்,
   தாங்கள் எப்ப வந்தாலும் மகிழ்ச்சியே, வருத்தம் வேண்டாம்,
   வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிமா,,,,,,,,,,

   Delete
 20. இலக்கியத்தில் மோர்க்குழம்பு பற்றியும் இருக்கின்றதா? பாடலும் பதிவும் சுவையாய் இருக்கின்றன! பாராட்டுக்கள் மகி!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வணக்கம்,
   தாங்கள் பார்க்கும் பறவைகளும் உண்டே,,,,
   வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிமா

   Delete
 21. பார்வைக்கும் கருத்திற்கும் விருந்து ....அருமை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றிகள் பல

   Delete
 22. இலக்கியச்சுவைகலந்த மோர்குழம்பும், படமும்,கருத்தும் ரெம்ப நல்லாருக்கு பேஷ் பேஷ்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் பேஷா இருக்கா?????
   வருகைக்கு நன்றிமா

   Delete
 23. அட! சகோ விஜு தோசை சுட....நாங்கள் ஒரு ஆர்வத்தில் சாம்பார் வைக்க இங்கு வந்தால் இலக்கியத்தில்மோர்குழம்பு....ம்ம்ம்ம் நிறைய உணவுகள் கல்வெட்டுச் சமையலில் இருக்கின்றன....தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு (சமைப்பதற்கும்) நூலகம் செல்ல நினைத்து இன்னும் செல்ல முடியாத நிலை.....அருமை சகோதரி! இனி ஒவ்வொன்றாக வரும்...சகோ விஜு அவர்கள் சாம்பார் பற்றி ரசமாக எழுதுகின்றேன் என்று சொல்லி இருக்கின்றார்...காத்திருக்கின்றோம்....உங்களிடம் இருந்தும்.....சுவையாக இருக்கு மோர்குழம்பு..எங்களுக்கும் மிகவும் பிடிக்கும்

  ReplyDelete
  Replies
  1. வாங்க அய்யா,
   ஒரே சாப்பாட்டு களமாக இருக்கா????
   சாம்பார் பற்றி நானும் எழுதனும். அது வரலாறா? என்று தெரியாத வயதில் பேசியது,
   வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

   Delete
 24. இலக்கியச் சமையல் அற்புதம்!
  அந்த நாளில் விவேகானந்தா கல்லூரி விடுதியில் ஞாயிறன்று சாப்பிட்ட மோர்க்குழம்புக்கு ஈடு உண்டா?!

  ReplyDelete
  Replies
  1. வாங்க அய்யா,
   விடுதி மோர்க்குழம்பை நான் நினைவூட்டினேனா? அது அருமையாக இருந்ததா? விடுதி சாப்பாடு அருமை என்றால் ஆச்சிரியம் தான்,,,,,
   வருகைக்கு நன்றிகள் அய்யா

   Delete
 25. வாருங்கள் வருகைக்கு நன்றிகள், தொடர்வோம். நன்றி.

  ReplyDelete
 26. சகோதரி!
  எவ்வளவு நேரம்?
  இந்த பந்தியில்...
  மன்னிக்கவும் இந்த பதிவில்,
  தலைவாழை இலைபோட்டு பதார்த்தங்களை பரிமாறிவிட்டு போய்விட்டீர்களே!
  அடுத்த பதிவை எப்போது தர போகிறீர்கள்?
  நன்றி சகோதரி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 27. வணக்கம் புதுவையாரே,
  இயற்கையால் இணையத்தில் ஏற்பட்ட தடங்கல், தொடர்கிறேன்.
  தங்கள் அன்பிற்கு நன்றிகள் பல.

  ReplyDelete
 28. வணக்கம் தோழி !
  இன்று தான் தங்களின் தளத்தினைக் கண்டேன் மிக்க மகிழ்ச்சி! என்னுடைய தளத்தினிலும் இணைந்து கொள்ளுங்கள் தோழி என்றும் தமிழோடும் இணைந்திருப்போம் .

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வணக்கம்,
   தங்கள் தளம் நான் வந்துள்ளேனே, இணைகிறேன் இப்போ,
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல.

   Delete
 29. Replies
  1. வாழ்த்துக்கள் தங்களுக்கும்.

   Delete
 30. இப்போதான் முதல் முறையா உங்க வலை வந்து பார்க்கிறேன் ...ரொம்ப இயல்பா தமிழின் இனிமையை சொல்லி ,எல்லாருக்கும் புரியுற போல விளக்கி இருக்கீங்க .அருமை ..உங்கள் பயணம் தொடரட்டும் .....

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல. தொடருங்கள்...

   Delete