வாழ்த்துகள்
நம் மக்கள் மேன்மை அடையும் போது நாம் அடையும் மகிழ்ச்சி எல்லையற்றது. ஆம் மாணவர்கள் சாதிக்கும்
போது அவர்களைக் காட்டிலும் நாம் ஆசிரியர்கள் மகிழ்வது இயல்பு தானே. பொருந்தொற்றிற்கு
பிறகு கல்வியின் நிலை மனம் ஏற்புடையதாக இல்லை. அந்த நிலையில் சில மாணவர்கள் தம் நிலை
உணர்ந்து செயல்படும் போது சாதிக்கிறார்கள்.
எங்கள் கல்லூரியின் மாணவி
மா. சக்திப்பிரியா பத்திரிக்கைத் துறையில் தன் பயணத்தைத் தொடர முயன்று, பல நேர்காணல்
எதிர்நோக்கி வெற்றிபெற்றார். இன்று விகடன் மாணவ பத்திரிக்கையாளர். அவரின் முதல் கட்டுரை
இல்லை தகவல் தொகுப்பு சக்திவிகடனில் வெளிவந்துள்ளது. வாழ்த்துகள் சக்தி
இந்த வெற்றியை கல்லூரி செயலர் திரு இரா.சுந்தரவதனம் கல்லூரி முதல்வர் முனவர் இரா.இராசாமணி, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி.கண்மணி துறைப்பேராசிரியர்கள் அனைவரும் வாழ்த்தினார்கள்.
கூடுதல் சிறப்பு விகடன் குழுமத்தின் முதன்மைச் செய்திளார் தஞ்சைப்பகுதி ஆசிரியர் குணசீலன் அவர்கள் வந்து வாழ்த்தியது. நன்றி குணசீலன் ஐயா,,,
மகிழ்ச்சி
ReplyDeleteநன்றிங்க அம்மா....❤️🩹 உங்களின் பாராட்டும் , வாழ்த்தும் என்னை மேன்மேலும் வளர வைக்கும்...🙏
ReplyDelete