Friday 8 January 2016

எண்ணங்கள் தெளித்த வண்ணக்கோலங்கள்

 

எண்ணங்கள் தெளித்த 

வண்ணக்கோலங்கள்


                 

வண்ணமயிலே 
ஏன் இந்த அழகிய நடனம், 
இருட்டை கார்மேகம் என்று 
நினைத்தாயா
இல்லையா 
பின்னே
மகியின் கை வண்ணத்தில்
வாசலில் துளிர்த்ததனால்
வந்த  துள்ளல் நடனமே,,,,,,,
                                                                                           (இது கொஞ்சம் ஓவரா இல்ல)


வண்ணக் கலவையில் 
வரைந்த  
வண்ணமலர்களே
வாசல் நிறைக்கும் 
அழகு கோடுகளே
வசந்தம் வளரட்டும் 
நாளும்,,,,,,,,,
                                                                                                    


இழைகளுக்குள் கண்சிமிட்டுவது
வானத்து நட்சத்திரங்கள் தூவிய 
வெண்மலர்கள்


கபிலன் 
சொன்ன பூக்களையும் 
விஞ்சிவிடுகின்றன 
கோலத்தில் காணகிடக்கும்
 பூக்களின் வடிவங்கள்
எந்த கவிஞன் 
கவிகள் சொல்வான் 
இவ்வடிவங்களுக்குரிய 
பெயர்களைத் தன் கவியில்,,,,,,,

       

எண்ணங்கள் தெளித்த 
வண்ணக்கோலங்கள் 
விடியலின் இருட்டில்
விழித்த கோலம்
புத்தாண்டில்,,,,,,,,

 

அழியப்போவது தெரிந்தும் 
அழகாய் சிரிக்கிறாய் 
ஒஒஒ 
நீயும் 
விட்டில் பூச்சா



சிதறா கவனத்தில் 
சிதறும் வெண்துளிகள் 
கோல மழையாய்
என் வீட்டு வாசலில்,,,,,,,

                                                                      தொடரும்,,,,,,,,,,



36 comments:

  1. கோலங்கள் அத்தனையும் அழகோ அழகு ! ஒவ்வொரு கோலத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வாசகங்களோ அதைவிட அழகு.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வணக்கம்,

      கோலங்களையும் வாசகங்களையும் வாழ்த்தியதற்கு நன்றிகள்.

      Delete
  2. //மகியின் கை வண்ணத்தில், வாசலில் துளிர்த்ததனால், வந்த துள்ளல் நடனமே.......//

    கரெக்டூஊஊஊஊ. ரொம்பக் கரெக்டூஊஊஊஊ.

    //(இது கொஞ்சம் ஓவரா இல்ல)//

    இல்லை. ஓவரா இல்லை. அண்டராகத்தான் உள்ளது. :)

    அதாவது கோலத்திற்குக் கீழ் அண்டராக அடக்கமாகத்தான் உள்ளது. :)

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கரெக்டா,,,,,

      அடக்கமாக தான் இருக்கா

      நன்றிங்கோ,,,,

      Delete
  3. கோலங்களும்,அதற்குப் பொருத்தமான கவிதைகளும் சூப்பர் மேடம்!!!!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் சூப்பருக்கும் நன்றிகள் மா

      Delete
  4. கோலக்கவிதை அருமை சகோ வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. கோலக்கவிதை ------------ நன்றி நன்றி சகோ

      Delete
  5. ஆஹா...வண்ணக் கோலங்களும்...அதற்கேற்ற கவித்துளிகளும் அழகாய் இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. கவித்துளிகள் அழகாய் இருக்கிறதா? வருகைக்கு நன்றிமா

      Delete
  6. வணக்கம் பேராசிரியரே!

    கோலமும் கவியும் கண்டபின்,
    “இளங்கொடி நங்கை தன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்தாள் ” என்னத் தோன்றுகிறது.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. “வண்ணச் சீரடி” எனலும் ஒன்று.

      Delete
    2. வாருங்கள் ஐயா,

      என்ன பதிவு கோலம் ? என்று ? எனப் பயந்தேன் ,,,,

      வண்ணச்சீறடி சீரடி ம்ம்

      நன்றி நன்றி ஐயா

      Delete
  7. ஆஹா... கோலங்கள் அருமை சகோதரி...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் மனையாள் கோலங்கள் இதைவிட அழகு சகோ,,

      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்

      Delete
  8. வண்ணங்கள் கண்ணைப் பறித்து உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி ஸ்ரீ

      Delete
  9. அழகில் கரைந்தேன்

    ReplyDelete
    Replies
    1. கரைந்தமைக்கு நன்றிகள் ஐயா

      Delete
  10. Replies
    1. நன்றி நன்றி டிடி சார்

      Delete
  11. கோலப்போட்டியில் உங்களுத்தான் முதல் பரிசு......முதல் கோலத்தி்ல்வண்ணமயில்கள் கால்கள் இல்லாமல் ஆடுவது தங்கள் கோலத்தில்தான்......

    ReplyDelete
    Replies
    1. இதற்கு பெயர் தான் வஞ்சபுகழ்ந்ச்சியோ?,,

      கால்கள் அதன் உடலுக்குள் மறைந்து இருக்குங்க வலிப்போக்கரே,,

      Delete
  12. கோலங்கள் அழகோ அழகு..... கவிதைகளும் தான்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க வெங்கட் சார்

      Delete
  13. கோலங்களும் அதற்கேற்ற கவிகளும் அருமை அருமை !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மா

      Delete
  14. செம கோலங்கள். அழகுனா அழகு!! அதற்கான வரிகளையும் ரசித்தோம் சகோ....

    ReplyDelete
  15. அனைத்து கோலங்களும் ரொம்ப அழகு.

    பள்ளி நாட்களில் கோலங்களை பார்த்து ரசித்தது நினைவு வருகிறது.

    ReplyDelete
  16. கோலங்களும் அழகு..
    இந்தப் பதிவும் அழகு..

    ஆனால் -
    எனது தகவல் பலகையில் வரவில்லையே!..
    எப்படியோ கண்டுபிடித்து வந்து விட்டேன்!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. ஒஒஒ ஒரு வேளை என் கோலமயில்கள் தகவல் பலகையை மறைத்துவிட்டதோ,,
      வருகைக்கு நன்றிகள்

      Delete
  17. மயில்களை சிறகு இல்லாமல் கூட ஆட சொல்லலாம் ஆனால் கால்கள் இல்லாமல் எப்படி. ஒ... கோல மாவு தீர்ந்து விட்டதா? இதில துள்ளல் நடனம் வேறு.

    கவிதைகள் கோலங்களுக்கான மகுடமாக திகழ்கின்றது.

    வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete
    Replies
    1. கால்கள் இல்லையா, நன்றாக பாருங்கள் அரசே, அவை அதன் உடலுக்குள் அமர்ந்த நிலையில் மயில் உள்ளன.

      கோலமாவு தீர்ந்து போனது?????

      பின்னே அதன் துள்ளல் போஸ் பிறகு பதிகிறேன்.

      அப்பாடா பாராட்டா??

      வருகைக்கு நன்றிகள் அரசே

      Delete
    2. மயில்கள் உள்ளன.

      Delete