Tuesday 4 August 2015

அந்நியமான அரங்கேற்றுகாதை


                                     
                    அந்நியமான அரங்கேற்றுகாதை
                                                                                     


                                           



                                              சிலப்பதிகாரம் க்கான பட முடிவு

       ஒருவர் நம்மை அந்நியப்படுத்தும் போது,
  நாம் எவ்வளவு வேதனைப்படுவோம், அப்படித்தான்,,,,,,, என்ன, ஆரம்பமே இப்படியா என்று போய்விடாதீர்கள்,,

   தமிழ் முதுகலை வகுப்பிற்குப் பாடமாகச் சிலப்பதிகாரம் வைக்கப்பெறும் காலத்தில் அதன் அரங்கேற்றுகாதை மட்டும் வலைக்கோட்டுக்குள்,,,,,

 என்னங்க எதுவும் புரியலையா????

தமிழ் மொழியின் காப்பியங்கள் என்று ஐந்து என்பர். அவை

1, சிலப்பதிகாரம்      - இளங்கோவடிகள்
2, மணிமேகலை     - சீத்தலைச் சாத்தனார்
3, சீவகசிந்தாமணி   - திருத்தக்கதேவர்
4, வளையாபதி       - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
5, குண்டலகேசி      - நாதகுத்தனார்

இது நீங்கள் அனைவரும் அறிந்ததே, சரி அப்புறம் ஏன் இந்தப் பதிவு என்று தானே,,,,


   சிலப்பதிகாரம் மூன்று பெரும் பிரிவுகளாகவும் ( இதனைக் காண்டங்கள் என்பர்)
   முப்பது சிறு பிரிவுகளாகவும் ( இதனைக் காதைகள் என்பர் )
  பகுக்கப்பட்டுள்ளது.
இதில் 3 வது காதை அரங்கேற்றுகாதை தான் நான் சொல்ல வருவது, அது ஏன் அந்நியமானது என்று கேட்கிறீர்களா? பாடத்திட்டத்தில் சிலப்பதிகாரம் முழுமையும், (அரங்கேற்றுகாதை நீங்கலாக) என்று குறிக்கப்பட்டிருக்கும்.
     வெறும் 175 அடிகளே கொண்ட கடுகு அளவான அரங்கேற்று காதையை மட்டும் விலக்கி வைத்ததன் காரணம்,,,,,,,,ஏன்?

   கடுகு சிறுத்தாலும் காரம் மிகுதி, அந்தச் சின்னஞ்சிறு காதையைத் தெளிவுற நடத்தும், தமிழிசை, தமிழ்நாடகப் புலமை நிறைந்த பேராசிரியர்கள் அன்றைக்கு யாரும் இல்லை, என்பது பாடத்திட்டக் குழுவினரின் கணிப்பு என்று பேராசிரியர் ஒருவர் கூறினார். (என் முனைவர் பட்ட ஆய்விற்காய் நான் என் தேடுதலைத் தொடங்கிய போது.)

   அன்றைக்கு அரங்கேற்றுகாதையைப் பாடத்தில் சேர்த்துப், பேராசிரியர்கள் தங்கள் அளவில் கற்றுக் கொடுத்து, கருத்தரங்குகள் நடத்தியும், விவாதித்தும் வந்திருந்தால், அந்த மாணவர்வழி வந்த வாரிசுகள், கொஞ்சமாவது அதனை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருப்பார்கள். அப்படிச் செய்யத் தவறியதால் அரங்கேற்றுகாதை எனும் அரியச் சுரங்கம் நமக்கு அந்நியப்பட்டுப் போயிற்று.  
                                             அரங்கேறும்,,,,,,,,,,,,,,,,,,,


33 comments:

  1. சுவையான தொடக்கம்..

    இருப்பினும் தலைப்பினில் எழுத்துப் பிழை உள்ளது.. கவனித்துத் திருத்தவும்..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வணக்கம்,
      தாங்கள் சுட்டிய திருத்தம் செய்தேன், உடன் நன்றிக் கூற இயலவில்லை, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. அறியாச் சுரங்கமான.. அந்த “அரங்கேற்றுக்காதை” யை அரங்கேற்றுங்கள். முனைவர் அவர்களே!....

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வலிப்போக்கரே,
      இதில் ஏதேனும் உள் குத்து இல்லையே,
      வருகைக்கு நன்றிகள்.

      Delete
  3. தேவையான, அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று. அறியக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள்,
      ஆம் அய்யா,,,,, அறிந்துக்ள்ள வேண்டிய ஒன்று தான்,
      வருகைக்கு நன்றி.

      Delete
  4. Replies
    1. வருகைக்கு நன்றி டிடி சார்

      Delete
  5. தெரிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.

      Delete
  6. வணக்கம் சகோ நலமா பயனுள்ள பதிவு தொடர்கின்றேன்
    தமிழ் மணம் ஓட்டு இட முடியவில்லையே...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ,
      நலமா? ஊருக்கு சென்றுவிட்டீர்கள் போலும்,
      தமிழ்மணம் இன்னும் சரியாகல,
      வருகைக்கு நன்றி, தொடர்க நாளும்,

      Delete
  7. எனக்கு அவ்வளவாக இதுபோன்ற விஷயங்கள் பரிச்சயமில்லை. எனவே அறிந்துகொள்ள உங்கள் பதிவுகளுக்காய்க் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா,,,,,,,
      வருகைக்கு நன்றி.

      Delete
  8. அரங்கேற்று காதை பற்றிய அறியாத தகவல்களை அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். தொடருங்கள். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள்,
      தங்கள் ஆர்வத்திற்கு நன்றி, ஓரளவேனும் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை,வருகைக்கு நன்றி.

      Delete
  9. அப்பர் சுந்தரர் சம்பந்தர் அருள் மிகு மாணிக்கவாசகர் என்று என் அருமை தமிழ் ஆசரியர் அன்று சொல்லி கொடுத்ததை நினைவு படுத்திவிட்டீர்கள் . நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நூல் ஆசிரியரே,,,,,
      பயணம் எல்லாம் நல்லபடியாக முடிந்ததா? மகிழ்ச்சி, தாங்கள் வருவதற்குள் தங்கள் நூல் வாங்கி வாசித்துவிடத்தான் நினைத்தேன், வரவேண்டிய இடத்தில் இருந்து இன்னும் வந்து சேரவில்லை,,,
      சரி,,,,,,
      இவர்களுக்கும் நான் சொன்னதற்கும் என்ன ,,,,,,,,,
      ஒஒஒ தங்களுக்கு தமிழ் ஞாபகம் வந்ததா? தங்கள் நண்பர் என் பதிவைப் படிப்பதில்லைப் போலும், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      நன்றி.

      Delete
  10. உங்களுக்கு முனைவர் பட்டம் வாங்கிக்கொடுத்த(?) அரங்கேற்றுக் காதைக்காகக் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  11. வாருங்கள் அய்யா,
    அதெப்படி அவ்வளவு சரியாக என் முனைவர் பட்டம் அதில் தான் என்று கண்டுகொண்டீர்கள்,,,,,,,
    வருகைக்கு நன்றி ஐயா,,,,,,,

    ReplyDelete
  12. Replies
    1. வாருங்கள் அய்யா,
      மாற்றம் செய்தேன், தங்கள் வருகைக்கும் தவறினைச் சுட்டியமைக்கும் என் நன்றிகள்,,,

      Delete
  13. அருமையான தொடக்கம். அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிம்மா,

      Delete
  14. "கடுகு அளவான அரங்கேற்று காதையை மட்டும் விலக்கி வைத்ததன் காரணம் ஏன்?
    கடுகு சிறுத்தாலும் காரம் மிகுதி, அந்தச் சின்னஞ்சிறு காதையைத் தெளிவுற நடத்தும், தமிழிசை, தமிழ்நாடகப் புலமை நிறைந்த பேராசிரியர்கள் அன்றைக்கு யாரும் இல்லை, என்பது பாடத்திட்டக் குழுவினரின் கணிப்பாக இருந்தாலும்,"
    இன்று அதை எடுத்து இயம்புவதற்கு சுயம்பாக எங்களுக்கு ,
    சகோதரி இருக்கிறார் என்று எண்ணும் போது தமிழால் பெருமைக் கொள்கிறோம்.
    நன்றி சகோதரி!
    தொடருங்கள்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  15. வாருங்கள் வணக்கம்,
    சுயம்புவாக எல்லாம் அல்ல,,,
    நான் தேடியதைத் தொகுத்ததை இங்கு சொல்லலாம் என்று,
    மேலும் இங்கு நிறைய அறிஞர்கள் இது குறித்து எனக்கு மேலும் பல தகவல்கள் அளிக்க கூடும் என்ற ஆசைத் தான் காரணம்.
    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  16. காத்திருக்கிறேன் நானும்..

    ReplyDelete
  17. வருகைக்கு நன்றி சகோ,

    ReplyDelete
  18. அருமையான ஆரம்பம்.
    நானும் தொடரக் காத்திருக்கின்றேன்.

    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  19. மகிழ்ச்சி சகோ,
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  20. அருமை! அடுத்த பதிவிற்கு காத்திருக்கின்றோம் அறிந்து கொள்ள....

    ReplyDelete
    Replies
    1. காத்திருங்கள், வருகைக்கு நன்றி.

      Delete