Thursday 26 November 2015

நான் ஏற்றிய தீபங்கள்,,,,,

நான் ஏற்றிய தீபங்கள்,,,,,

                              


                                             தீப திருவிழாவிற்கு எத்தனையோ காரணங்கள் சொல்வார்கள்.

ஆனால் தீபம்  இருள் போக்கும் சக்தியல்லவா????.

எனக்கு கார்த்திகை மாதம் இந்த நாள் மிகவும் பிடிக்கும். காரணம் இது தான். கோலம் போடத் தான்.

இன்றைக்கு ஆரம்பித்து அடுத்த மாதம் மார்கழி முழுவதும் பெரிது பெரிதாக கோலம் போட மனம் அலையும்.

        ஆனால் மழை வந்தால் போட முடியாதல்லவா,,, மனம் சோர்ந்து போகும்.

காகிதத்தில் போட்ட கோலம் என்னைப் பார்த்து கெஞ்சும். என்னை எப்போ

கலர் கொடுத்து அழகுப் படுத்துவாய் என்று,,,,,,

சரிங்க வீட்டின் வெளியில் நிறைய தீபம் ஏற்றி, எட்டி நின்று பார்க்கும் போது,,,

அதன் அழகே தனி தாங்க,,,,



 இவுங்க தீபம் ஏற்ற உதவி செய்தார்கள். விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தார்கள்.


இதோ  நான் ஏற்றிய தீபங்கள்,,,,,
       


                                                   
                         



                                 
 இது உங்களுக்கு,,,,,,,,


                                           கார்த்திகை பொரி படம் க்கான பட முடிவு




அனைவருக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

39 comments:

  1. புகைப்படங்கள் அழகு கடைசியில் எங்களுக்கு பொரி உருண்டையா ?
    தங்களுக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ,
      அதெப்படி சகோ இப்ப தான் ,,, இன்னும் சரிபார்க்கவேயில்ல,
      வாங்க வாங்க பொரி உருண்டை எடுத்துக்கோங்க, நல்லா இருக்கா?
      வருகைக்கு நன்றி சகோ,,,

      Delete
  2. உங்கள் வீட்டு கோலமும், நீங்கள் ஏற்றிய தீப விளக்குகளும் மிக அழகு மகேஸ்வரி. பொரி உருண்டை ஒன்று எடுத்துக்கொண்டேன். தங்களுக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
    Replies
    1. பொரி உருண்டை நல்லா இருந்ததாமா?
      வாழ்த்துக்கள்மா,
      வருகைக்கு நன்றி.

      Delete
  3. இதை விட சந்தோசம் ஏது...?

    தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. ஆம் டிடி சார். வருகைக்கு நன்றிப் பா

      Delete
  4. கார்த்திகைத் திருவிழா நிகழ்வினை ரசித்தோம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  5. பேராசிரியர் அவர்களுக்கு,

    இருள் போக்கும் ஒளி விளக்குகளை பதிவில் ஏற்றி வெளிச்சம் வீசும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    கோலங்களும் அவை காட்டும் ஜாலங்களும் அருமை.

    உங்கள் குழந்தை அகல் பூசும் "மஞ்சளும்" தந்தையுடன் பட்டாசு கொளுத்தி செய்யும் "கொஞ்சலும்" பார்க்க ஆனந்தம்.

    புகை படத்தில் உங்களின் பிள்ளைகள், கணவரை பார்த்தேன், உங்களை காணவில்லை, ஒ...... அந்த (குடும்ப) குத்து விளக்கு நீங்கள்தானோ?

    உங்கள் குடும்பத்தில் என்றென்றும் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துக்கள்.

    பொறி உருண்டை எனக்கு முன்னால் வந்த கில்லரே மொத்தத்தையும் "வாயில்" போட்டுகொண்டதால், எனக்கு வெறும் காட்சி மட்டும்தான். பர"வாயில்லை"

    நன்றி.

    கோ

    ReplyDelete
    Replies
    1. நண்பரே //பொரிக்கு முந்து பொறணிக்கு பிந்து// அப்படினு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க....

      Delete
    2. நண்பரே, பரவாயில்லை நீங்கள் தானே சாப்பிட்டீர்கள், நல்லா போட்டு மெல்லுங்க சுவை எப்படி இருக்குனாவது சொல்லுங்க,

      கோ

      Delete
    3. வாருங்கள் அரசே,

      தங்களுக்கும் வாழ்த்துக்கள்,

      கோலம் நான் மிகவும் விரும்பிப் போடுவது, என் கவலைப் போக்குவது,,,

      ம்ம் ஆனந்தம் தான் பிள்ளைகளுக்கு,,,,

      விளக்கு,,,,,,, நன்றி,

      பொரி உருண்டைக் கிடைக்கலையா?

      வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
    4. புது புது பழமொழி உருவாகுது சகோ,
      மீள் வருகைக்கு நன்றி.

      Delete
  6. பொரி உருண்டை மட்டும் தானா!..

    வாழ்க நலம்..
    பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!..

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் தான் இன்னும் பயணத்திலே இருக்கிறீர்கள் போல் இருக்கே,

      ஜெய்குமார் சார் பார்க்க வரும் போது தங்களைச் சந்திக்க முயல்கிறேன்.

      வருகைக்கும் வாழ்த்திற்கும் அன்பின் நன்றிகள்.

      Delete
  7. அழகான படங்களுடன் உங்கள் தீபங்கள்! குட்டிப்பாப்பாவிற்கு எங்கள் வாழ்த்துகள்.

    லேட்டு போல பொரி உருண்டை எல்லாம் தீர்ந்துவிட்டது போல ...வந்தவங்களுக்கு கூட பிச்சு பிச்சுதான் சாப்பிட்டாங்கனு சொல்றாங்க சகோ..ஹஹஹ்

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பிச்சி தின்னக்கூட கொடுத்து வைக்கலங்க.

      Delete
    2. அச்சசோ நான் எப்பவும் போதும் போதும் எனும் அளவுக்கு தானே உணவுகள் வைப்பேன்.

      இப்போ இப்படியாகி விட்டதே,,,,,,,,

      சரி சரி நேரில் நிறைய சாப்பிடுங்கள்.
      வருகைக்கு நன்றி.

      Delete
    3. அரசருக்கு மரியாதையாக நேரில் சாமரம் வீசப்படும்,,,
      வருகைக்கு நன்றி அரசே,

      Delete
  8. தாமதமாக வந்ததால் எனக்கு பொரி உருண்டை கிடைக்கவில்லை. நிகழ்ச்சி நிரல்களை படம் பிடித்ததால் .குடும்ப குத்துவிளக்கு காட்சிப் படத்தில் இடம்பெறவில்லையோ......???

    ReplyDelete
    Replies
    1. வலிப்போக்கரே உங்களுக்குமா?

      ஆம் நான் படம் எடுத்ததால் அதில் இல்லை,,

      வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  9. தாமதமாக வந்ததால் எனக்கு பொரி உருண்டை கிடைக்கவில்லை. நிகழ்ச்சி நிரல்களை படம் பிடித்ததால் .குடும்ப குத்துவிளக்கு காட்சிப் படத்தில் இடம்பெறவில்லையோ......???

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  10. கார்த்திகை தீபமும் படங்களும் கோலமும் அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ,
      கோலம் நல்லா இருந்ததா? சகோ, அடுத்த மாதம் முழுக்க கோலம் தான் என் பதிவுகளில்.
      வருகைக்கு நன்றி சகோ.

      Delete
    2. எங்க வீட்டிலும் கோலம் போடுவதென்றால் அலாதிப் பிரியம்...
      மார்கழி மாதம் நள்ளிரவே எழுந்து கோலம் போட ஆரம்பித்துவிடுவார்.
      தினமும் அதிகாலை நான் கண்விழிப்பது என்னவோ கோலம் போட்டோவில்தான் (தினமும் மகள் எடுத்து அனுப்பிவிடுவார்)

      Delete
    3. வாருங்கள் சகோ,
      தங்கள் அன்பின் மீள் வருகைக்கு நன்றிகள்,

      அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள், அவளும் கற்றுக்கொள்ளட்டும்.

      நல்ல பழக்கம் தான். நன்றி சகோ,

      Delete
  11. வணக்கம் பேராசிரியரே !

    இனிய கார்த்திகைத் தீப நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் உரித்தாகட்டும் ! வாழ்க வளமுடன்
    கோலங்களுடன் கொள்ளை அழகுள்ள தேவதைகளும் உங்கள் செல்வங்களா அழகாய் இருக்காங்க வாழ்த்துக்கள் !
    வாழட்டும் தலைமுறை !

    நாங்கள் கோலம் போட்டால்
    மேகங்களுக்குள் சண்டைகள் வருவதில்லை
    ஆதலால் மழைகளுக்கு அன்று மணநாள் விடுமுறை !
    எப்புடி ........!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சீர் ஆள்பவரே,

      வாழ்த்துக்கள், ஆம் என் தேவதைதான்.

      உண்மைதான் தங்கள் கவி கோலம் கலைக்க இயற்கை விரும்புமா? என் அங்கோலத்தை விரும்பாததால்,,,,,,,

      தங்கள் கவிதைகள் எப்படி என்று சொல்லவும் தகுதி வேண்டுமல்வா?

      வருகைக்கு நன்றிகள், வாழ்த்துக்கள் என்றும்,

      Delete
  12. தீபத்திருநாள் வாழ்த்துகள். பொரி உருண்டை எடுத்துக் கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பொரி உருண்டையை எடுத்துக்கொண்டதற்கும் நன்றி ஸ்ரீ,

      Delete
  13. அருமை
    படங்கள் அழகு
    தீபத் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் சகோ,
      வருகைக்கு நன்றி.

      Delete
  14. கோலமும், குட்டிப் பாப்பாவும் கொள்ளை அழகு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிமா,,,

      Delete
  15. வணக்கம் பேராசிரியரே!

    ஆசிரியர் என்பவர்களே ஒரு தீபம்தான்.

    நீங்களோ பேராசிரியர்...!!!!

    தீப ஒளி குறித்துச் சொல்லவா வேண்டும் :)

    இனிய தீபங்களுடன் தங்கள் குழந்தை தீபங்களும் அழகு.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா,
      நலமா, தங்கள் வருகை உவப்பளிக்கிறது.
      வருகைக்கு நன்றிகள் ஐயா

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. மிக அழகாக ஒளிரும் பதிவு. படங்கள் எல்லாமே ஜோர் ஜோர். இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள். கடைசி படத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete