Wednesday 18 November 2015

பார்த்ததும் தைத்தது

பார்த்ததும் தைத்தது 
 இதயத்தில் அம்பு விட்ட படம் க்கான பட முடிவு 
  அழகிய மாலைப் பொழுது, இளங்காற்று தழுவிச்செல்லும் வேளையிலும் தன் மேல் எழும் வெப்பம் தாங்காமல் சோகமே உருவாய் அமர்ந்து இருக்கும் நண்பனிடம் வந்தான் அவன்.

என்னடா, இப்படி இருக்கின்றாய் என்று வினவ,

 எல்லாம் அவளால் தான்டா என்று புலம்புகின்றான்.

அய்யோடா இங்கேயும் காதல் தோல்வி பற்றிய பதிவா என யாரும் கவலைப் பட வேண்டாம்.

இது தோல்வியால் வந்த சோகம் இல்லிங்க,

காதல் படுத்தும் இன்ப வேதனை. பெண்ணைப் பார்த்துக் காதல் பசலைப் படர்ந்துக் கிடக்கிறாள் என பல கவிஞர்கள் சங்க இலக்கியத்தில் எழுதியதுண்டு, அதே இலக்கியத்தில் ஆணின் பசலையும் பேசப்பட்டு இருக்கின்றது.

மனதில் காதல் தோன்றியதுமே, அதை பிறர் அறியாமல் மறைக்க வேண்டும் என்று தான் தோன்றுமோ,,,,,,,

மறக்கவும் மறைக்கவும் முடியாத ஒரு நிலை.

அவளின் நினைவுகள் அவனுக்குள் ஏற்படுத்திய நெருப்பு கங்குகள் தகிக்கின்றன. அவன் அவள் நினைவில் உருகிக் கொண்டிருக்கிறான்.

தலைவியின் நினைவாலேயே வாடும் தலைவனின் உடலில் நிறைய மாற்றங்கள் அதனைக் கண்டு என்ன ஏது? என்று வினவுகிறான் பாங்கன். அதற்குத் தலைவன் சொல்கிறான்..

இனிய மொழியினையும், பருத்த மெல்லிய தோள்களையும் உடைய பெண்ணொருத்திதான் எனது இந்த நிலைக்குக் காரணம்.

அவள் பெரிய மலைப் பகுதியில் குருவிகளை ஓட்டுபவள்..
குளிர்ச்சியைத் தருகின்ற பெரிய கண்களைக் கொண்டவள்..

அவளை நான் காண்கின்றபோது அவள் கண்கள் அழகான தாமரை மலர் போலக் காட்சியளிக்கும்!

அதே நேரம் அவள் என்னைக் காண்கின்ற போது அவள்கண்கள் கொடிய அம்பைப் போலவே என்னைத் தாக்கி வருத்தும்.

அதனால் மலர் போன்ற கண்களால் அம்பு தைத்தது போன்ற நோயினை அவள் எனக்குத் தந்தாள்
.
அது தான் என் உடலில் இவ்வளவு மாற்றம் என்கிறான் தலைவன்.

இப்படி ஒரு குறுந்தொகைப் பாடல்ங்க,,,,,,
அப்பாடல் இதோ,
 

பூவொத் தலமருந் தகைய வேவொத்
தெல்லாரு மறிய நோய்செய் தனவே
தேமொழித் திரண்ட மென்றோண் மாமலைப்
பரீஇ வித்திய வேனற்
குரீஇ யோப்புவான் பெருமழைக் கண்ணே
                                      பாடல் 72 
                                      ஆசிரியர் மள்ளனார்
                                      குறுந்தொகை
( தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினவிய பாங்கற்கு உரைத்தது.)
 

தேமொழி                    -  இனிய மொழி

திரண்ட மெல் தோள்         - பருத்த மெல்லிய தோளினை உடைய

பரீஇ வித்திய ஏனல்          - பருத்தியை இடையிலே விதைத்த
                               தினைமுதிர்ந்த புனத்தின் கன் 

குரீஇ ஒப்புவாள்              - அத்தினையை உண்ணவரும் 
                               குருவியினங்களை ஓட்டுகின்றவளது 

பெரு மழைக் கண்             - பெரிய குளிர்ச்சியையுடைய கண்கள்

பூ ஒத்து அலமலரும் தகைய   - பூ வினை அழகில் ஒத்துச் சுழலும் 
                                 தன்மையை உடையன 

ஏ ஒத்து                        - ஆயினும் கொடிய தொழில்
                                   அம்பினை  ஒத்து

எல்லோரும் அறிய             - நின்னைப் போன்ற யாவரும் 
                                 என்னுடைய வேறுபாட்டை அறியும்படி

நோய் செய்தன                 - எனக்குத் துன்பத்தை உண்டாக்கின.

  தலைவியின் நினைவுகளோடு மயங்கிக் கிடந்த தலைமகன் உடலில் காணப்பட்ட வேறுபாடுகளைப் பார்த்து, இவை எதனால் ஏற்பட்டன எனக் கேட்ட பாங்கனுக்கு தலைவன் சொல்லிய பதில் இது என மள்ளனார் விளக்குகிறார்.

இந்த பாடலில் இருந்து தான் 
இதயத்தில் அம்பு விட்டு இருப்பாங்களோ நம்மவர்கள்


39 comments:

  1. ஆண்பசலை!

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகைக்கு நன்றி ஸ்ரீ,

      Delete
  2. அருமை சகோ ஏதோ காதல் தோல்வி கதைபோல தொடங்கி வழக்கம் போல தங்களது பாணிக்கு திருப்பியது நன்று தங்களது கணவர் நலம் பெற்று விட்டாரா ?

    தொடக்க வரியை கவனிக்கவும் தவறாக கருத வேண்டாம் இதோ -----மாலைப் பொழுது

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ,
      அவர் நலமுடன் உள்ளார், தங்களது அன்பிற்கு நன்றி சகோ,

      தவறு என சுட்டும் பட்சத்தில் நான் என்றும் ஏற்றுக்கொள்வேன் சகோ, கவலை வேண்டாம்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ,

      Delete
  3. தங்களின் பதிவு எனக்கு நண்பர் ஊமைக்கனவுகள் வலைப்பூவை நினைவுபடுத்தியது. தமிழில் எவ்வளவு செழுமையான பாடல்கள் இருக்கின்றன என்று வியப்பை ஏற்படுத்தியது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ,

      நான் இன்னும் அவர் அளவுக்கொல்லாம் வரல சகோ,

      ஆம் நிறைய உள்ளன. பார்ப்போம்.

      தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சகோ,

      Delete
  4. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
    தானைக்கொண் டன்னது உடைத்து.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்,, நல்லா இருக்கு, பின்னால் குறள் கொடுக்கலாம் என நினைத்தேன்,,,,
      வருகைக்கு நன்றி டிடி சார்....

      Delete
  5. வணக்கம் பேராசிரியரே!

    பூபோன்று அலமருகின்ற அந்தக் கண்களைப் பார்த்து மயங்கியவனுக்கு அவை அவன்மேல் பெய்திருந்த அம்புகளை உணரக் கூடாததில் வியப்பில்லை.

    அந்தக் காயங்களுக்காக வருந்துபவனா அவன்?

    எல்லாரும் அறிய இப்படிச் செய்துவிட்டனவே இவள் கண்கள் என்பதுதான் அவனது ஆதங்கத்திற்குக் காரணமாய் இருக்கும்!

    குறுந்தொகைப் பாடல் எண்ணையும் தந்தால் என்போன்ற வாழைப்பழச் சோம்பேறிகளுக்குப் பேருதவியாய் இருக்கும்.

    தங்களிப்பதிவு பார்ப்போரைத் தைக்கும்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. யாரப்பா அது வாழைப்பழச் சோம்பேறி? ஹஹஹ் விஜு சகோ இது கொஞ்சம் ஓவராக இல்லை?!!!!! தன்னடக்கம் தன்னடக்கம்??!!

      Delete
    2. வணக்கம் ஐயா,
      தங்கள் அளவுக்கு எனக்குத் தெரியாது,,,

      பாடல் எண் சுட்டாத தவறைச் சுட்டியமைக்கு நன்றி ஐயா,

      அது தங்களுக்கு ,,,,,,,,,,, தாங்கள்,,,,,,,,

      சங்க இலக்கியத்தில் தங்களுக்கு தெரியாத பாடல் எண் ம்ம்,,,,

      நம்பிட்டேன்.

      ,,,,,,,,,,தங்களிப்பதிவு பார்ப்போரைத் தைக்கும்.,,,,,,,,,,,,,,

      இதில் ஏதோ உள்குத்து போல் உள்ளது.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா,

      Delete
    3. கொஞ்சம் இல்ல சகோ, நிறைய,,,,,,

      தாங்கள் சொன்னால் சரி தான்,,,,
      நன்றி சகோ,

      Delete
  6. வணக்கம்
    சொல்லிய கருத்தும் பாடலுக்கான விளக்கமும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ,

      Delete
  7. வனத்தில் குருவி ஓட்டுகின்றவளால் -
    மனத்தில் அருவி போல் காதல்!..

    அடடா..

    காதல் என்ற கண்களும் அழகு..
    காதல் கொண்ட கவிதையும் அழகு!..

    ReplyDelete
    Replies
    1. ம்ம்,,,, சங்கப் பாடல்கள் தங்களுக்கு முழுமைத் தான்,,,
      சரி என் பதிவு பற்றி சொல்ல,,,,,
      நல்லோர் ஊருக்கு வந்ததால் இவ்வளவு மழையோ,,,
      வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல.

      Delete
    2. அடடா.. இப்படியெல்லாம் அர்த்தம் இருக்கின்றதா!..

      Delete
    3. ஆம்....... தங்கள் மீள் வருகைக்கு நன்றிகள்.

      Delete
  8. சங்கப்பாடல் உங்கள் கை வண்ணத்தில் தங்கப்பாடலாக ஜொலிக்கின்றது.

    எல்லோரும் நலம் தானே பேராசிரியரே?

    கோ

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அரசே,

      அனைவரும் நலம் அரசே,

      தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

      Delete
  9. அட! ஆண் பசலை நோய்?!! ம்ம்ம் நீங்கள் சொல்லுவது போல் காதல் என்றாலே இதயங்களுக்கு ஒரு அம்பு விடுவது போல் குறிகள் வந்தது இதிலிருந்துதானோ என்று தோன்றுகின்றது..இருக்கலாம்...எவ்வளவு அழகழகான பாடல்கள் இருக்கின்றன! அருமை..நாங்களும் அறிய முடிகின்றதே.

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ,

      ஒரு வேளை சங்க இலக்கியம் படித்த நம் சீனியர்ஸ் இப்படி முதலிலே அம்பு விட்டிருப்பார்களோ,,,,,,,

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

      Delete
  10. அம்பு
    இப்பாடலில் இருந்து தோன்றியதுதானா
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம் சகோ,

      வருகைக்கு நன்றி சகோ,

      Delete
  11. அன்றைக்கு அம்பு விட்டு கொன்றார்கள். இன்று கத்தி , அறுவால்களால் கொல்கிறார்கள்...........

    ReplyDelete
    Replies
    1. அது காதல்,,,,,
      இது வெறிச் செயல் அல்லவா,,,,,,,,
      வருகைக்கு நன்றி நண்பரே

      Delete
  12. குறுங்தொகைப்பாட்டு பற்றி ஒரு பார்வை...ஆண் பசலை குறித்த எழுத்து...
    அபூர்வமான பதிவு...அழகு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிகள்.

      Delete
  13. சிறப்பான பாடல்! அருமையான விளக்கம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தளீர்,,,,,,,,,

      Delete
  14. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  15. தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

    முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... ...? நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே

      Delete
  16. சங்கப் பாடலை அழகான விளக்கத்துடன் அருமையாச் சொல்லியிருக்கிறீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ,

      Delete