Sunday 31 December 2023

 

சட்ட நூலாய் தொல்காப்பியம்

              தொல்காப்பிய ஆசான் , தோழிக்கும் தலைவிக்குமுள்ளஉறவைப் பொருளியலில் பொருள் நிலையோடு ஒப்பிட்டுப்பேசும்  பகுதியே அது. ஆம் அங்கு தான் ஒரு மனிதன் தன்னுடைய சொத்துக்கள் என்று எவ்வவற்றை  உரிமைக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.

இதோ அப்பாடல்

            தாயத்தின் அடையா ஈயச் செல்லா

            வினைவயின் தங்கா வீற்றுக் கொளப்படா

            எம்மென வருஉம் கிழமைத் தோற்றம்

            அல்ல வாயினும் புல்லுவ வுளவே

                                                                   (தொல்.பொருளியல்.நூற்பா 24)

ஒருவர் ஒரு பொருளைத் தனது என்று உரிமை கொண்டாடுவதற்கு நான்கு வழித்தடங்களே உள்ளன.

1.          தம் முதாதையர்களால் வாரிசு அடிப்பமையில் கிடைக்கும் பொருள்.

2.        கொடைப்பொருளாக அல்லது அன்பளிப்பாக பெறப்படும் பொருள்.

3.        தம் நேரிய உழைப்பால் கிடைத்த பொருள்

4.        போட்டிகளில் ஈடுபட்டோ வழக்குகளில் ஈடுபட்டோ வெற்றியால் தமக்கு கிடைத்த பொருள்

என இந்நான்கு வழிகளில் வரும் பொருள்களே ஒருவரின் உரிமைப் பொருள்கள். பிற வழிகளில் கிடைக்கும் எந்த ஒரு பொருளையும் தனது என்று ஒருவர் கூற அவருக்கு உரிமையில்லை

இது சரி தானே

நம் இலக்கியங்கள் நமக்கு அனைத்தையும் கொடுத்துள்ளன. நாம் தான் வரப்புச் சண்டை போட்டு, வயல் விற்று வழக்கு நடத்துகிறோம்.

சரிங்க

இப்பாடல் இதனை மட்டும் சொல்லவில்லை, தலைவியின் மேல்  தனக்குள்ள உரிமையைப் தோழி கூறுவதாக விளக்க வந்த பாடல்.

                                                                  நன்றி

அனைவருக்கும்

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

 


3 comments:

  1. வணக்கம் சகோதரி

    நலமா? தொல்காப்பிய பாடலும், அதன் விளக்கமும் அருமையாக உள்ளது. படித்து பயனுற்றேன். தங்களின் புத்தாண்டு வாழ்த்துக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் என் அன்பான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. பாடல் விளக்கம் சிறப்பு சகோ.

    இனிய 2024 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  3. நாம் தான் வரப்புச் சண்டை போட்டு, வயல் விற்று வழக்கு நடத்துகிறோம் - சிறப்பு.

    ReplyDelete